ஞாயிறு, 14 மார்ச், 2010

"வித்தியாசமாகச் செயல்படுங்கள் தமிழக இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு'



சென்னை, மார்ச் 13: தமிழக இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக வித்தியாசமாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.500 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவை-தலைமைச் செயலக வளாகத்தைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:÷பழைய பெருமையைத் தொடர்ந்து பேசி நாம் காலம் தள்ள முடியாது. மாற்றத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. தரமான, அதே சமயம் பெரிய அளவிலான முன்னேற்றத்தை நோக்கி நாம் செல்ல வேண்டிய தருணம் வந்து விட்டது. தேசிய அளவில் வித்தியாசமாகச் செயல்பட வேண்டும். குறிப்பாக தமிழக இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக வித்தியாசமாகச் செயல்பட்டு நாட்டுக்கே முன் மாதிரியாக விளங்க வேண்டும். புதிய சிந்தனைகள், புதிய உத்திகளைக் கையாளும் ஆற்றல் வேண்டும்.தடைகளைக் கடக்கும் முயற்சியை மட்டும் புதிய சிந்தனையாளர்கள் மேற்கொள்வதோடு, தடைகளைத் தவிர்க்கும் முறைகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.புதிய கண்டுபிடிப்புகள், உத்திகளை நாம் கையாளாமல் போனால் சரித்திரத்தில் நாம் பின்தங்கி விடுவோம்.தமிழகம் முன் மாதிரி: விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் நாட்டிலேயே தமிழகம் முன் மாதிரியாக சிறந்து விளங்குகிறது. ஆட்டோமொபைல் தொழில், நவீன ஜவுளி ஆலைகள் ஆகியவை தமிழகத்தில் சிறப்பாக உள்ளன என்றார் பிரதமர்.
கருத்துக்கள்

தலைமையமைச்சர் அவர்களே! தமிழக இளைஞர்கள் உங்கள் வேண்டுகோளை ஏற்றுச் செயல்படுவார்கள். நீங்களும் எங்கள் வேண்டுகோளை ஏற்றுச் செயல்படுங்கள்! பிற நாட்டு ஆட்சியாளர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து தமிழ் ஈழத்திற்கு முதல் ஏற்பினை வழங்குங்கள். தமிழர்களின் தாயகமான தமி்ழ் ஈழ அரசு தனியரசாக நிலைத்திருக்க வழிவிடுங்கள். ஈழத் தமிழர்களின் கல்லறைகள் மீது இந்திய முன்னேற்றத்தை எழுப்ப முயலாதீர்கள். நமக்குச் சரியான பாதுகாப்பாகவும் உற்ற தோழனாகவும் உள்ள ஈழத்தமிழர்களை மடியச் செய்து சிங்களப்பகையிடம் மண்டியிட்டுக் கிடப்பதை நிறுத்துங்கள். உங்கள் இனத்திற்கு ஒரு நீதி. பாராண்ட தமிழ் இனத்திற்கு ஒரு நீதி என்னும் போக்கை உடனே நிறுத்துங்கள். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ இந்திய நட்புறவு!

உங்கள் மன மாற்றத்தை வேண்டும் அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/14/2010 5:51:00 AM

Yes, Mr. Prime Minister, it is really true. When changes come life, society will change.

By SAM
3/14/2010 3:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக