ஞாயிறு, 14 மார்ச், 2010

பகை மூட்டும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி குறித்து கருணாநிதி பெருமிதம்



சென்னை, மார்ச் 13: தி.மு.க. - காங்கிரஸ் இடையிலான உறவைத் துண்டிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்று முதல்வர் கருணாநிதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.சென்னையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவைக் கட்டடத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கட்டடத்தை பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.விழாவுக்குத் தலைமை வகித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி வரலாற்றுச் சாதனையைப் படைத்து விட்டு பிரதமரும், சோனியா காந்தியும் இங்கு வந்துள்ளனர்.இதற்காக அவர்களை முதன் முதலாக ஒரு மாநிலத்தின் சார்பில் வரவேற்கும் வாய்ப்பு எதிர்பாராமல் நமக்குத்தான் கிடைத்து இருக்கிறது.முயற்சிகள் வெற்றி பெறவில்லை... 2004-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்தார் சோனியா காந்தி. அவரை வரவேற்று, "இந்திராவின் மருமகளே வருக! இந்தியாவின் திருமகளே வெல்க!' என்று கூறினேன்.அப்போது முதல் இந்தியாவின் திருமகளாக அவர் விளங்கி வருவதை நாடே நன்கு அறியும்.அந்தத் தேர்தலிலும், அதற்குப் பிறகு நடைபெற்ற சட்டப் பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸýம், தி.மு.க.வும் உடன்பாடு கொண்டு வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறது.நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நிறைவேற்றி வருகிறோம்."உடன்பாடு கொண்ட நிலையிலும், எதிர்க்கின்ற நிலையிலும் இரண்டிலும் உறுதியோடு இருப்பவன் நான் (கருணாநிதி)' என்று இந்திரா காந்தி கூறினார். இதனை நிரூபிக்கும் வகையில், காங்கிரஸ் - தி.மு.க. உறவு நீடித்து வருகிறது.இந்த உறவைத் துண்டிக்க வேண்டுமென எவ்வளவோ முயற்சிகள், எத்தனையோ பயணங்கள். "மீடியா'க்கள் கனவு கண்டு கட்டி விடும் கற்பனைப் பிரசாரங்கள் நடந்தன.ஆனால், எங்களிடையே உள்ள உறுதிப்பாடு காரணமாக, பகை மூட்டும் முயற்சிகள் வெற்றி பெற முடியாமல் போயின. தங்களின் அந்த நேச மனப்பான்மைக்கும், நெஞ்சு உறுதிக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.÷சாதாரண குடும்பத்தில்... இந்தியாவின் மிகச் சிறந்த இந்தக் கட்டடம் உருவாகக் காரணமாக இருந்த நான், மிக மிக சாமானியன். சாதாரண குடும்பத்தில், சிறிய கிராமத்தில் பிறந்தவன். எனக்கென்று எந்தவிதமான குடும்பப் பெருமையும் இல்லை.எனக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு, உழைப்புதான். ஓய்வில்லாத உழைப்பு. அது எந்தத் துறையானாலும் அனைத்திலும் அயர்வில்லாத உழைப்பு.எனக்கென எந்தவிதமான தனிப்பட்ட விருப்பமும் எப்போதும் இருந்தது இல்லை.ஏழைகளுக்காக உழைக்க வேண்டும்; அவர்களின் அகத்திலும், முகத்திலும் மகிழ்ச்சியைக் காண வேண்டும். அதற்கு என்ன வழி என்றுதான் எந்த நேரத்திலும் சிந்திக்கிறேன்.அன்போடும், பாசத்தோடும்... எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, நள்ளிரவில் ஒரு நாள் என்னைக் கைது செய்து நையப்புடைத்து அன்றைய சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்குக் கொண்டு வந்து தன்னந்தனியாக விடிய விடிய காவலில் வைத்திருந்தனர்.அதே இடத்தில்தான் இன்று இந்தப் பிரமாண்டமான கட்டடம் உருவாகியுள்ளது.அனைவரிடமும் அன்பு செலுத்தவே விரும்புகிறேன். எதிர்க்கட்சிக்காரர்களிடம் கூட அன்போடும், பாசத்தோடும் நடந்து கொள்ள விரும்புகிறேன் என்பதை எதிர்க்கட்சி நண்பர்களே கூட நன்கு அறிவர்.மத்திய அரசும்... தி.மு.க. அரசில் எளியோர்க்கு கண்ணொளி வழங்கும் திட்டம் தொடங்கி பல்வேறு திட்டங்கள் உருவாகி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளி என அழைக்க வேண்டும் என்று ஐ.நா. சபை கூறியுள்ளது.மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்துக்கு மத்திய அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தை மத்திய அரசும் அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.புதிய சட்டப் பேரவை கட்டடத்தை சனிக்கிழமை திறந்து வைக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். உடன் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி.
கருத்துக்கள்

3) புதிய கட்டடம் தோன்றும் பொழுதே தமிழ் மறக்கடிக்கப்படும் சூழலை உடனே நிறுத்த வேண்டும்.வளாகப் பகுதி அல்லது கட்டடப் பெயர்களைத் தமிழிலேயே சூட்ட வேண்டும். பப்ளிக் பிளாசா எனச் சொல்லாமல் தலைவாயில் அல்லது பொதுவாயில் என அழைக்கலாம். ஏ பிளாக் என்பது போன்று குறிப்பிடாமல் சேரர் கொற்றம், சோழர் கொற்றம், பாண்டியர் கொற்றம் என்பன போன்றும் புலவர்கள் பெயர் சூட்டியும் அழைக்கலாம். பதவிப் பெயர்கள் , பதவியாளர்கள் பெயர்கள் தமிழில் அமைய நடவடிக்கை எடுக்கவேண்டும். கோட்டையில் உள்ள தலைமைச் செயலகம் சென்று பார்த்தால் தலைமைச் செயலாளர்களாகப் பதவி வகித்தவர்கள் பெயர்ப்பட்டியல் ஆங்கிலத்தில் இருப்பதைக் காணலாம். அந்த நிலை இங்காவது மாற வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/14/2010 5:15:00 AM

2.) கலைஞர் மீதுள்ள பற்றின் காரணமாக புதிய வளாகம் பொலிவாகவும் வலிவாகவும் தோற்றுவிக்கப்பட்ட அருந்திறல் (சாதனை) மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழின் மீதுள்ள பற்றின் காரணமாகக் கொள்கை கூட்டணியை மறந்த கொள்ளைக் கூட்டணிகளை மன்னித்தாலும் கொலைகாரக் கூட்டணி தமிழ் ஈழத்தில் ஏற்படுத்திய வேதனையே கண்முன் எழுந்து வருத்தத்தை அளிக்கிறது. தமிழர்களுக்கு அழிவும் இழிவும் ஏற்படுத்திய இந்தியப்படையினரை வரவேற்க மாட்டேன் என்ற கலைஞர் நினைவிற்கு வருவதால் ஈழத் தமிழர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்த கூட்டாளிகளுக்கு நல் வரவேற்பு அளித்து நம் மானமும் வீரமும் அடகுபோகும் வகையில் தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தாத இன்றைய அரசியல் சூழல் வெறுப்பை அளிக்கிறது. இராசபக்சே வந்தாலும் செம்பட்டு விரித்து வரவேற்கக் காத்திருக்கும் ஆட்சித்தலைமையிடம் இதனை எதிர்பார்க்கக் கூடாதுதான். ஆனால், வரலாற்றில் குருதிக் கறையை ஏற்படுத்தியவர்களிடம் அதனைப் போக்குவதற்குக கூட வேண்டுகோள் விடுக்கவில்லையே! விடுத்தால் ஆட்சி போய்விடும் என்ற அச்சமா? தமிழா! நம் நிலை இதுதானா?

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/14/2010 5:10:00 AM

1.)பழைய தலைமைச் செயலகத்தில் நாமக்கல் மாளிகை என 10 மாடி கட்டடம் உருவாக்கப்பட்டதற்கும் மாவட்டங்கள் தோறும் பெருந்திட்ட வளாகம் என புதிய ஆட்சியக - மாவட்ட அலுவலக வளாகங்கள் அமைவதற்கும் வித்தாய் இருந்தவர் கலைஞர்தான். இவை போல் வரலாற்றில் இடம் பெறும் வகையில் புதிய வளாகம் அமைந்ததற்கும் வினைத்திறம் மிக்க கலைஞரே காரணமாவார். தன்னை விடிய விடிய பிடித்து வைத்திருந்த இடம் இல்லாமல் போகவே இந்த இடத்தைத் தெரிவுசெய்துள்ளார் எனப் பேச்சில் இருந்துதெரிகிறது. எவ்வாறு இருப்பினும் இவ்விழாவில் மத்திய அரசில் தமிழ் வீற்றிருக்கவும் மாநில உரிமைகள் காக்கப்படவும் உலகத் தமிழர்கள் காக்கப்படவும் குரல் கொடுத்திருந்திருக்கலாம். காங்.- தி.மு.க. கூட்டணி உறவு குறித்துத் தேவையின்றிப் பேசியிருக்க வேண்டா. என்னதான் இப்பொழுது காங்கிரசை மயக்கினாலும் தேர்தல் நேரத்தில் அது தடம் புரளலாம். கட்சியாளர்களுக்கு நம்பிக்கை தருகின்ற பேச்சை அரசு விழாவில் தவிர்த்திருக்கலாமே!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/14/2010 4:56:00 AM

Greatb Job by CM.........

By S.Raj Kumar
3/14/2010 4:52:00 AM

Coming from a poor background how did you manage make your family one of the richest in South East Asia. Did you run any business using your wife, Rajathi,and Kanimozhi. THEVADIYA PAYALE VAAYA MOODU DA, ROMBA PESATHA.

By Bharath
3/14/2010 3:36:00 AM

I am very happy to read karunanithy speech.Our world tamil leader.I remember today that Mr.Karunanithy spoke in a stage in Indira nager near Adayar in Chennai." He said that he confident in this election (1989 tamil nadu election) How.... like Praphakaran who is fighting with 100,000 indian forces,like praphakaran I can win in this election". Mr.Karunanithy we don't angry with you But time (dirty time) can change everything.

By thilaga
3/14/2010 3:25:00 AM

fantastic achievement

By deraj
3/14/2010 2:48:00 AM

Congrats to PM, CM & Congress Chief!

By reader
3/14/2010 1:20:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக