வெள்ளி, 19 மார்ச், 2010

பொட்டு அம்மான் இறந்துவிட்டார்: சர்வதேச போலீஸூக்கு இலங்கை தகவல்



கொழும்பு, மார்ச் 18: விடுதலைப் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான் இறந்துவிட்டார். எனவே தேடப்படுவோர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்குமாறு சர்வதேச போலீஸôரிடம் (இண்டர்போல்) இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பொட்டு அம்மானும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் சர்வதேச போலீஸôரின் தேடப்படுவோர் பட்டியலில் பொட்டு அம்மான் பெயரும் இருந்தது. இதுபோல் 1996-ம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 91 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாகவும் பொட்டு அம்மான் தேடப்பட்டு வந்தார்.இந்த நிலையில் கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் பொட்டு அம்மானும் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் 10 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை பொட்டு அம்மானின் உடல் கிடைக்கவில்லை.அவரது உடல் கிடைக்காவிட்டாலும் அவர் இறந்துவிட்டதாக கருதி அவரது பெயரை தேடப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்குமாறு இலங்கை அரசு சர்வதேச போலீûஸ கேட்டுக்கொண்டுள்ளது. பொட்டு அம்மான் உடல் கிடைக்காததைப் போன்றே பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் மற்றும் இரண்டாவது மகன் ஆகியோரின் உடல்களும் இன்றுவரை கிடைக்கவில்லை. இலங்கை ராணுவத்தைப் பொருத்தவரை இது இன்று வரை மாயமாகவே உள்ளது.
கருத்துக்கள்

ஆனால் உயிருடன் உள்ளதாக இந்தியா உடனே மறுத்துள்ளது. களத்திலே தாம் சந்தித்த வஞ்சகத்ததைச் சூதினைப் பொறாமைதன்னை கொத்து கொத்தான படுகொலைகளை இன அழிப்பை எதிர் நின்று தூள் தூள் ஆக்கும் முயற்சியில் பொட்டு அம்மன் முதலான போராளிகள் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதே உண்மையாக இருக்கும். எனினும், இருந்தாலும் மறைந்தாலும் சிம்ம சொப்பனமாகப் போராளிகள் உள்ளனர் என்பது மட்டும் புரிகிறது.

வெல்க தமிழ் ஈழம்! வாழ்க போராளிகள்! வளர்க இந்திய ஈழ நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/19/2010 4:01:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக