வியாழன், 18 மார்ச், 2010

அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்: முதல்வர் கூறியதை தொடர்ந்து நடவடிக்கை



வெளியேற்றப்பட்டபின் அரசுக்கு எதிராக கோஷமிடும் அதிமுக உறுப்பினர்கள்.
சென்னை, ஜூன் 30: பேரவையில் கோஷங்கள் எழுப்பியதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டனர். முதல்வர் கருணாநிதி கூறியதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான உத்தரவை பேரவைத் தலைவர் பிறப்பித்தார். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தமாக எழுந்தனர். ஒவ்வொரு கட்சியினரும் ஒரு பிரச்னையைக் கூறி அதை விவாதிக்க வேண்டும் எனக் கோரியதால் பேரவையில் கூச்சல் ஏற்பட்டது. இந்த நிலையில், உரத்த குரலில் கோஷங்களை எழுப்பினார், அதிமுக உறுப்பினர் திருத்தணி அரி. அவற்றை அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் திரும்பக் கூறினர். முதல்வர் கூறியதை... அமைதி காக்கும் படி, உறுப்பினர்களை பேரவைத் தலைவர் கேட்டுக் கொண்டார். ஆனாலும், கோஷங்கள் தொடர்ந்ததால் பேரவையில் கடும் கூச்சல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய முதல்வர் கருணாநிதி, ""மரபுகளை மீறி பேரவையில் கோஷங்களை எழுப்பிய அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும்'' என்றார். முதல்வரின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து, இருக்கையில் இருந்து எழுந்த பேரவைத் தலைவர் ""அதிமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றுங்கள்'' என்று பேரவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதன்பின், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அதிமுகவினர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அதன் கூட்டணிக் கட்சியான மதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து, பேரவைக்கு வெளியே அதிமுக உறுப்பினர் டி. ஜெயக்குமார் கூறுகையில், ""இலங்கைப் பிரச்னை தொடர்பாக, பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வர அனுமதி கோரினோம். அதற்கு பேரவைத் தலைவர் அனுமதி தர மறுத்து விட்டார். முதல்வர், துணை முதல்வர் ஆகியோரை புகழ்ந்து பேச மணிக்கணக்கில் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. முதல்வர் கூறிய பிறகு, பேரவைத் தலைவர் எங்களை வெளியேற்றுகிறார்'' என்றார் அவர்.
கருத்துக்கள்

அன்புள்ள திரு பார்த்தசாரதி அவர்களே! என்னுடைய மின்வரி :thiru2050@gmial.com or vanakkam@hathway.com தினமணியின் இன்றியமையாச் செய்திகளையும் வாசகர்களின் கருத்துகளயும் காண விரும்புபவர்கள் thiru2050.blogspot.com சென்று காணலாம்; கருத்துகளைப் பதியலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/17/2009 11:26:00 AM

ADMK is doing very Wrost activities inthe assembly

By B.Janakiraman
7/2/2009 2:42:00 AM

ADMK IS DOING GOOD JOB IN ASSEMBLY.

By SEKAR
7/2/2009 1:20:00 AM

மக்களே! நம்ம எம்.எல்.ஏ. அண்ணாச்சி எல்லாரையும் கொஞ்ச நாளைக்கு இலங்கைக்கு அனுப்பி முகாமில் உள்ள நமது சகோதரனுக்கு உதவ அனுப்புனா நல்லது. நாம கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கலாமே! ஈழத் தமிழனை செத்தும் கூட நிம்மதியா இருக்க விட மாட்டீங்களாய்யா! அய்யா இலக்குவனார் அவர்களுக்கு! உங்களை போன்ற பெரியவர்கள் முதலில் நமது சகோதரனுக்கு எதிராக ஆயுதம் கொடுத்து சீனா செய்த உதவிகளை மறைக்க முயலும் இந்திய கம்யூனிஸ்ட்டுகளை கண்டியுங்கள். முடிந்தால் நாம் எல்லோரும் நமது உதவிகளை அரசு மூலம் முகாமிலுள்ள நமது சகோதரர்களுக்கு அனுப்புங்கள். அல்லது சேவா பாரதிக்கு அனுப்புங்கள்! முகவரி கேட்டால் நர்ன தருவேன்.

By ravikumar
7/1/2009 10:45:00 PM

Hello Mr Ilakkuvanar Thiruvalluvan Your comments are very good. I like very much you. Could you give me your mail id? Please! my mail id is dpsarathi.m.d@gmail.com

By D.PARTHASARATHI
7/1/2009 4:50:00 PM

LIKE KAVERI,PERIAR IN THEIR ROWS SRILANKAN TAMIL ISSUES HAVE BEEN INCLUDED.INDIA SHOULD HAVE INTERFERD IN THIS ISSUE AT THE TIME OF RANIL PERIOD ALONG WITH ERIK SOLVIN BUT NOBODY HAD NOT TAKEN CARE. MAKING POLITICISING THIS ISSUE (RAMADOSS,THIRUMA,KARUNANIDHI,VEERAMANI JAYA...ETC) GREAT ACTOR TAMILNA THALAVAR, INAAMANATHALIVAR TEY KEEP MOURN NOW.ATLEST THEY HAVE NOT EVEN PERSUADED THE INDIAN GOVT TO MONITOR THE REHABILATION WORKS BEING UNDERTAKEN OR NOT.RAJA PAKSHE DON'T CARE ABOUT INDIA AND MANMOHAN PUPPET DANCING TO THE TUNE OF OF SONIA. SONIA THINK ONLY THE LTTE RATHER THAN TAMILS WELFARE.THOSE WHO HAVE VOTED THE CONGRESS ARE FOOLS AND THE FULL CHIT TAMIL MINISTERS AND MP'S MAKING STREET POLITICS EVERY DAY AND WILL NOT DO NOTHING.IN SURGING OF REFUGEES FROM LANKA ALIMATELY CREATS THE DACOITY,POVERTY,CRIMINALISM IN THE STATE. IF THESE THINGS WILLNOT BE TAKEN IN TO CONSIDERATION FOR THESE FULL CHITS,. IT WILL BE REFLECTED OVER THE COMMON MAN. THEY MAKE WAY CHINA, PAK TO ENTER THE SRIL

By moorthy;abudhabi
7/1/2009 2:48:00 PM

KARUNAI NIDHI IS THOROKI AND JAYA IS ENEMY . ERIYIRA KOLLI IRANDUM not useful for Tamil Cause. Unless these two parties eliminated there is nothing can be done. Let the political situation change in TAMIL NADU. Let MK demise and Jaya run away from tamilnadu or permanently settle in Kodai Nadu.

By K.Mathivanan
7/1/2009 9:55:00 AM

KARUNAI NIDHI IS THOROKI AND JAYA IS ENEMY . ERIYIRA KOLLI IRANDUM not useful for Tamil Cause. Unless these two parties eliminated there is nothing can be done. Let the political situation change in TAMIL NADU. Let MK demise and Jaya run away from tamilnadu or permanently settle in Kodai Nadu.

By K.Mathivanan
7/1/2009 9:33:00 AM

If CM & Speaker orders for eviction of all ADMK members, why SV Sekar is not evicted? Is that proved that DMK already purchased him?

By sundaram
7/1/2009 9:30:00 AM

AIDMK HAS HOT NO SYMPATHY ON ELEM TAMILS THEY AS SIMPLY CREATIGN TROUBLES IN THE ASSEMBLY FOR PUPLICITY ONLY.WHAT ARE THEY GOING TO ACHIEVE BY CREATING UNNECESSAY TROUBLES. ALLOW THE GOVERNMENT TO DO GOOD FOR POORS IN TAMIL NADU

By ravi
7/1/2009 8:23:00 AM

Leave alone Ealamtamils take the case of socalled Indiantamilfishermen they are even now "invaded" by srilankanarmy after they eliminated LTTE because we are tamils. we are not "Indians" to suffer in Australia!

By subramanian
7/1/2009 6:13:00 AM

பன்னாட்டு நீதி மன்றத்தில் இலங்கை மீது வழக்கு தொடுக்க இந்தியா கோர இயலாது. ஏனெனில் இந்தியாதான் முதன்மைக் குற்றவாளி என்பதை இலங்கை வெளிப்படுத்தி விடும். அவ்வாறிருக்க திமுக வால் இக்கோரிக்கையை முன் வைக்க இயலாது. எனினும் இன நலம் தொடர்பாக முழங்கும் பொழுது விதிகளைப் பற்றிப் பொருட்படுத்தாமல் உணர்வுகளைப் புரிந்து கொண்டு முழங்கி விட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவதுதன் நலலது. இல்லையேல் தமிழகமே சிங்களப் போர்க்குற்றங்களுக்குத் துணை நிற்பது போன்ற எண்ணம் ஏற்பட்டு விடும். தமிழர்களுக்கான சட்ட மன்றத்தில் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ச.ம.உறுப்பினர்கள் தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பது சரியே என்ற நிலைப்பாட்டை எடுப்பதுதான் ஏற்றதாக அமையும். முழக்கநேரம் அளவு கடந்து போகும் பொழுது பிற நடவடிக்கைகள் தொடருவதற்காக அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கலாம். மாண்புமிகு முதல்வர் ஆவன செய்ய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/1/2009 3:31:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக