வியாழன், 18 மார்ச், 2010

தமிழ்மொழி இலக்கியங்களே முதலில் தோன்றின



தஞ்சாவூர், ​​ மார்ச் 16:​ இந்திய மொழி இலக்கியங்களில் தமிழ் மொழி இலக்கியங்கள்தான் முதலில் தோன்றின என்றார் மதுரை காமராசர் பல்கலைக்கழக தெலுங்கு மற்றும் ஒப்பிலக்கியத்துறைத் தலைவர் டி.எஸ்.​ கிரிபிரகாஷ்.​ ​ தமிழ்ப் பல்கலைக்கழக இந்திய மொழிகள் பள்ளி சார்பில் திங்கள்கிழமை அறிமுக நோக்கில் இலக்கிய இலக்கணங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் மேலும் அவர் பேசியது:​ ​ சைவமும்,​​ வைணவமும் தமிழகத்தில்தான் முதல் முதலில் தோன்றின.​ அப்போது எவ்விதப் குழப்பமும் இல்லை.​ ஆனால் கர்நாடகா,​​ ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில்தான் குழப்பம் உருவானது.​ ​ தமிழில் திருவள்ளுவர்,​​ கன்னடத்தில் சர்வக்ஞர்,​​ தெலுங்கில் வேமனா ஆகியோர் விழிப்புணர்வு பாடல்களைப் படைத்தனர்.​ பக்தியும்,​​ புரட்சியும் சேர்ந்திருப்பது இந்திய மொழிகளிலுள்ள சிறப்பு அம்சங்கள் என்றார் கிரிபிரகாஷ்.​ ​ கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் ச.பி.​ சரவணன் தலைமை வகித்தார்.​ மொழிப்புலத் தலைவர் ஆ.​ ராமநாதன்,​​ இந்திய மொழிகள் பள்ளித் தலைவர் அருள்ராஜ்,​​ உதவிப் பேராசிரியர்கள் முரளிதரன்,​​ சாவித்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துக்கள்

30க்கும் மேற்பட்ட மொழிகளை இந்தி மொழி பேசுவோர் பட்டியலில் சேர்த்து இந்தி பேசுநராகக் கணக்கு காட்டியுள்ளது மத்திய அரசு. மேலும் எண்ணிக்கை அடிப்படையில் தொன்மையை வரையறுப்பதாயின் ஆங்கிலம் தொன்மையான மொழி என்றாகிறது. தவறான அளவு கோளில் எடை போடக் கூடாது. வாசகர் இராசா குறிப்பிட்டது போல் தமிழ் உலகத் தொன்மையான மொழி. தமிழ் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மொழி. சமற்கிருதம் என்பது மிகவும் பிற்பட்ட மொழி.தமிழின் தொன்மையை ஒப்பிடும் பொழுது சமற்கிருதம் இப்பொழுது கையில் கிடைக்கும் தொலைவரியைப் போன்ற அண்மைக் காலத்தது. தமிழ் ஒப்பிட இயலாத கணக்கிட இயலாத தொன்மை வாய்ந்ததது என்கிறார் கிரண்டப் என்னும் அறிஞர். தமிழ் எழுத்து அமைப்பைப் பார்த்து அமைத்துக் கொண்டதே சமற்கிருத எழுத்து அமைப்பு எனப் பேராசிரியர் சி.இலக்குவனார் முதலான தமிழறிஞர்கள் நிறுவியுள்ளனர். தமிழே தொன்மையும் முதன்மையும் சீர்மையும் கொண்ழ; மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி யாகத்திகழ்வது என்பதை உணருங்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/18/2010 2:24:00 AM

Nambiar says that Hindi is old language because lot of people speaks Hindi. If that is true how Malayalam is old language, very few people speak Malayalma than Tamil. Think before posting.

By Raa
3/17/2010 11:53:00 PM

Raja ! You're wrong Only sankrist is ancient langauage which is already died. Tamil is a new langauge than Malayalam. Malayalam and Hindi are the oldest langauge because the population of Hindi speaking people are much more than Tamils speaking people. Look china, it is the real country; but, Indian is not a country. Within Indian there are many countries where British empire make India as a country to rule very easity. Any way Tamils have no pinal code to keep Tamil nadu and Tamil langauge alive since Sozhamamman.

By Nambiar
3/17/2010 11:02:00 PM

Thamizh is not an indian language, it is one of the ancient languages of the world and itself a national identity. Thamizh has been in existence well over 2300 years, whereas india is an invention of brits for their ease of looting and administration, which is about 200 years old.

By Raja
3/17/2010 10:00:00 PM

Thiruvalluvar never mention about "Vainavam" in his Thirukural record. Vainavam came to TN with in 2000 years, not during Thiruvaluvar era. If Vainavam existed during Thiruvaluvar era, Thuruvaluvar would mention about Vainavam; however, Thruvaluvar never know about Vainavam which a new religion which come from Abhanistan when Bramanis immigrated from Abhanistan. Maran is correct, and I accept Mr. Maran's statement. Thank you

By Kanimozhli
3/17/2010 5:04:00 PM

It is wrong statement because vainavam is not a religion in TN , Vainavam came from Bramnis who came from afganistan through sinthu nathy wich is current pakistan. Tamilnadu people had a saivam prier to vainavam which a Sivan as God also, Tamil people pray the nature before vainavam came to TN. Why Tamilnadu educated people want change the history of Tamil people. You can ask Mr. Karunanithi about it; if you have any doubt. Vainavam never is the 1st in Tamilnadu it is fact. சைவமும்,​​ வைணவமும் தமிழகத்தில்தான் முதல் முதலில் தோன்றின.​ அப்போது எவ்விதப் குழப்பமும் இல்லை.​ ஆனால் கர்நாடகா,​​ ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில்தான் குழப்பம் உருவானது. ​ ​ ​ ​

By Maran
3/17/2010 4:58:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக