சென்னை, மார்ச் 19: விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் மூலம் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.இலவச கலர் டெலிவிஷன்கள் வழங்க வரும் நிதியாண்டில் ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.நிதிநிலை அறிக்கையில் இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) மூலம் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்படும்.கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 46,091 கோடி முதலீட்டில் 37 புதிய தொழிற்சாலைகளை நிறுவ தொழில் முனைவோர்கள் முனவந்துள்ளனர். இது அரசின் தொழில் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். இதனால் சுமார் 2.22 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள்கிடைக்கும். அப்பல்லோ டயர்ஸ், எம்.ஆர்.எப்., ஏ.டி.சி. டயர்ஸ், மிஷலின் ஆகிய டயர் தயாரிப்பு நிறுவனங்களைத் தொடர்ந்து ஜே.கே. டயர்ஸ் நிறுவனம் ஸ்ரீபெரும்பூதூரில் ரூ.1,500 கோடியில் டயர் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க முன்வந்துள்ளது.மஹிந்திரா குழுமம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் ரூ.1,800 கோடியில் வாகன தயாரிப்பு தொழிற்சாலை அமைக்க உள்ளது. ரூ. 4,500 கோடியில் ஆண்டுக்கு 4 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன்கொண்ட ரெனோல்ட் நிசான் கார் தொழிற்சாலை காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் மார்ச் 17-ம் தேதி தொடங்கிவைக்கப்பட்டது.இந்த நிதிநிலை அறிக்கையில் சிறுதொழில் துறைக்கு ரூ. 98 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்
பாராட்ட வேண்டிய திட்டம். ஆனால், இன்றைய வேலையில்லாத் திண்டாட்டத்தைக் க்ருத்தில் கொண்டு தனியாருடன் இணைந்து எல்லா நகரங்களிலும் தொழிற்காலைகள் அமைக்க முன்வரவேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:54:00 AM
3/20/2010 2:54:00 AM
விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) மூலம் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்படுமாம். அதை பாண்டிச்சேரிக்கு அருகே அமைத்தால் நன்றாக இருக்கும். தண்ணி பிரச்சினை இருக்காதுல்லீங்கோ!
By Anbumani
3/20/2010 2:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
3/20/2010 2:48:00 AM