சரணடையும் திட்டம் ஐ.நா.விற்கு முன்பே தெரியும் என்பதால் சிங்கள அரசாங்கம், இந்திய அரசாங்கம், ஐ.நா.அதிகாரிகள், ஒத்துழைத்த பன்னாட்டு அரசுத்தலைவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். வெள்ளைப்புறா திரு நடேசன் மனைவி சிங்களத்தில் ஏன் சரணடைய வருமாறு சொல்லி விட்டுத் தாக்குகிறீர்கள் என்று கேட்டதால் முதலில் அவரைச் சித்திரைவதை செய்து கொன்றதாகவும் முன்னரே தகவல் வந்துள்ளது. இவற்றை எல்லாம் பார்த்த பின்னரும் ஏழுகடல் அளவு நீரில் கழுவினாலும் போகாதக் குருதிக்கறைபடித்த கைக்கு வாக்களிப்பவர்கள் மனிதப் பிறவிகள் அல்லர் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். இதுவே நம்மால் முடிந்த சிறு செயலாகும்.
வருததத்துடனும் வேதனையுடனும் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! /
கொழும்பு, ஏப்.12- விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் ப. நடேசன் மற்றும் சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இலங்கை ராணுவத்தினரால் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்ட பின்னரே கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.2009, மே மாதம் போரின் இறுதி நேரத்தில், புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைய ஐநா அதிகாரி விஜய் நம்பியார் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், ப. நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் இலங்கை ராணுவத்திடம் சரணடைந்தனர்.ஆனால், அவர்களை இலங்கை ராணுவம் கடுமையாக சித்ரவதை செய்ததாக தற்போது புகைப்படங்களுடன் தகவல் வெளியாகியுள்ளது. ப. நடேசன், புலித்தேவன் ஆகிய இருவரின் வயிற்றிலும் நெருப்பால் சுட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.சித்ரவதைக்குப் பின்னர், அவர்கள் இருவரின் சடலங்களையும் புதைக்கும்போது, அங்கிருந்த ராணுவத்தினர் அச்சடலங்களை புகைப்படம் எடுத்ததாகவும் இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ப. நடேசன் கொல்லப்படும் முன்னரே, அவரது மனைவியை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்


By mohan
4/12/2011 3:46:00 PM
4/12/2011 3:46:00 PM


By tamiliniyan
4/12/2011 3:41:00 PM
4/12/2011 3:41:00 PM


By PalaniMuthu
4/12/2011 3:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/12/2011 3:34:00 PM