ஞாயிறு, 14 மார்ச், 2010

மகளிர் மசோதா: கருணாநிதி ஆதரவுக்கு சோனியா பாராட்டு



பேரவை திறப்பு விழாவில் பேசுகிறார் சோனியா காந்தி.
சென்னை மார்ச் 13: மகளிர் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற முதல்வர் கருணாநிதி ஆதரவு அளித்ததற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி பாராட்டு தெரிவித்தார்.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டப் பேரவை திறப்பு விழாவுக்கு முன்னிலை வகித்து, சிறப்பு மலரை வெளியிட்டு அவர் மேலும் பேசியதாவது:இது சாதாரணமான விழா அல்ல. பிரமாண்டமான விழா. சி.சுப்ரமணியம், ராஜாஜி, காமராஜர், அண்ணாதுரை எனப் பல தலைவர்களைக் கண்ட பெருமை தமிழக சட்டப் பேரவைக்கு உண்டு.இந்தப் பெரும் தலைவர்களிடையே தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற விவாதங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை. அதன் பெருமை தொடரும் வகையில் இப்போது முதல்வர் கருணாநிதி உள்ளார்.குறிப்பாக முக்கிய பிரச்னைகளில் பிரதமருக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக முதல்வர் கருணாநிதி விளங்குகிறார்.காலை 5 மணிக்கு...: இந்தப் புதிய பேரவை - தலைமைச் செயலகக் கட்டுமானப் பணியை தினமும் பல முறை பார்வையிட்டு முதல்வர் கருணாநிதி ஆய்வு செய்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.இன்று (சனிக்கிழமை) காலைகூட 5 மணிக்கு இங்கு வந்து இப் புதிய பேரவையை அவர் ஆய்வு செய்ததாக என்னிடம் கூறினர்.அரசியல் தலைமைப் பண்பு காரணமாக ஊரகத் துறை, சுகாதாரம், ஊட்டச் சத்து உள்பட பல்வேறு துறைகளில் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.ஜனநாயகத்தின் மீது இந்திய மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் அதிகமான ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் வாக்களிப்பதைக் காண முடிகிறது. அவர்களது நம்பிக்கை பொய்க்காத வகையில் பேரவை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்படுவது அவசியம் என்றார் சோனியா.
கருத்துக்கள்

கட்சி அரசியலைக் கலக்காமல் பேசிய சோனியாவிற்குப் பாராட்டுகள். இத்தகையோரிடம் தமிழகக் காங்கிரசுத தலைர்களும் திராவிட முன்னேற்றக் காங்கிரசு தலைவர்களும் தமிழர்களின் தாயகம் தமிழ் ஈழம் என்னும் உண்மையைப் புரிய வைத்திருந்தால் உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்றுப் படுகொலைகளைத் தவிர்த்துத் தமிழ் ஈழக் கொடி பாரெங்கும் பட்டொளி வீசிப் பறக்கச் செய்திருப்பார். கொத்தடிமை அறிவு கொண்ட நம்மவர்கள் மானமிழந்து அடிபணிவதால் அவரால் உண்மையை உணராமல் போய் இருக்கும். உங்களை அன்னை எனப் போற்றும் தமிழ் மக்களின்பால் தாய்மை உணர்வை வெளிப்படுத்துவதாயின் இருக்கின்ற தமிழ் ஈழ மக்களையாவது காப்பாற்றித் தமிழ் ஈழத்திற்கு ஏற்பளிப்பீர்களாக! வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ இந்திய நட்புறவு!

By Ilakkuvanar Thiruvalluvan
3/14/2010 5:27:00 AM

..yes. this is the more imporatnt in the jungle TN where people shit in public ....and beg....anything possible for money in this TN....next Tamil Semari Conference....family affair with public money..who cares ...sheeps will go for free transport..free quarter..free buriyani....TN is the only place in the world..where cabinet ministers opne toilet and bus stops...he..he..he

By KOOPU
3/14/2010 1:48:00 AM

Setting theme "hardworking" for youth at this age 86 year old legend CM, Congrats!.

By reader
3/14/2010 1:30:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக