ஞாயிறு, 14 மார்ச், 2010

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக பக்தி அரங்கு தொடங்க வேண்டும்: ராம. கோபாலன்



செஞ்சி, மார்ச் 13: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக பக்தி அரங்கு தொடங்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கூறினார்.÷செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்து முன்னணி விழிப்புணர்வு மாநாட்டில் அவர் பேசியது:÷சேது சமுத்திர திட்டம் லட்சக்கணக்கான மீனவர்களை பாதிப்புக்குள்ளாக்கும். கால்வாயில் அடிக்கடி மண் விழும், அதனால் பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.÷உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக பக்தி அரங்கு தொடங்க வேண்டும். ஆன்மிக மடாதிபதிகள் அனைவரையும் அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். இது குறித்து முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆலோசனை செய்வதாக பதில் அனுப்பி உள்ளார். இம் மாநாடு சிறப்பாக நடைபெற அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு அர்ச்சனை நடைபெற்று வருகிறது.÷சமச்சீர் கல்வியில் ஆன்மிகமும் இருக்க வேண்டும். கொன்றைவேந்தன், நல்வழி, மூதுரை உள்ளிட்ட பகுதிகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ÷மசூதி, சர்ச் அரசு கையில் இல்லை. மதச்சார்பற்ற அரசு என்று கூறிக்கொண்டு இந்துக்களின் கோயில்கள் மட்டும் ஏன் அறநிலையத் துறையின் கீழ் செயல்பட வேண்டும் என்றார் ராம.கோபாலன்.
கருத்துக்கள்

தேவார திருவாசகம் முதலானவை பற்றிய ஆய்வுகள் இறைநெறி என்றும் செயேந்திர, நித்யானந்த,தேவநாதக் காமுகத் தத்துவங்கள் ஆன்மிக நெறி என்றும் பாகுபடுத்திப் பேசுகிறார் போலும். காமுகச் சாமியாருக்குத் துணை நிற்கும் இந்துசமயப் பகையாளி இராம.கோபாலனைக் கண்டிக்கும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/14/2010 6:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக