சனி, 20 மார்ச், 2010

தேனியில் சிறப்பு மனநல மருத்துவமனை



சென்னை, மார்ச் 19: ""தேனியில் சிறப்பு மனநல மருத்துவமனை அமைக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 2010-2011-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு:""மன நோயாளிகள் உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறும் சிறப்பு அரசு மனநல மருத்துவமனை சென்னையில் மட்டும் உள்ளது. தென் மாவட்டங்களில் உள்ள மன நோயாளிகளும் சிகிச்சைபெற அந்த மாவட்டங்களுக்குத் தனியாக சிறப்பு அரசு மனநல மருத்துவமனை தேனி நகரில் ரூ.10 கோடி மதிப்பில் அமைக்கப்படும். மறுவாழ்வு இல்லங்களை நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ஒரு மறுவாழ்வு இல்லம் என்ற அடிப்படையில் 10 மறுவாழ்வு இல்லங்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு, கால், கை போன்ற உடல் உறுப்புகளைப் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ள 4-வது வகை நோயாளிகளுக்கு மாத உதவித் தொகையாக ரூ.400 தொடர்ந்து வழங்கப்படும்.
கருத்துக்கள்

எல்லா மாவட்டங்களிலும் சிறப்பு மனநல மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக