வெள்ளி, 19 மார்ச், 2010

மகாத்மாவின் சிந்தனைக்கு காரணமாய் இருந்தது தென்னாப்பிரிக்காபிரிட்டோரியா, மார்ச் 18: மகாத்மா காந்தியின் சிந்தனைக்கு பிரதான காரணமாக இருந்தவர்கள் தென்னாப்பிரிக்கர்களே என்று காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி குறிப்பிட்டார்.அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் ராஜ்மோகன் காந்தி ஆராய்ச்சி பேராசிரியராக உள்ளார். தனது மாணவர்களுடன் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்காவில் கெüடெங் வடக்கு பிராந்தியத்தில் உள்ள தமிழ் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசுகையில் அவர் மேலும் கூறியது:மத்திய பிரிட்டோரியா மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்லூ வீதியில் அப்போது இந்திய வர்த்தகர்கள் அதிகமிருந்தனர். இதனாலேயே இப்பகுதியில் தங்கி, இளம் வழக்கறிஞராக காந்தி தனது பணியைத் தொடங்கினார். அப்போதுதான் அறவழியில் போராடும் முறையைக் கையாண்டார். இந்த முறைதான் இந்திய சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இதைப் பின்பற்றி தென்னாப்பிரிக்காவும் சுதந்திரமடைந்தது. காந்தியடிகளின் வாழ்க்கையில் பிரிட்டோரியா மாகாணம் மிக முக்கியமானதாகும். அரசியல் களம் புகுவதற்கு முன்பு சில மாதங்கள் இங்குதான் தங்கியிருந்தார். இங்கு தங்கியிருந்த காலத்தில் புத்தகங்கள் படிப்பதும், அதைப்பற்றிய சிந்தனையிலும் அவர் சுற்றி வந்தார். மகாத்மாவின் சிந்தனைக்கு ஊற்றாக அமைந்தது பிரிட்டோரியாதான் என்றார் ராஜ்மோகன் காந்தி.இங்குள்ள ஊர்டெக்கர் நினைவுப் பகுதியை தனது மனைவி உஷா மற்றும் மாணவர்களுடன் ராஜ்மோகன் காந்தி சுற்றிப் பார்த்தார். மனித உரிமைகள் மற்றும் சம உரிமை உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி செயல்பட்டு வருகிறது ராஜ்மோகன் காந்தியின் தன்னார்வ அமைப்பு.
கருத்துக்கள்

தன் அறவழிப் போராட்டச் சிந்தனைகளுக்குக் காரணம் தென்னாப்பிரிக்கா தமிழர்கள் எனக் காந்தியடிகளே கூறியுள்ளார். நன்றிக்கடனாகவும் திருக்குறளை மூல மொழியான தமிழில் அறியவும் தான் தமிழ் கற்றேன் என்றும கூறியுள்ளார். மறு பிறவி இருந்தால் தமிழ் நாட்டில் பிறக்க விரும்புவதாக அடிகள் கூறியதாகவும் நான் படித்துள்ளேன். ஆனால் அவர் செய்த தவறு அங்குத் தமிழர் பேராயம் என அமைக்காமல் இந்தியப் பேராயம் என அமைத்ததுதான். எனவேதான் இந்தியா இன்று வரை நீங்கள் இந்தியர்கள் இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழ் கற்கும் வாய்ப்பை மறுத்து வருகிறது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/19/2010 3:44:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக