செவ்வாய், 7 ஜூலை, 2009


ஜூலை 06,2009,22:53 IST





ஊட்டி ;இந்தியாவில் அகதிகளாக குடியேறி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை, ஊட்டியில் உள்ள திபெத்தியர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர்.ஐம்பது ஆண்டுகளுக்கு முன், சீன ஆக்கிரமிப்பை அடுத்து திபெத் மக்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் ஊட்டியில் அடைக்கலமாகினர். இங்கு, அவர்கள் மிகுந்த மரியாதையுடன் வாழ்ந்து வருகின்றனர்; ஊட்டியில், "திபெத் மார்க்கெட்' என்ற தனிப்பகுதியே உள்ளது.



திபெத் மக்களின் மதகுருவான தலாய்லாமாவின் 74வது பிறந்த நாள் மற்றும் திபெத்தியர்கள் இந்தியாவில் அகதிகளாகக் குடியேறியதன் 50 ஆண்டு நிறைவு ஆகியவற்றைக் கொண்டாடும் விதமாக, திபெத்தியர்கள் நலச்சங்கம் சார்பில் ஊட்டியில் நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது.ஊட்டி ஒய்.பி.ஏ., அரங்கில் நடந்த விழாவில், கூடுதல் கலெக்டர் ஆபிரகாம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். திபெத்தியர்கள் நலச் சங்கத் தலைவர் குங்யால் வரவேற்றார். தலாய்லாமா அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வாசித்தார் முன்னாள் தலைவர் டென்சிங் யாங்கி.பின், திபெத்தியர்கள் தங்கள் பாரம்பரிய நடனத்தை, வண்ணமிகு ஆடைகளுடன் ஆடிப் பாடினர். திபெத்தியர் நலச்சங்க துணைத் தலைவர் ஜங்சப் சங்மோ நன்றி கூறினார்.

புலிகளின் தளபதி சொர்ணத்தின் மனைவி கைது
தினமணி


கொழும்பு, ஜூலை 6- விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மண்டலத் தளபதி சொர்ணத்தின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.இத்தகவலை காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.நலன்புரி முகாமில் தங்கியிருந்த அவரை போலீஸôர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ரஞ்சித் குணசேகர கூறியுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் புலி ஒருவர் அளித்த தகவலின் பேரில் சொர்ணத்தின் மனைவி கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துக்கள்

1/2) திரு சீவா சீதர் எந்தத் தொனியில் எழுதியுள்ளார் எனத் தெரியவில்லை. ஆனால், இச்செய்தியைப் படித்ததும் மிகவும் வேதனையுற்று ஒன்றும் குறிப்பிட மனம் வரவில்லை என்பது உண்மைதான். மிகப் பல்லாண்டுகளாகத் தமிழ்ப் பெண்களை நாசம் செய்கின்ற, பெண்களின் மார்பில் சிங்கள முத்திரை பதித்துக் கொடுமைப்படுத்திய. தமிழர்களைக் கொன்று தமிழர்களின் கறி இங்கே விற்கப்படும் என்று விளம்பரப்படுத்திய, உயிருடன் இருக்கும் பொழுது கற்பழிப்பு முதலான கொடுமைகளைச் செய்வதுடன் இறந்தபின்பும் எழுத இயலாத கொடுமைகளை இழைக்கின்ற சிங்களக் கொடுங்கோலர்கள், வதைமுகாமில் இருந்து வேறு மிகுவன்கொடுமைக் கொட்டடிக்கு இழுத்துச் செல்கின்றனர் - நாட்டிற்காகப் பாடுபட்டவரின் மனைவியை! எதிரிதான் ஆயுதத்தைத் தீர்மானிக்கின்றான் என்பதற்கேற்ப சிங்கள பயங்கரக் கொடுமைகளுக்கு எதிராகத்தான் ஈழப்புலிகள் ஆயுதம் ஏந்தினர். எனினும் சிங்கள மக்களுக்கு எதிரான குண்டு வீச்சில் ஈடுபடவில்லை. பழிக்குப்பழி என்ற முறையில் சிங்கள மக்களுக்கு எதிரான போர் நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார்கள் எனில் ஈழம் என்றோ மலர்ந்திருக்கும்! (தொடர்ச்சி 2/2 காண்க)


- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 5:12:00 AM
2/2) (1/2 இன் தொடர்ச்சி) ஆனாலும் சிங்கள மக்களுக்கு எதிரான வன்முறைச் செயலில் இறங்கா அறவுணர்வுடன் செயல்பட்டவர்கள் விடுதலைப் போராளிகள். அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கத் துணை நிற்க வேண்டிய நாமோ பேரவலப் பெருங்கொடுமைகளைச் செய்யும் மனித நேயமற்ற கையாலாகாதா அரசகளைத் தேர்ந்தெடுத்துவிட்டுக கையறுநிலையில் கதறுகிறோம்! மனம் வெதும்பிக் கண்ணீர் வடிக்கும் சூழலில் என்ன எழுதுவது?என்ன எழுதி என்னதான் பயன்?

வேதனையில் உழலும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 5:13:00 AM

Its really surprising that Ilakuvanar Thiruvalluvanar has not commented this article ;)

By Jeeva Sridhar
7/7/2009 3:09:00 AM

அன்று! இந்திய இராணுவம் இலங்கைத்தமிழ்ப் பெண்களை ஆயிரக்கணக்கில் கற்பழித்தார்கள் என்று எமது தமிழ்ப்பெண்களின் மானத்தை ஏலம் போட்டு விற்றார்கள். இன்று! அனைத்து புலித்ததைவர்களினதும் அப்பாவி மனைவிமார்கள் இலங்கை இராணுவத்தின் பிடியில். பழி எங்கோ போய்ச்சேர்ந்து விட்டது, பாவம் இங்கே அவர்களைக் திருமணம் செய்த குற்றத்திற்காக!

By Ravi
7/7/2009 2:10:00 AM
தலையங்கம்:எதிர்பார்ப்புகள் பொய்த்தனவே...



நிதிநிலை அறிக்கை என்பது ஒரு தேசத்தின் அல்லது மாநிலத்தின் பொருளாதார நிலையை வெளிப்படுத்துவதாக மட்டும் அமைவதில்லை. அடுத்த ஓராண்டில், அந்த அரசு எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க இருக்கிறது, என்னென்ன சமுதாய மற்றும் மக்கள் நலப் பணிகளை முன்னிறுத்திச் செயல்பட இருக்கிறது, கனரகத் தொழில், சிறு தொழில்கள், விவசாயம், ஏற்றுமதி, சேவையை முன்னிறுத்தும் தொழில்கள் ஆகியவற்றிற்கு எந்தெந்த அளவுக்கு ஊக்கம் அளிக்கப் போகிறது என்பதை எல்லாமே தெளிவாக்கும் ஓர் "எக்ஸ்ரே'தான் நிதிநிலை அறிக்கை என்பது. கடந்த முறை தேர்தலுக்கு முன்னால், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஓர் இடைக்கால நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தபோது இருந்த நிலைமையே வேறு. தேர்தலில் வெற்றி பெற்று, கணிசமாகக் கூட்டணி நிர்பந்தங்கள் தளர்ந்து விட்டிருக்கும் நிலையில் ஒரு நிதிநிலை அறிக்கையை பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்திருக்கிறார். நிதிநிலை அறிக்கையைப் படித்துப் பார்த்ததும் பளிச்சென மனதில் பட்ட விஷயங்கள் இரண்டுதான். முதலாவது, பரந்த பாரத தேசத்தின் வருட வரவு செலவு ரூ. பத்து லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது என்பது. அடுத்தது, கடந்த நிதி ஆண்டில் 6.2 சதவீதமாக இருந்த பற்றாக்குறை இந்த ஆண்டு 6.8 சதவீதமாக உயரும் என்பது. பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதில் தவறு இல்லைதான். அதேநேரத்தில், நிதிப் பற்றாக்குறை என்பது வளர்ச்சிக்கும், மூலதனத்துக்கும் வழிகோலாமல், விலைவாசியை அதிகரிக்க மட்டுமே உதவும் என்றால், அதைவிட ஆபத்தான விஷயம் எதுவும் இருக்க முடியாது. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதற்காக, ரூ. 39,100 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மேலும் 4.74 கோடி குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பரவலாக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், கிராமப்புற வீட்டு வசதிக்காக ரூ. 2,000 கோடி தேசிய வீட்டுவசதி வங்கிக்கு ஒதுக்கி இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம். அதேபோல, நகர்ப்புற ஏழை எளியவருக்கான வீட்டு வசதிக்காக ரூ. 3,973 கோடி ஒதுக்கி இருப்பதும் நல்லதொரு முயற்சி. இந்த ஒதுக்கீடு தெருவோரவாசிகளையும், குடிசைவாழ் மக்களையும் சுகாதாரமான வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளில் வாழ வழிகோலுமானால், நிதியமைச்சர் புண்ணியம் கட்டிக் கொள்வார். அரசு, மக்களின் நல்லாதரவைப் பெறும். குறித்த காலத்தில் கடனைத் திருப்பி அளிக்கும் விவசாயிகளுக்கு சிறப்புச் சலுகை என்பது, வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளைக் கேலி செய்வது போன்றது. குறித்த நேரத்தில் கடனுதவி கிடைக்க வழி செய்வதும், நீர்ப்பாசன வசதி, உரம், விதை போன்றவை கிடைக்க வகை செய்வதும்தான் அவர்களது அத்தியாவசியத் தேவை என்பதை எப்போதுதான் நமது ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளப் போகிறார்களோ, தெரியவில்லை. தனிநபர் வருமான வரியின் வரம்பைக் கண்துடைப்புக்காக உயர்த்தி இருப்பதும், தனிநபர் வருமான வரியிலான 10 சதவீதம் கூடுதல் வரியை அகற்றி இருப்பதும், அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் கண்துடைப்பு சலுகைகளாகும். ஃப்ரின்ஞ் பெனிபிட் வரி எனப்படும் கூடுதல் சலுகைகளுக்கான வரியை அகற்றி இருப்பது, உயர் வருவாய்ப் பிரிவினரின் வரவேற்பைப் பெறும். தொழில்துறை வளர்ச்சிக்கு இந்த நிதிநிலை அறிக்கை எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது சந்தேகமாக இருக்கிறது. ஏற்றுமதியை முன்னிறுத்தும் உற்பத்தியாளர்களுக்கு அடுத்த 9 மாதத்துக்கு 2 சதவீதம் வட்டிச் சலுகை என்கிறார் நிதியமைச்சர். தொழிற்சாலையை நடத்தவே தத்தளிக்கிறார்கள் பலர். அவர்களைக் கைதூக்கி விடுவதை விட்டுவிட்டு, ஏற்றுமதியை ஊக்குவிக்க வட்டிச்சலுகை என்பது ஏமாற்று வித்தையல்லவா? அப்படியே வட்டியில் சலுகை தருவதாக இருந்தாலும் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகளுக்குத் தராவிட்டால், எப்படி தொழில் வளர்ச்சி அதிகரித்து பொருளாதாரம் தேக்கத்திலிருந்து விடுபடும்? தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், காப்பீட்டுக் கழகங்களும் தனியார் மயமாகாது என்று கூறியிருக்கிறார். மகிழ்ச்சி. அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகளுக்கு முழு வரி விலக்கு அளித்திருக்கிறார். அரசுக்கு இகழ்ச்சி! சிறிய நகைக் கடைகளும், தனியார் ஆசாரிகளும் தயாரிக்கும் தங்க நகைகளுக்கு வரியுண்டு. ஆனால், பெரிய நிறுவனங்களும், நகைக் கடைகளும் தயாரித்து விற்பனை செய்யும் நகைகளுக்கு வரி கிடையாது. இந்த அறிவிப்பு, சர்வதேச நகை தயாரிப்பாளர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கும் முயற்சியோ என்று கருத இடமிருக்கிறது. அடிப்படையே ஆட்டம் காணும் நிலையில் பொருளாதாரம் இருக்கும்போது இப்படி ஒரு முயற்சி தேவைதானா? அனுபவசாலியின் நிதிநிலை அறிக்கையாயிற்றே; அதுவும், பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மீண்டு அனைத்துத் துறைகளையும் புத்துணர்வு பெறச் செய்ய வேண்டிய நேரமாயிற்றே; கூட்டணி நிர்பந்தங்களில்லாமல், துணிந்து பல முயற்சிகளையும், புத்திசாலித்தனமான தீர்வுகளையும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் முன்வைப்பார் என்று எதிர்பார்த்தால், எதிர்பார்ப்புகள் பொய்த்தனவே...!

கருத்துகள்

நன்றாக அலசி ஆராய்ந்து ஆசிரியருரை எழுதப்பட்டுள்ளது. எனினும், கள்ளப்பணம் பெருகுவதைத் தடைசெய்யாமலும் மாத ஊதியம் பெறுவோரிடம் மட்டும் வருமானவரியைக் கசக்கிப்பிழிவதை நிறுத்தாமலும் போடப்படும் எந்த ஒரு நிதிநிலை அறிக்கையும் கண்டிக்கத்தக்கதே! தேர்தல்தான் முடிந்து விட்டதே! எதிர்பார்ப்புகள் வைத்த நம் மீதுதான் தவறு. அடுத்து நாடாளுமன்றத் தேர்தல வரும் பொழுது அளிக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறலாம்! கனவுகள் மெய்ப்படலாம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 4:48:00 AM

I condomn Dinamani for hailing the govt. not to privitise the banks and insurance companies. Did Dinamani forgot how much money Indian Bank received from the Central Govt. to survive because of the scandals. Why the Air India Maharaja became Air India begger. Govt. has to just run the govt. and not to run the business. Do you think the I.A.S. officiers are experts in doing business? They are useless fellows. This has proven again and again.

By ravi
7/7/2009 1:39:00 AM

சீர்காழியில் தமிழிசை மூவர் விழா தொடக்கம்
தினமணி


சீர்காழி, ஜூலை 6: நாகை மாவட்டம், சீர்காழியில் தமிழிசை மூவர் விழா சட்டைநாதர் திருக்கோயில் வளாக இசையரங்கில் திங்கள்கிழமை மாலை தொடங்கியது. விழாவை தமிழக பால் வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன் தொடக்கிவைத்தார். சீர்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.
கருத்துக்கள்

கலைஞர் கடந்த முறை ஆட்சியில் இருந்தபொழுது சீர்காழி மூவருக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்து அடிக்கல் நாட்டப்படவும் வகை செய்தார். ஆட்சியில் இருந்தவரை மண்டபம் உருவாக ஒன்றும் செய்யவில்லை. ஆட்சி போனதும் இசைவேளாளர் மாநாட்டில் மூவரின் சிறப்பு அப்போதைய ஆட்சியில் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி மூவரின்புகழ் பரவ நாடெங்கும் விழா கொண்டாடுதல், மணி மண்டபம் எழுப்பல் முதலான குறித்தும் பேசினார். மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார். எனினும் மணிமண்டபப் பணி தொடக்க நிலையிலேயே உள்ளது. தமிழிசையில் ஆர்வம் காட்டும் கலைஞரின் ஆட்சியிலேயே இத்திட்டம் ஊறப் போடப்பட்டது எனில் யார்தான் ஆர்வம் காட்டுவர்? குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்று சீர்காழி சட்டநாதர் கோயிலுக்குள் மட்டும் மூவர் விழாவைக் கொண்டாடி என்ன பயன்?


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 4:34:00 AM
வன்னியருக்காக மீண்டும் போராட்டம்:
இராமதாசு
தினமணி


செஞ்சி, ஜூலை 6: வன்னியர்கள் அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்படுவதால், மீண்டும் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் செஞ்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பேசினார்.

கருத்து

மிழ் மக்களின் நலனுக்காகப பல செயல் திட்டங்களை அறிவிக்கும் மரு.இராமதாசு அவர்களே! வன்னியர் கட்சியாகச் செயல்பட்டு உங்களை ஏன் குறுக்கிக் கொள்கிறீர்கள்? சாதிப் போராட்டம்தான் அரசியலில் சாதிப்பதற்கு உதவும் எனத் தவறாகக் கருதுகிறீர்களா? நீங்கள் வன்னியரா? தமிழரா? என்பதை முடிவெடுத்துக் கொண்டு அரசியலில் இனி ஈடுபடுங்கள். உங்கள் 'சேவை' தமிழருக்குத் தேவை என விழையும்
இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 4:03:00 AM
பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்வது சரிதானா?:
அமைச்சர் கேள்வி
தினமணி


சென்னை, ஜூலை 6: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பயிற்சி டாக்டர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தம் செய்வது சரிதானா என்று சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருத்து
''மக்களாட்சி முறையில் கிளர்ச்சிகள் என்பன குறைகளைத் தெரிவிக்கும் ஒரு கருவி. ஆட்சியாளர்கள் கிளர்ச்சியாளர்களை ஒடுக்காமல் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைக் களைய வேண்டும்'' என்றார் செந்தமிழ்ச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள். எனவே, பயிற்சி மருத்துவர்களின் குறைகளைக் களையாமல் அவர்கள் போராட்டத்தை நாடும் வகையில் நடந்து கொண்ட அரசு மீதுதான் குற்றமே தவிர, பயிற்சி மருத்துவர்கள் மீதன்று. தனியாருடன் ஒப்பிடாமல் முன் மாதிரியாக அரசு இருக்க வேண்டும். வரிப்பணம் செலுத்தப்படுவது அரசிற்கேயன்றித் தனியாருக்கு அல்ல. எனவே, ஏட்டுப் படிப்பை முடித்து விட்டு நாட்டுப் பணியைத் தொடங்கும் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் தொகையைப் பிச்சையாகக் கருதாமல் உழைப்பிற்கான ஊதியமாகக் கருதுவதே முறையாகும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/7/2009 3:50:00 AM










கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத தமிழ் இளைஞர்கள் எதிர்த்தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பித்தனர். யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள நெல்லியடி என்ற இடத்தில் நான்கு போலீஸôர் கொலை செய்யப்படுகின்றனர். மூன்று போலீஸ் அதிகாரிகள் கடுமையாகக் காயம் அடைகின்றனர். ஒருவர் இருவராகத் தமிழர்களைக் கொன்ற இனவாதம் இப்போது வேறு உருவம் எடுத்துக் கும்பல் கும்பலாக தமிழர்களைக் கொல்லும் போக்கு ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் படுபயங்கர நிகழ்ச்சிகளையும், தமிழர்களின் வேதனையையும் முழுமையாகச் சொல்வதற்கு இந்தப் புத்தகம் போதவே போதாது. மேலும் அந்தக் கொடூரத் தாக்குதல்களைச் சரியாகச் சொல்ல எந்த மொழியாலும் முடியவும் முடியாது. ஆவேசத்தின் வேகத்திலும், உணர்ச்சியின் உச்சகட்டத்திலும் இருந்த தமிழ் இளைஞர்கள் ராணுவத்திற்கும் போலீஸýக்கும் எதிராகப் பல இடங்களில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர் (விடுதலைப்புலிகள் வரலாறு 1975-84). சாகவச்சேரிப் போலீஸ் ஸ்டேஷன் தாக்கப்பட்டு மூன்று போலீஸ் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டு, பலர் காயம் அடைகின்றனர். போலீஸ் ஒடுக்குமுறையைத் தீவிரமாகக் கையாண்ட பருத்தித்துறைக் காவல் நிலைய அதிகாரி போலீஸ் நிலைய வளாகத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடன் ஜீப் டிரைவர் ராஜபட்சவும் கொல்லப்பட்டார். உமையாள்புரம், பரந்தன் என்ற பகுதியில் ஒரு ராணுவ லாரி தாக்கப்பட்டு ராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் தீவிர மோதல் ஏற்பட்டுப் பல ராணுவத்தினர் கொலை செய்யப்பட்டும், பலர் காயத்துடனும் தப்பி ஓடுகின்றனர். யாழ்ப்பாணம் தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காகக் கூட்டப்பட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட மாநாடு-உள்ளே நடந்து கொண்டிருக்கையில் செயலகக் கட்டிடம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது (விடுதலைப்புலிகள் வரலாறு 1875-84). ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று தீவிர ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேர் உள்ளூர் தேர்தல் வேட்பாளர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்கள் பலர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்கின்றனர். அக்டோபர் 15-ஆம் நாள் ராணுவத்தில் மூவர் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இதை ஒட்டி ஆத்திரம் கொண்ட ராணுவம் வெறித் தாக்குதல் நடத்தியது. சாலையில் போவோர் வருவோரைத் தாக்குவது, பஸ், ரயில் வண்டியில் பயணம் செய்வோரை வழிமறித்துத் தாக்குவது, கடைகளைச் சூறையாடுவது போன்ற அதிரடித் தாக்குதல்களை நடத்தியது ராணுவம். அக்டோபர் 21-ஆம் நாள் கிளிநொச்சியில் ஒரு வங்கி கொள்ளை அடிக்கப்பட்டு, கொள்ளை அடித்தவர்கள் வெளியேறியபோது ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். இது நிலைமையை மோசமாக்கி மேலும் ராணுவத்தினரின் கொலை வெறி அதிகமாகியது. அக்டோபர் 25-ஆம் நாள் இங்கிலாந்து அரசி இலங்கை வரவேண்டி இருந்ததால் ராணுவத்தினர் அரசினரால் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டனர். அதேநேரத்தில், தமிழர்களும் சிங்களவர்களும் வாழும் பகுதிக்கு இடையில் இருந்த எல்லை மாவட்டமான வவுனியா மாவட்டத்தில் ராணுவமும் போலீஸýம் அடக்குமுறை அட்டகாசத்தைத் துவக்கியது. 1970-ஆம் ஆண்டு முதல் இந்தியத் தமிழர் குடும்பங்களும் இலங்கைத் தமிழர் குடும்பங்களும், மலைப்பகுதித் தோட்டங்களில் இருந்தும், மற்றும் தென்பகுதியில் இருந்தும் கலவரங்களால் பாதிக்கப்பட்டு வீடு, சொத்துச் சுகங்களை இழந்து வவுனியா மாவட்டத்தில் தங்கி வாழ முயற்சி செய்து கொண்டிருந்தனர். இங்கு அரசின் பயங்கரவாதம் கட்டவிழ்க்கப்பட்டது. ஏற்கெனவே கலவரங்களில் குடும்பங்களை இழந்து பாதிப்படைந்திருந்த இவர்கள் திரும்பவும் ஒரு வன்முறைத் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டுச் சின்னாபின்னமானார்கள். இவர்களில் பெரும்பாலோர் மகத்தான பொறுமையும் தாங்கும் சக்தியும் கொண்டிருந்ததால்தான் இந்த மோசமான சூழ்நிலையில் தாக்குப் பிடிக்க முடிந்தது. மறுபடியும் இவர்களைக் குடியமர்த்துவதில் பெரும் தொல்லைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பல்வேறு நிறுவனங்கள் இவர்களுக்கு உதவினர். பல பகுதியில் இருந்து அகதிகள் மீண்டும் இங்கு கொண்டு வரப்பட்டுக் காந்தீயம் நிறுவனத்தால் குடி அமர்த்தப்பட்டனர். அகில இலங்கை விவசாயக் காங்கிரஸ் மூலமாகவும் அகதி முகாம் அமைக்கப்பட்டது. இந்தக் கலவரங்களுக்குப்பின் நாட்டின் பல பகுதிகளிலும் அகதிகள் முகாம்கள் தோன்றின. நவம்பர் மாத முடிவில் இப்பகுதியில் காடுகளில் தங்கி இருக்கும் தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் இப்பகுதியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையில் ராணுவம் இறங்கியது. பண்ணைகளின் உள்ளே புகுந்து அகதிகளை அடித்து நொறுக்கி, கைது செய்தபோது இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர். சமூக சேவகிகள் தாக்கப்பட்டனர்; மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர். இந்தக் கலவரங்களை அரசு தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்ததற்கு முக்கியமான காரணங்கள்:- ஒன்று, தொடர்ந்து இனவாத ஆளுமையை நிலைநாட்டிக் கொள்ளுவதற்கு. இரண்டாவதாக, நாடு தழுவிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களைத் திசை திருப்ப. மூன்றாவதாக, புதிய அரசின் பொருளாதாரத் திட்டங்களின் சீர்கேடுகளை மறைத்துக் கொள்ள! இதுவரை காணாத மிகப் பெரிய பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளை அரசு சந்தித்துக் கொண்டிருந்தது. இவைகளில் இருந்து மக்களைத் திசை திருப்ப இந்த அணுகுமுறை உதவியது. தேசிய இனப்பிரச்னைக்கான கேள்வியில் சிங்கள பாசிச ராணுவ பயங்கரவாதம் மக்களைப் பெருமளவில் இனப்படுகொலை செய்வதை மட்டுமே தனது ஒரே தீர்வாக வைத்திருந்தது. சிங்கள ஆட்சியாளர்கள் மிகப் பெரும் அளவிலான மக்கள் படுகொலைகள், உடமைகளைச் சேதப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் தமிழ் மக்களின் சுதந்திரத் தேசிய இன உணர்வை நசுக்கிவிடலாம் என்று கனவு கண்டதும் இந்தத் தொடர் வன்முறைக்கு ஒரு காரணமாகும். மேலும் ஓர் ஆய்வாளர் குறிப்பிடுவதைப் போல், சேனநாயக்கா (முன்னாள் பிரதம மந்திரி) சட்டங்களின் மூலம் தமிழர்களை ஒடுக்க ஆரம்பித்தார். பிறகு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தமிழர்களைக் கூட்ட வன்முறை (mass violence) மூலம் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் சித்திரவதைகள் செய்தார். ஆனால் ஜே.ஆர். ஜெயவர்த்தன எல்லாவற்றிற்கும் மேலாக ஒருபடி மேலே சென்று, ஒரு பாசிசவாதியாக மாறி, அரசு ஆயுத சக்திகளின் பயங்கரவாதத்தின் மூலம் தமிழர்களை ஒடுக்க நினைக்கிறார்.* இவையெல்லாம் தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி ஈழத்தைப் பெறுவதையும், தமிழ் மக்களின் கெüரவம், சுதந்திரம், உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதையும், மதச்சிறுபான்மையினரின் சுயபாதுகாப்பு உரிமையையும் ஒடுக்குவதற்கு உருவான ஒரு புதிய வடிவமும் ஆகும். * கெயில் ஓம் விடட் (Gail Om Vedtt) Article in Frontier, Calcutta, Sept. 83.

திங்கள், 6 ஜூலை, 2009

ஈழப் போராட்டம் மீண்டும் தொடங்கும்:
பழ. நெடுமாறன்
தினமணி







திருநெல்வேலி, ஜூலை 5: ஈழப் போராட்டம் மீண்டும் தொடங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: தனி ஈழத்துக்காக கடந்த 7 மாதங்களாக தமிழகத்தில் ஆறரை கோடி தமிழர்களும் ஒன்றுபட்டோம், போராட்டம் நடத்தினோம், ஆர்ப்பாட்டம் நடத்தினோம், ஆனால், மத்திய அரசின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை. சீக்கிய மதத் தலைவர் ஐரோப்பாவில் கொல்லப்பட்டதற்காக பஞ்சாப் மாநிலத்தில் அந்த மாநில மக்கள் நடத்திய போராட்டத்துக்கு, மத்திய அரசு அடிபணிகிறது. மும்பையில் பிகார் இளைஞர் தாக்கப்பட்டதற்கு, அந்த மாநில மக்கள் நடத்திய போராட்டத்துக்கு மத்திய அரசு அடிபணிகிறது. ஆனால், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 3 லட்சம் தமிழர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு உள்ளனர். இதைக் கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு கேட்டும் தமிழர்கள் நடத்தும் போராட்டத்துக்கு மட்டும் மத்திய அரசு செவிமடுக்கவில்லை. மத்திய அரசுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுகிறது. இதனால் தமிழக மக்களின் போராட்டம் வீணாகிக் கொண்டிருக்கிறது. ஈழப் போராட்டத்தில், இப்போது பின்னடைவு ஏற்பட்டாலும், மீண்டும் போராட்டம் தொடங்கும். அதற்குத் தலைமை தாங்க பிரபாகரன் விரைவில் வருவார் என்றார் நெடுமாறன்.
எந்த நகரமன்றத்திலும் இனி எனது படத்தை வைக்க தீர்மானம் கூடாது: taalin

தாலின் கண்டிப்பு
தினமணி



நல்ல முடிவு. பாராட்டுகள்! இதே போல் வருகையின் பொழுது வெட்டுருக்கள் (கட்அவுட்கள்), பதாகைகள், சுவரொட்டிகள் மூலம் வரவேற்பு தரும் ஆடம்பரப் போக்கையும் நிறுத்த வேண்டுகோள் விடவேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2009 3:07:00 AM

தலையங்கம்:வரி விலக்கல்ல, கேலிக்கூத்து!



முதல்வர் மு. கருணாநிதி கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் கலைத் துறை மீது அவருக்கு அளவு கடந்த பாசம் உண்டு என்பதும் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதை நிரூபிக்க மக்கள் பணத்தில் இந்த அரசு அடிக்கடி கை வைப்பது எந்த ஊர் நியாயம் என்பதுதான் தெரியவில்லை. சமீபத்தில், தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதும் திரைப்படத் தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு அளிக்கப்படும் கேளிக்கை வரிவிலக்கு தொடரும் என்பதை சூசகமாகச் சொல்லியிருக்கிறார். முன்னதாக, திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் "1939-ம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள் வரிச் சட்டம்' வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழில் பெயர் சூட்டப்படும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழுமையான விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இது தொடர்பான முழுமையான அரசாணை 2006, நவம்பர் 20-ல் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்புக்கு முன் தமிழக அரசுக்கு கேளிக்கை வரி வருவாயாக 2003 - 04-ம் நிதியாண்டில் ரூ. 75.07 கோடி கிடைத்தது. இதில் திரைப்படங்கள் மூலமான வருவாய் மட்டும் ரூ. 67.71 கோடி. ஆனால், அறிவிப்புக்குப் பின் இந்த வருவாய் 2006 - 07-ல் ரூ. 24.9 கோடியாகவும் 2007 - 08-ல் ரூ. 16.35 கோடியாகவும் குறைந்தது. ஆக, இந்த அறிவிப்பினால் கேளிக்கை வரி வருவாயில் சராசரியாக ஆண்டுக்கு ரூ. 50 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. விழா மேடையிலேயே, கேளிக்கை வரி வருவாயின் ஒரு பகுதி உள்ளாட்சி நிர்வாகத்துக்குச் செல்வதைக் குறிப்பிட்டுள்ள அவர், இந்த வருவாய் இழப்பினால் கிராமப்புற வளர்ச்சிப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதையும் தமிழக அரசு ரூ. 50 கோடி சுமையைத் தாங்கிக்கொண்டிருப்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார். ""எதை எதையோ தாங்கிக்கொண்ட இந்த இதயம், இந்த ரூ. 50 கோடியையா தாங்கிக்கொள்ளாமல் போய்விடப் போகிறது'' என்று பேசி முடித்திருக்கிறார். உண்மையிலேயே இந்த வருவாய் இழப்பைத் தாங்கிக்கொள்வது அவருடைய இதயமாக மட்டும் இருந்தால், இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம்தான். ஆனால், உண்மை அப்படியில்லையே? முதலில், தமிழ் வளர்ச்சி என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பே அபத்தமானது. தாய்மொழிப் பற்று ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்க வேண்டிய இயல்பான குணம். தமிழ்த் திரைத்துறையினரோ அதற்கே விலை பேசுகின்றனர். 2008-ல் 84 தமிழ்ப் படங்கள் வெளியாயின. இவற்றில் 7 படங்களே வெற்றி பெற்றதாகவும் ரூ. 420 கோடி முதலீடு செய்ததில் ரூ. 320 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திரைத்துறையினர் கூறுகின்றனர். இவர்கள் வெளியிடும் சகல குப்பைகளுக்கும் மக்களாகிய நாம் வரிப்பணத்தில் இருந்து நட்டத்தை ஈடுகட்ட வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது. ""சின்னப் படம் என்றால், ரூ. 5 கோடி பட்ஜெட்; 75 பிரின்ட்; ரூ. 20 கோடி டார்கெட்; பெரிய படம் என்றால், ரூ. 25 கோடி பட்ஜெட்; 600 பிரின்ட்; ரூ. 100 கோடி டார்கெட்.'' அதாவது, ஒன்றை வைத்து நான்கைச் சுருட்டும் வித்தை. இதை எந்தப் பெயரிட்டு அழைப்பது? கடுமையான கட்டுப்பாடுகளும் பொருளாதாரத் தட்டுப்பாடும் உள்ள ஈரானிலிருந்தும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்தும் அற்புதமான திரைப்படங்கள் வருகின்றன; அந்த மக்களின் உண்மையான வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இங்கும் வங்கம், மலையாளத்தைத் தாண்டி ஹிந்தியில்கூட அவ்வப்போது நல்ல முயற்சிகள் தென்படுகின்றன. ஆனால், தமிழ்த் திரைப்படங்களோ நடிகைகளின் சதையில் புதைந்துகொண்டு வெளியே வர மறுக்கின்றன. தம்முடைய சீரழிவை சமூகத்தின் மீதும் அப்பிவிடுகின்றன. எப்போதாவது தண்டனைக்கும் ஆளாகின்றன. திரைப்படம் என்பது ஒரு தொழில் என்கிற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்று விரும்புபவர்கள், ஏனைய தொழில்களைப்போல லாப நட்டத்தைத் தாங்களே தாங்கிக் கொள்வதுதானே முறை? சமுதாய விழிப்புணர்ச்சியோ, சமூகப் பிரக்ஞையுடன் கூடிய பொதுநலச் சிந்தனையோ இந்தத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு இருக்குமேயானால், அதற்கு வரி விலக்கு அளிப்பது நியாயம். தமிழில் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு, பாதிக்கு மேல் ஆங்கில வசனங்களும், காட்சிக்குக் காட்சி தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான விரசமும் மட்டுமே தமிழ்த் திரைப்படங்களாக இருக்கும்போது வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்பட வேண்டிய வரிப்பணம் வீணாக வேண்டிய அவசியம்தான் என்ன? முதல்வர் தன் கலைக் குடும்பப் பாசத்தினால் திரையுலகத்தின் நஷ்டத்தை எல்லாம் மக்கள் தலையில் கட்டக் கூடாது. கிராமப்புற வளர்ச்சிக்கும், நகர்மன்றங்களின் செயல்பாட்டுக்கும் பயன்படும் கேளிக்கை வரியிலிருந்து திரைப்படங்களுக்குத் தரப்படும் விலக்கு உடனடியாக அகற்றப்பட வேண்டிய ஒன்று. தமிழ்ப் பெயர் வைப்பதால் கேளிக்கை வரிச் சலுகை என்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
கருத்துக்கள்

1/2) தலையங்கத்தில் குறிப்பிடுவது போன்ற ஒரு பக்கத்தைப் பலரும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு கோணத்தில் இக்கருத்துகள் சரியே. ஆனால், தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு அளிப்பதாக அறிவித்த பின்பு படங்களின் பெயர்களாவது நலல தமிழில் வந்துள்ளமையை மறக்கக் கூடாது. அதே நேரம் நல்ல தமிழில் பெயர் சூட்டப்படாத படங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் வரிவிலக்கு அளித்துள்ள கொடுமையும் நடந்துள்ளது. எனவே, இத்திட்டம் கேலிக் கூத்தாக உள்ளது. எனவே, உள்ளபடியே நல்ல தமிழில் பெயர் சூட்டப்பட்ட படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு தரவேண்டும். அதே நேரம், படங்களில் காட்டப்படும் பெயர விவரங்களும் தமிழிலும் தமிழ் முதல் எழுத்துகளுடனும் இருந்தால மட்டுமே இவ்வரிவிலக்கு அளிக்கப்படும் என நிபந்தனை விதிக்க வேண்டும். (தொடர்ச்சிகாண்க 2/௨


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் )

By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2009 1:50:00 AM

2/2) (1/2 இன் தொடர்ச்சி) இவ்விலக்கு தவிர, ஆசிரிய உரையில் குறிப்பிட்டாற் போன்று உரையாடல்கள் பிழையற்ற நல்ல தமிழில் இருந்தாலும் பண்பாட்டை எதிரொலிக்கும் வகையிலும் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் முறையிலும் அமையும் படங்கள் மட்டுமே அரசின் பிற பரிசுத் திட்டங்களுக்குத் தகுதி உடையன என்றும் இத்தகைய படங்களில் பங்கேற்ற கலைஞர்களுக்கு மட்டுமே அரசின் விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்க வேண்டும். ஆனால், அரசில் தொடர்புடையவர்கள், அவர்கள் குடும்பத்தினர் உருவாக்கும் படங்களே இவ்றறிற்கு எதிராக படைக்கப்படுகையில் அரசு இம்முடிவை ஏற்குமா என்பது ஐயப்பாடே! இத்தகைய நல்ல சூழலை உருவாக்குவது மக்கள் கைகளில்தாம் உள்ளது.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/6/2009 1:49:00 AM

Very good. Chief Minister should read and realize this. Real good Tamil movies does not get recognition because of heroism in our film.

By somasundaram
7/6/2009 12:11:00 AM

ஞாயிறு, 5 ஜூலை, 2009

நேபாளத்தில் அமைச்சரின்
இந்திப் பேச்சுக்கு எதிர்ப்பு
தினமணி


காத்மாண்டு, ஜூலை 5: நேபாளத்தில் அமைச்சர் இந்தியில் பேசியதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நேபாளத்தைச் சேர்ந்த காம்பைன் கல்லூரியின் 90 சதவீத பங்குகளை கர்நாடகத்தைச் சேர்ந்த மணிப்பால் கல்விக் குழுமம் வாங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சி காத்மாண்டுவில் இன்று நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில், தெராய் மாதேசி ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும், கல்வி அமைச்சருமான ராமச்சந்திர பிரசாத் குஷ்வாஹா இந்தியில் பேசத் தொடங்கியவுடன் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைக் கண்டித்த அமைச்சர், "இதற்கு முன்னர் பேசியவர்கள் ஆங்கிலத்தில் பேசியபோது அமைதியாக இருந்தீர்கள். நான் இந்தியில் பேசும்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறீர்கள்? தெராய் பகுதியில் பொது மொழியாக உள்ள இந்தியில்பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது' என்றார்.

கருத்துக்கள்

தெராய்பகுதியில் இந்தி இருந்தாலும் அவர் கலந்துகொண்ட பகுதியில் நேபாள மொழி இருக்கையில் நேபாளம் தெரியாவிட்டால் பொதுவான மொழியான ஆங்கிலத்தில் பேசலாமே! வீண் மொழிச்சிக்கலும் இந்தித்திணிப்பும் எதற்கு? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 7:33:00 PM

யூலை 5 கரும்புலிகள் நாள்
பிரசுரித்த திகதி : 05 Jul 2009

விடுதலை நடவடிக்கை” (Operation Liberation) என்ற பெயரில் சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தின் ஒருபகுதியான வடமராட்சியைக் கைப்பற்ற 1987 இன் நடுப்பகுதியில் நடவடிக்கையொன்றை மேற்கொண்டு சில இடங்களையும் கைப்பற்றியிருந்தது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம் என்ற பாடசாலையில் முகாமிட்டிருந்த இராணுவத்தினரை அழிக்கும் நோக்கில் வெடிமருந்து நிரப்பிய வாகனத்தோடு சென்று தாக்குதல் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்குத் தன்னைத் தயார் செய்தவன்தான் கப்டன் மில்லர்.

திட்டமிட்டதைவிட இன்னும் உள்ளே சென்று இரு கட்டடங்களுக்கிடையில் வாகனத்தை நிறுத்தி வெடிக்க வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதிகாரபூர்வ செய்தியின்படி 39 இராணுவத்தினர் அத்தாக்குதலிற் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அத்தொகை மேலும் அதிகமென்றே கருதப்பட்டது. இரு கட்டடங்களும் இடிந்து தரைமட்டமாகியிருந்தன. 1995 யாழ் இடப்பெயர்வு வரை அவை துப்பரவாக்கப்படாமல் அப்படியே இருந்தன.

அத்தாக்குதல் மிகப்பெரும் அதிர்ச்சியைச் சிங்களத்தரப்பில் ஏற்படுத்தியிருந்தது. அதுவரை அப்பெருந்தொகையில் இராணுவம் கொல்லப்பட்டதில்லை. மேலும் இனிமேலும் இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற சூழ்நிலையில் இராணுவம் மிக அதிகமாகவே வெருண்டிருந்தது. ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் நிறுத்தப்பட்டது.

எம் தமிழின விடிவிற்காய் தம் உயிரைத் தியாகம் செய்த கரும்புலிகள் தினமான இன்று, நாமும் உறுதியாக அவர்கள் விரும்பிய இலக்கை அடையப் போராடுவோம்.

மதுரை, ஜூலை 5-

மதுரை மாவட்ட மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ்ஈழ ஆதரவாளர்கள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்ஈழம் மலரும் என்ற தலைப்பில் ஆய்வு அரங்கம் நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

இலங்கையில் போரை நிறுத்த கோரி தமிழ்நாட்டில் கடந்த 6 மாத காலமாக அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தியது. போரை நிறுத்த கோரி தமிழகம் உள்பட பல்வேறு நாடுகளிலும் 18 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு பின்னரும் போரை நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 20 நாடுகள் கூட்டணியாக சேர்ந்து போரை நடத்தி சிங்கள அரசு வெற்றி பெற்று இருப்பது வெற்றி அல்ல. இது தற்காலிக வெற்றிதான்.

இப்போது இலங்கையில் சீனா ஆயுத கிடங்கும் அமைத்து வருவதோடு, பெட்ரோல், எண்ணை கிணறு அமைக்கும் ஒப்பந்தம் செய்து உள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங்காலையோ, சோனியா காந்தியாலையோ தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் பத்திரமாக இருக்கிறார் என்பதை உறுதியாகவும், திட்டவட்டமாகவும், ஆணித்தரமாகவும் கூறுகிறேன். இதற்கு முன்பு பிரபாகரன் தலைமையில் விடுதலைப்புலிகள் 4 முறை வெற்றி பெற்றது. அதுபோல மீண்டும் வெற்றி பெற்று பிரபாகரன் தலைமையில் தமிழ்ஈழம் அமையும். இது உறுதி.

விடுதலைப்புலிகள் தீவிரவாத இயக்கம் அல்ல. தீவிரவாத இயக்கம் என்றால் மக்களை குண்டுவீசி கொன்று இருக்க வேண்டும். ஆனால் விடுதலைப்புலி இயக்கம் அப்படி செய்யவில்லை. சிங்கள மக்கள் மீது குண்டு வீசினார்களா? இல்லையே விடுதலைக்காக தான் போராடி இருக்கிறார்கள்.

ஆனால் விதிமுறைகளுக்கு மாறாக ராஜபக்சே அரசுதான் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசி கொன்றது. இதில் யார் தீவிரவாதி. இலங்கை அரசா? விடுதலைப்புலிகளா? எனவே இலங்கை அரசு மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.








இலங்கையில் 1918-இல் "இலங்கை தேசிய காங்கிரஸ்' எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து வைத்த சர்.பொன்னம்பலம் அருணாசலம், பின்னாளில் அதில் சிங்களவரின் ஆதிக்க வெறியை எதிர்த்து, "தமிழ் லீக்' (1924) என்னும் அமைப்பைக் கண்டார். இதன் நோக்கம் தமிழ் இனத்தின் தனித்துவம் காக்க "தனிநாடு' வேண்டும் என்பதாகும்.

பின்னர் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் அமைந்த ஆணைக்குழுவின் முன் இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை ஒரே குரலில் எடுத்துக்கூற "இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்' (1944) நிறுவப்பட்டது. அதன் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம். அவர் தனது வாதங்களை ஆதாரத்துடன் எடுத்து வைத்த போதிலும் சோல்பரிக் குழுவினர் சிங்களவரின் கோரிக்கைக்கே இணங்கினர். பின்னர் ஏற்பட்ட சுதந்திர அரசில் பங்கேற்பது குறித்தும், இந்திய-பாகிஸ்தானியர் பிரஜா உரிமைச் சட்டத்தை ஆதரிப்பது தொடர்பாகவும் இலங்கை தமிழ்க் காங்கிரஸ் இரண்டாகப் பிளவுபட்டு, இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949-இல் மலர்ந்தது. தந்தை செல்வா தலைமையில் இக்கட்சி தமிழர்களின் சமவாழ்வு மற்றும் உரிமைகளுக்காகப் போராடியும் கேட்காமல் 1972-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி புதிய சிங்கள புத்தக் குடியரசு அமைந்தது. இதன் மூலம் தமிழரின் பாரம்பரியத் தாயகத்தை இழப்பதற்கான சிங்கள அரசு ஏற்பட்டதும், தமிழ் மண்ணில் சிங்களர் குடியேற்றம் நிகழ்ந்தது. தனி ஆட்சி முறையில் தமிழர்களின் சமநிலை உரிமையும்-மண்பாதுகாப்பும் பறிக்கப்படும் என்பதைக் கண்டுபிடிக்க தமிழர் அமைப்புகளுக்கு மேலும் 24 ஆண்டுகள் பிடித்தன. இந்நிலையில் 1972-ஆம் ஆண்டு அக்டோபர் 3-இல் தந்தை செல்வா, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உதறினார். அப்போது அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது. "இந்நாட்டில், சென்ற 24 ஆண்டுகளாக (1948-1972) நடந்தவற்றை மனதில் கொண்டு தமிழர்கள் இங்கு ஓர் அடிமை இனமாக -அழிவதா அல்லது விடுதலை பெற்ற மக்களாக வாழ்வதா என்ற தமது வருங்காலத்தை முடிவு செய்யும் உரிமை அவர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கை. விடுதலை பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்பேன். இந்தக் கொள்கையில் அரசாங்கமே என்னோடு போட்டியிடட்டும். நான் தோல்வியடைந்தால் என் கொள்கையை விட்டுவிடுகிறேன். அரசாங்கம் தோல்வியடைந்தால் தனது கொள்கையையோ, அரசின் திட்டத்தையோ தமிழர்கள் ஆதரிப்பதாக மேற்கொண்டும் கூறக்கூடாது.' (கு.வே.கி. ஆசான் எழுதிய ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் -1948-1966). செல்வா பதவி விலகியதால் காலியான காங்கேயன்துறை இடைத்தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலும் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் நடந்த தேர்தலில் தந்தை செல்வாவே காங்கேயன்துறை வேட்பாளராக நின்றார். அரசு ஆதரவு கம்யூனிஸ்ட் வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மீண்டும் நாடாளுமன்றத்தில் 1976, பிப்ரவரி 4-இல் செல்வா பேசியதாவது: "இலங்கையில் ஓர் ஆளப்படும் இனமாக வாழும் நிலையைத் தமிழர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அடிமைத்தனத்திற்கு எதிராகப் புரட்சியில் இறங்குவார்கள். எங்கள் இனம் அழிவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு ஒரு தனித் தமிழ்நாட்டை இங்கு நிறுவியே தீருவோம். தமிழ் மக்களின் குரலாக நின்றே இந்த அவையில் இதைக் கூறுகின்றேன்.' (ஈழத்தமிழர்களின் உரிமைப்போர் 1948-1996 கு.வே.கி.ஆசான்). இதனைத் தொடர்ந்து காங்கேயன்துறை, உடுவில், மூதூர், வவுனியா, திருகோணமலை, கோப்பாய், சாவகச்சேரி, உடுப்பிட்டி, பருத்தித்துறை, ஊர்க்காவல்துறை, மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய 12 தொகுதிகளின் நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ஈழ விடுதலைக்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தனர். அத்தீர்மானத்தின் கடைசி வரி இவ்வாறு அமைந்திருந்தது. அது வருமாறு: "காங்கேயன்துறை இடைத்தேர்தலில் மக்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை, விடுதலை பெற்ற அரசுரிமை உடைய, மதச்சார்பற்ற, சமனிய நாடான தமிழ் ஈழத்தை அமைப்பதற்குரிய செயலுரிமையாக ஏற்றுக் கொள்வதென இப்பேரவை தீர்மானிக்கிறது.' 1976 மே 22-இல் சிங்களவர் குடியரசு நாள் கொண்டாட்டத்தை வெகுவிமரிசையாகக் கொண்டாடியபோது, தமிழர் பகுதிகளில் விடுதலை கோரும் அறிக்கையை அ.அமிர்தலிங்கம், வ.ந.நவரத்தினம், க.பொ.இரத்தினம், க.துரைரத்தினம் ஆகிய தமிழர் தலைவர்கள் விநியோகம் செய்தனர். அரசு இவர்களைக் கைது செய்து அரசுத் துரோகக் குற்றச்சாட்டினைச் சுமத்தியது. இத்தலைவர்கள் மீது மேல்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு (பழ்ண்ஹப் ஹற் ஆஹழ்) என்ற சிறப்பு நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களான தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், மு.திருச்செல்வம், வி.எஸ்.ஏ.புள்ளைநாயகம் முதலானோர் குற்றம்சாட்டப்பட்டோர் சார்பில் வாதாடியதையொட்டி, நால்வரும் (1976 டிசம்பர் 10-ம் தேதி) விடுதலை பெற்றனர். பின்னர் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. மலையகத் தமிழர் அமைப்புகளையும் ஒன்றிணைத்து "தமிழர் விடுதலைக் கூட்டணி' (பமகஊ) 1976-இல் அமையப் பெற்றது. 1977 ஏப்ரல் 26-இல் ஈழத் தந்தை செல்வநாயகம் மறைந்தார். அந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் ஈழவிடுதலையை முன்வைத்து "தமிழர் விடுதலைக் கூட்டணி'யினர் போட்டியிட்டனர். தமிழர் பகுதியில் 19 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றனர். ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி (யு.என்.பி.) 140 இடங்களையும் கடந்த நாடாளுமன்றத்தில் 116 இடங்களைப் பெற்றிருந்த ஸ்ரீமாவோ கட்சி எட்டே இடங்களையும்தான் பெறமுடிந்தது. இதன்மூலம் முக்கிய எதிர்க்கட்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணி ஆயிற்று. சிங்கள மேலாதிக்கத்தில் நாட்டம் கொண்ட இனவெறியர்களுக்குத் தமிழரின் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியானது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. நாடெங்கும் இனக்கலவரத்தைத் தூண்டிவிட ஸ்ரீமாவோ கட்சி முயன்றது. இலங்கைக் காவல்துறையில் 17 ஆயிரம் போலீஸôர் இருந்தனர். இவர்களில் 5 ஆயிரம் பேர் ஸ்ரீமாவோ ஆட்சியில் நியமிக்கப்பட்ட இனவெறியர் ஆவர். இவர்களே இனக்கலவரத்துக்கு மூலகாரணம் என்று கருதப்படுகிறது. யாழ் மருத்துவமனையில் (1977 ஆகஸ்ட் 12-13) புற்றுநோய்ப் பிரிவு ஏற்படுத்த நிதி திரட்டும் விழாவொன்று நடைபெற்றுக்கொண்டிருக்கையில், சீருடை அணியாத போலீஸôர் கூட்டத்தினரிடையே புகுந்து முறைகேடாக நடந்தனர். பொதுமக்களுக்கும் இவர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் போலிசார் இருவர் காயமடைந்தனர். இதனைச் சாக்கிட்டு "யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கு ஆபத்து' என வதந்தி, நாடு முழுவதும் பரப்பப்பட்டு கடைவீதிகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்தனர். எல்லா இடங்களிலும் (1977 ஆகஸ்டு 17) தமிழர் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு இன்றுவரை தொடர்ந்து நடந்துவரும் அடக்கு முறைகளும், ரத்தக் கிளரிக்கும் பிள்ளையார் சுழி போட்ட சம்பவம் தமிழர்கள்மீது தொடுக்கப்பட்ட இந்தக் தாக்குதல்தான். நாளை: ஜெயவர்த்தனவின் அடக்கு முறை
கருத்துக்கள்

ஒரு நூற்றாண்டளவிலான போராட்டம் பேரவலத்தில் பின்னடைவைச் சந்தித்ததன் காரணம் காந்தியம் பேசும் இந்தியாதான் என்னும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. இந்திய அரசு திருந்த தமிழக அரசு தன் செல்வாக்கைப் பயன்படுத்தி வெற்றி காண வேண்டும். இத்தனை அவலங்களையும் அறிந்த பின்னும் 'ஒரேநாடு, ஒரே மொழி, ஒரே இறையாண்மை' என்றெல்லாம் பிதற்றாமல் தொடங்கிய இடத்திற்குச் செல்வதற்கு அறிவுரை கூறாமல் தொடர்ந்து சென்று வென்றெடுப்பதற்கு உறுதுணை புரிய வேண்டும். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 4:39:00 AM
எஸ்.சி., எஸ்.டி. பின்னடைவுப் பணியிடங்கள் 3 மாதத்தில் நிரப்பப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
தினமணி
First Published : 04 Jul 2009 11:19:00 PM IST

Last Updated :


சென்னை, ஜுலை 3: காலியாக உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் 3 மாதத்தில் நிரப்பப்படும் என்று மின்துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அறிவித்தார்.


1/2) பல்வேறு நேர்வுகளில் அரசின் அறிவிப்புகளுக்கும் நடைமுறைச் செயல்பாடுகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளமை களையப்பட வேண்டும். பின்னடைவுப்பணியிடங்களைப் பற்றிய அறிவிப்பும் அத்தகைய ஏமாற்று வேலையே! எடுத்துக்காட்டாகக் இசைப்பள்ளிகளிலும் இசைக்கல்லூரிகளிலும் ஒருவர் கூட ஆதிதிராவிடர் - பழங்குடியினர் வகுப்பாக இன்மையால் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பிய பின்புதான் பிற பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு ஆணையிட்டது. ஆனால், பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் வேறு ஒரு வகுப்பாருக்கு முதன்மை அளிக்கும வகையில் பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இனி பணியிடங்கள் காலியாகவே - நியமிக்கப்பட்டவர்கள் ஓய்வு அடையும் வரை - பல ஆண்டுகள் ஆகும். மீண்டும் பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் வேண்டியவர்களுக்கு வேண்டிய வண்ணம் வழங்கி விட்டு அதன் பின் சடங்காக இனிமேல் பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பியபின்பே பிற இடங்கள் நிரப்பப்படவேண்டும் என்ற ஆணை சடங்கு போல் வெளியிடப்படும். ஆக இவற்றால் என்ன பயன்? (தொடர்ச்சி 2/2 காண்க)

- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 4:18:00 AM
2/2) [1/2 தொடர்ச்சி] உண்மையிலேயே அரசிற்குப் பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதில் ஆர்வம் இருந்தது எனில் தவறாக நிரப்பப்பட்ட நியமனங்கள் அனைத்தையும் நீக்கம் செய்து பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு அவ்வாறு செய்யுமா?
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 4:18:00 AM

பயிற்சி டாக்டர்களுக்கான உதவித் தொகை உயர்வு: முதல்வர் கருணாநிதி
தினமணி


சென்னை, ஜூலை 4: பயிற்சி டாக்டர்கள், மருத்துவப் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

கருத்துக்கள்

மருத்துவப் படிப்பிற்கான உதவித் தொகையை உயர்த்திய அரசிற்குப் பாராட்டுகள். எனினும் 'தாயினும் சாலப் பரிந்தூட்டும்' தன்மையுடன் பயிற்சி மருத்துவர்கள் கேட்கும் தொகையையே வழங்குவதுதான் சரி. அவர்கள் படிக்கும் கால அளவைக் கருதியும் குடும்பத்தினரின் பொருள்சார் சூழ்நிலையைக் கருதியும் வேண்டும் தொகையை வழங்கலாம். உயிர் காக்கும் மருத்துவர் வாழ்வைக் காப்பது அரசின் கடமை அல்லவா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
7/5/2009 3:56:00 AM

சனி, 4 ஜூலை, 2009


பாவை சந்திரன்
First Published : 04 Jul 2009 10:45:00 PM IST

Last Updated :

ஸ்ரீமாவோ - லால்பகதூர் சாஸ்திரி


சுதந்திரத்திற்குப் பின், இலங்கையும், இந்தியாவும் இரு மாநாடுகளை நடத்தின. 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லண்டனில் நேரு-டட்லி சேனநாயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரஜா உரிமையற்ற மலையகத் தமிழர்களை யார் ஏற்றுக் கொள்வது என்பதுதான் பேச்சுவார்த்தையின் உள்ளடக்கம். ஆனால் இப்பேச்சுவார்த்தை எந்தத் தீர்வும் இன்றித் தோல்வி அடைந்தது.

பின்னர் நேரு-கொத்தலாவலை பேச்சுவார்த்தை புது டெல்லியில் 1954-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. இதுவும் தோல்வி அடைந்தது. இந்திய அரசாங்கம் நாடற்ற மலையக மக்களை இலங்கையர் என்றது; இலங்கை அரசோ அவர்களை இந்தியர் என்றது. இவ்வாறு இப்பிரச்னை இழுபறியான சமயத்தில் ஒரு திடீர் சூழ்நிலை ஏற்பட்டது.

1964-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் தேதி அன்று, பர்மாவில் இருந்தும் (3,00,000 பேர்), உகாண்டாவில் இருந்தும் (28,755 பேர்) அந்த நாட்டு அரசாங்கங்கள் இந்தியர்களை விரட்டி அடித்தன. இத்தகைய ஒரு நிலை இலங்கையிலும் ஏற்பட்டு விடக்கூடாது என இந்தியா விரும்பியது. அடுத்ததாக நடைபெற்ற சீன-இந்திய யுத்தத்தைத் தொடர்ந்து, சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த இலங்கையுடன் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள இந்தியா விரும்பியது.

இறுதியாக, அப்போது பாகிஸ்தான் ஜனாதிபதியாக இருந்த அயூப்கான், ""இலங்கையில் உள்ள சகல பாகிஸ்தானியர்களையும் தமது அரசாங்கம் ஏற்றுக் கொள்ளத் தயார்'' என்று இலங்கை அரசுக்குக் கடிதம் எழுதினார். அப்போது இலங்கையில் 5749 பாகிஸ்தானியர்களே வாழ்ந்தார்கள். அதனால் பாகிஸ்தானுக்கு அவர்களை ஏற்றுக் கொள்வது அவ்வளவு சிரமமானதாக இல்லை.

அதே கடிதத்தில் அவர் ""இந்தியா தனது அண்டை நாடு எதனுடனும் சுமுகமாகப் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவில்லை'' எனக் குற்றம் சாட்டி இருந்தார். எனவே, சீனாவுடனான யுத்தத்தினால் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து சர்வதேச அரங்கில் இந்தியா தன் பெயரை நிலைநிறுத்த வேண்டிய நிலையில் இருந்தது.

இந்தச் சமயத்தில் நேரு காலமானார். அதற்குப்பின் லால்பகதூர் சாஸ்திரி பிரதமரானார். இவருக்கும், இலங்கைப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கும் இடையே 1964-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ஆம் தேதியன்று பேச்சுவார்த்தை துவங்கியது. ஆறு நாட்கள் தொடர்ந்த இப்பேச்சுவார்த்தை அக்டோபர் 30-ஆம் தேதியன்று ஒரு முடிவுக்கு வந்தது.

அன்றுதான் உலகமே கண்டித்த, மிக மோசமான சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.

இலங்கையில் இந்தியர்களின் மக்கள் தொகை 1964 செப்டம்பர் 25-ஆம் தேதி கணக்குப்படி 10,08,269 பேர் ஆகும்.

இதில் இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்போரின் எண்ணிக்கை 28,269. மீதம் இருந்த 9,75,000 பேரின் பிரஜா உரிமை பற்றியே இம்மாநாடு முடிவு செய்தது.

சாஸ்திரி-ஸ்ரீமாவோ ஒப்பந்தத்தின்படி, 9,75,000 பேரில் 5,25,000 பேருக்கு 15 வருடகாலத்தில் (அவர்களின் இயற்கை அதிகரிப்புடன்) இந்தியப் பிரஜை உரிமை வழங்குவதென்றும், அதே காலத்தில் 3,00,000 பேருக்கு அவர்களின் இயற்கை அதிகரிப்புடன் இலங்கைப் பிரஜா உரிமை வழங்குவதெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

எஞ்சியுள்ள 1,50,000 பேரின் பிரஜா உரிமை அந்தஸ்து பற்றி 1974-ஆம் ஆண்டு தீர்மானிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி 1974-ஆம் ஆண்டு ஜனவரியில் செய்து கொள்ளப்பட்ட ஸ்ரீமாவோ- இந்திரா ஒப்பந்தத்தின்படி இலங்கையும், இந்தியாவும் 1,50,000 பேரையும் சமமாகப் பங்கிட்டுக் கொண்டன.

இந்த ஒப்பந்தங்களைக் கண்டிக்காத சர்வதேச மனிதாபிமான இயக்கங்களே இல்லை எனலாம். இருந்தும் இரு அரசாங்கங்களும் அவற்றைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

இந்த ஒப்பந்தத்தை மனிதாபிமான அமைப்புகளும் இயக்கங்களும் சர்வதேச அளவில் கண்டித்தன. ஆடு, மாடுகளைப் பங்கு போட்டுப் பிரித்துக் கொள்வதுபோல மனிதர்களைப் பங்குபோடும் அதிகாரத்தை அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அளித்தது யார் என்கிற கேள்விகள் உலகில் பல பகுதிகளிலிருந்தும் எழுப்பப்பட்டன.

சம்பந்தப்பட்ட மக்களின் கருத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் இரு அரசுகளும் தான்தோன்றித் தனமாக நிறைவேற்றிய ஒப்பந்தம் இது. அதாவது இதனை ஒரு சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகப் பாராமல் அந்தப் பத்து லட்சம் மக்களின் தலைவிதியை, அவர்கள் பங்கு பெறாமலே இரு அரசாங்கங்களும், வெறும் எண்களைக் கருத்தில் கொண்டு கணித முறையில் முடிவு செய்தன.

இப்பேச்சு வார்த்தை நடந்தபோது குறைந்தபட்சம் அம்மக்களின் பிரதிநிதியின் கருத்துகூட கேட்டு அறியப்படவில்லை.

இவ்வாறு முடிவு செய்யப்பட்டதும் அம்முடிவு ஒருகட்டாய அடிப்படையில் அமல் நடத்தப்பட்டது என்பதுதான் அதைவிட வேடிக்கை. இதற்கான மனுக்கள் கோரப்பட்டபோது இலங்கை பிரஜா உரிமை கோரி சுமார் 7,00,000 மனுக்கள் தாக்கல் ஆயின. ஆனால், இவ்வொப்பந்தப்படி இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் 3,75,000 பேர் மாத்திரமே. இந்தியப் பிரஜா உரிமை 6,00,000 பேருக்கு வழங்கப்படும் என்ற நிலைமை இருக்கும்போது இந்தியப் பிரஜா உரிமை கோரி மனு செய்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 மட்டுமே. ஒருவேளை இலங்கை பிரஜா உரிமை மறுக்கப்பட்டால் இந்தியப் பிரஜா உரிமையாவது கிடைக்கட்டுமே என்று இரண்டிற்கும் மனு செய்தவர்கள் தொகை கணிசமானது.

அதுமட்டுமல்ல, இந்த ஒப்பந்தம் அமலாகும்போது இந்தியாவில் அமையப்போகும் ""புதுவாழ்வு'' பற்றி மிகக் கவர்ச்சியான சித்திரங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. இத்தனைக்குப் பிறகும்கூட இந்தியா செல்வதற்கு இவர்கள் மத்தியில் இருந்து மிகக் குறைவாகவே ஆர்வம் காணப்பட்டது.

இவ்வாறு இம்மக்களின் சுய விருப்பத்திற்கு மாறாகப் பல்வேறு நிர்பந்தங்களாலும், ஏமாற்றுகளாலும் திணிக்கப்பட்ட இவ்வொப்பந்தம் மனித அடிப்படை உரிமைக்கு முரணானது.

1948 டிசம்பர் 10-ஆம் தேதி இயற்றப்பட்ட உலக மனித உரிமைகள் சாசனத்தின் 15-வது ஷரத்து * பின்வருமாறு கூறுகிறது:

""தேசிய இனத்துவ உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஒருவருடைய தேசிய இனத்துவம் வேண்டுமென்றே பறிக்கப்படுவதோ, அல்லது அவரது தேசிய இனத்துவத்தை மாற்றிக் கொள்வதற்குள்ள அவரது உரிமையை மறுப்பதோ கூடாது.''

இதன்படி பார்க்கும்போது இந்த இரு அரசாங்கங்களுமே உலக மனித உரிமை சாசனத்தை மிக மோசமாக மீறி இருக்கின்றன என்பது புலனாகிறது.

இந்தியா செல்வதற்குத் தயாராதல், புறப்படுதல் போன்ற முறைகளில் இம்மக்கள் அடைந்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்ட நாளில் இருந்து சகல ஒப்பந்தங்களையும் செய்து முடிக்க 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அவகாசம் (விசா) வழங்கப்படுகிறது. ஊழியர் சேமலாப நிதி, சேவைக் கால உபகாரப் பணம், நாணயப் பரிவர்த்தனை, அனுமதிப் பத்திரம், குடும்ப அட்டை ஆகிய அனைத்தையும் ஒரு வருட காலத்துக்குள் கல்வி அறிவு அற்ற இத்தொழிலாளர் பெற்றுத் தீர வேண்டும். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் தோட்ட நிர்வாகிகள் போன்றோர், இடைத் தரகர்களாக மாறி இவர்களைக் கொள்ளை அடித்தனர்.

இதன் பின்னர் வெளியேற்ற அறிவித்தல் (ணன்ண்ற் சர்ற்ண்ஸ்ரீங்) வழங்கப்படுகிறது. அதற்கு மேல் தங்கினால் அவரைக் கைது செய்து நாடு கடத்தும் உரிமை அரசாங்கத்துக்கு உண்டு. 1971-77 ஆண்டுகளில் நாய்களைப் பிடித்துச் செல்வது போல இம்மக்களைப் பிடித்து ஜீப்புகளில் ஏற்றி, இடுப்புத் துணியோடு இந்தியாவுக்கு நாடு கடத்திய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. இதிலும் சாத் முரண்பாடு தலைதூக்கியது. தாழ்த்தப்பட்ட ஜாதியினர்தான் இதனால் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால், அவர்கள் ராமேஸ்வரம் வரை பயணம் செய்யும்போது, பியூன் முதல் போர்ட்டர் வரை, கிளார்க் முதல் உயர் அதிகாரி வரை அனைவரும் இவர்களை ஏமாற்றி லஞ்சம் வாங்கிக் கொண்டனர்.

இவ்வாறு குடிபெயர்ந்து செல்வோரின் குடும்ப உறவுகள் துண்டிக்கப்பட்டன. பிரஜா உரிமை முடிவு செய்யப்பட்டபோது மைனர் குழந்தைகளுக்குத் தந்தையுடன் சேர்த்து அதே பிரஜா உரிமை வழங்கப்பட்டு விடுகிறது. அனால் 18 வயது கடந்த அவர்களது குழந்தைகள் தனியாக மனு செய்து இலங்கை அல்லது இந்தியாவில் பிரஜா உரிமை பெறவேண்டும். வெளியேற்ற அறிவித்தல் வந்துவிட்டால்... தந்தையும், குடும்பத்தினரும் பிரிய நேரும். ஒரே குடும்பத்தில் அண்ணனுக்கு இலங்கைப் பிரஜா உரிமையும், தம்பிக்கு இந்தியப் பிரஜா உரிமையும் வழங்கப்பட்டு விடுகிறது.

பிறந்த நாட்டையும், வளர்ந்த மண்ணையும், பழகிய நண்பர்களையும் விட்டுப் பிரியும்போது அழுது, கதறித் துடிக்கும் பரிதாபகரமான காட்சியை மலை நாட்டில் உள்ள சகல புகைவண்டி நிலையங்களிலும் காண முடிந்தது. காதலனைப் பிரியும் காதலி, அண்ணனைப் பிரியும் தம்பி, பெற்றோரைப் பிரியும் பிள்ளை, இப்படி மனித உறவை அறுத்தெறியும் அந்தக் கொடிய காட்சி இரும்பு இதயத்தைக்கூட உருகச் செய்யும்.

புதுவாழ்வைத் தேடி இந்தியாவுக்கு விரட்டப்பட்ட இவர்களுக்கு இந்திய மண்ணில்கூட நிம்மதியோ, மகிழ்ச்சியோ கிடையாது. இன்று இந்த அகதிகள் இந்தியத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். இவர்களின் கண்களின் வெறித்த பார்வையில், தங்கள் பிறந்த மண்ணும், உற்றார் உறவினரும், வஞ்சிக்கப்பட்ட தங்கள் தலைவிதியும் அடிக்கடி வந்து போகும் விஷயங்கள் ஆகிவிட்டன.

மலையகத் தமிழர்களின் தலைவராக இருந்த எஸ்.தொண்டமான், பெரிய கங்காணி ஒருவரின் மகனாக இருந்து ஆரம்ப காலத் தியாகத்தால் மலையக மக்கள் இதயத்தில் வலுவான இடம்பெற்றுவிட்டவர். இலங்கையில் ஒரு தனிநபரின் குரலுக்கு ஆறு லட்சம் மக்கள் அணி திரள்கிறார்கள் என்றால், அது தொண்டமானுக்கு மட்டும்தான் இருந்தது.

அவர் தனிநபரல்ல; அவருக்குப் பின்னால் ஸ்தாபனப்பட்ட 6 லட்சம் தொழிலாளர்கள் இருந்தார்கள். அந்தத் தொழிலாளர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் 60 சதவிகிதம் தமது கைகளில் வைத்திருக்கிறார்கள். விண்ணை அதிரவைக்கும் இந்த மகத்தான சக்தியால் தாங்கப்படும் ஒரு மனிதர் எவ்வளவு வலிமை மிக்கவராக இருக்க வேண்டும்? ஆனால் தொண்டமானோ அற்பப் பதவிக்காக ஜெயவர்த்தனாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார் என்ற பலமான குற்றச்சாட்டு இவர் பேரில் உண்டு.

இந்த நிலையில் மலையகத் தமிழ் தொழிலாளர்களுடைய நிலையைச் சுருக்கமாகச் சிலவரிகளில் கூறிவிடலாம். பொருளாதார ரீதியில் சாகாமல் எப்படி உயிர் வாழ்வது என அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு இலங்கையில் விலைவாசி அதிகரித்துவிட்டிருந்தது.

தமிழர் என்ற முறையில் எப்படி சிங்கள குண்டர்களின் தாக்குதல்களில் இருந்து தப்பிப் பிழைக்கலாம் எனச் சதா சிந்தித்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்குத் தேசிய இன ஒடுக்குமுறை உச்ச கட்டத்தை அடைந்திருந்தது. மேலும் அரசியல் விழிப்புணர்ச்சி மிக்க நல்ல தலைமையை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது கூட அவர்கள் சிந்தனையில் இடம்பெற ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட ஓர் இக்கட்டான காலகட்டத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக மற்றும் ஜெயவர்தன போன்ற சிங்கள இனவாதத் தலைவர்களில் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு, ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் பலியானார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. தமிழன் என்ற உணர்வுடன் இவர்கள் கைகோர்த்து செயல்படத் தவறியதையும், ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகியதையும் சிங்கள அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

மலையகத் தமிழர்களை அரவணைத்துச் செல்லாமல் போனதால் ஏற்பட்ட விளைவுதான் இலங்கையில் தமிழர்கள் தங்களது உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ள முடியாமல் போனதற்கு முக்கியமான காரணம் என்பதை சரித்திரம் மிகவும் அழுத்தமாகவே பதிவு செய்யும். கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எழுந்துவிட்ட தமிழர்களின் உரிமைக் குரல் இன்றும் ஒரு நியாயமான முடிவை எட்ட முடியாமல் போனதற்கு, இவர்களுக்குள் காணப்பட்ட பிளவுதான் காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.



* Article 15 of Universal Declaration of Human Rights. (Dec.10.1948) ‘‘Every one has the right to a nationality; no one shall be arbitarily deprived of his nationality nor denied the right to change his nationality.’’



நாளை : தமிழ் ஈழத்துக்கான முதல் குரல்!

கருத்துக்கள்

If Aryans utilized Tamil society s education, knowledge without favouritism, by this time China & western would have behind India. But unfortunately Aryans wants to dominate Diravidans esp Tamils and loosing all their safety & power to China. See one example: South East Asia
By Rayudu
7/4/2009 8:59:00 AM

Dravidians do not have unity. Tamils also do not have Unity. So we are just ruled by foolish & uneducated Aryan
By Dravidan
7/4/2009 8:50:00 AM

India want tamil nadu vote. they never ever want tamil people,,,,,,,,, yograjiv
By rajiv
7/4/2009 6:39:00 AM

India spoiled tamils life, tamilnadu should be separated from India to save tamils and a nation to be formed Tamilnadu tamils and Eelam Tamils.
By yogaraja
7/4/2009 3:24:00 AM