சனி, 20 மார்ச், 2010

முல்லைப் பெரியாறு பிரச்னை: உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்: கருணாநிதி



சென்னை, மார்ச் 19: ""முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று முதல்வர் கருணாநிதி உறுதிபடத் தெரிவித்தார்.சென்னையில் திமுக இளைஞர் அணியின் தலைமை அலுவலகமான அன்பகத்தில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்துக்குப் பின், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்:முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசு இரண்டு மாத கால அவகாசம் கேட்டுள்ளது. இதைப் பற்றி நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் சொல்லப்படவில்லையே?மத்திய அரசின் மீது குற்றச்சாட்டு கூற வேண்டுமென்று எதிர்பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டு இருக்கிறீர்கள். அது தேவையில்லாதது. முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னைதான் நம்முடைய முக்கியமான பிரச்னை. அதிலே, நம்முடைய உரிமையை விட்டுக் கொடுத்து, அந்தப் பகுதியிலே உள்ள விவசாயிகளுக்கு எதிர்காலத்தில் வேதனைக்கு வித்திடக் கூடாது என்பது தான் முக்கியம். இது தான் என்னுடைய கருத்து.புதிய சட்டப் பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து வந்திருந்தார்களே. அதைப் பற்றி?ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் நடப்பதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, உச்ச நீதிமன்றத்திலே ஜெயலலிதா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், நீதிமன்றத்தில் கூறப்பட்ட தீர்ப்பில் ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனுவினை தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்து இருப்பார்கள். அதைத் தெரிந்து கொண்டு, கறுப்புச் சட்டை அணிந்து கொண்டு வந்திருக்கிறார்கள் போலும்.பென்னாகரம் இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு மட்டும் செல்வது ஏன்?பிரசாரத்துக்காக நான் வரவில்லையே என பென்னாகரம் வாக்காளர்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காகச் செல்கிறேன்.பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக பாமக கூறியிருக்கிறதே?அவர்களுக்கு எவ்வளவோ ஏமாற்றங்கள்! அதற்கு நான் என்ன செய்ய முடியும்?
கருத்துக்கள்

உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம் என முதலவர் பேசினாலே உரிமைகள் பறிபோகின்றன என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை. வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 3:17:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக