முபாரக் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகத் தெரிவிக்கிறீர்கள். காவல்துறை ஊர்தியின் மீது தாக்கியதாகவும் குறிப்பிட்டு உள்ளீர்கள். எதிர்ப்பாளர்கள் எனில் காவல்துறையைப்பாராட்டி இருப்பார்களே! எனவே, ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் என்றுதான் இருக்க வேண்டும். செய்தியைச் சரியாக மொழி பெயர்த்து ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்து வெளியிடச் செய்யவும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
முபாரக்கின் எதிர்ப்பாளர்கள் அவரை மருத்துவமனையில் வைத்து விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதனைக் குறிப்பிட்டு இருந்தால் செய்தி முழுமையாக இருந்திருக்கும். ) மொழி பெயர்ப்பில பிழை இல்லை. கருத்துத் தெரிவிப்பில்தான் குறைபாடு உள்ளது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கெய்ரோ, ஏப்ரல் 13: எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் செவ்வாய்க்கிழமை திடீரெனக் கைது செய்யப்பட்டார். அவரது இரு மகன்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.18 நாட்கள் நடைபெற்ற மக்களின் அமைதிப் புரட்சியைத் தொடர்ந்து, ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட ஹோஸ்னி முபாரக் (வயது 82) உல்லாச மையம் ஒன்றில் ஓய்வெடுத்து வந்தார். அவருக்கு உடல் நலம் சரியாக இல்லையெனக் கூறப்பட்டது.இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஷரம் அல் ஷேக் எனும் மையத்துக்கு சட்டத் துறை அதிகாரிகள் சென்றனர். அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் குறித்து அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கு உடல் நிலை சரியில்லையென அவர் கூறியதால் அந்த மையத்திலிருந்த மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் திடீரெனக் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய இரு மகன்களான அலா முபாரக், கமால் முபாரக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர் எதற்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து அதிகாரிகள் விவரங்கள் எதும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவருக்கு இதய நோய் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆயினும் மருத்துவமனையில் முபாரக்கிடம் விசாரணை தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷரம் அல் ஷேக் மையம் அருகே முபாரக் எதிர்ப்பாளர்கள் பெருமளவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். முபாரக் மகன்களைக் கைது செய்து அழைத்து வந்த காவல்துறை வாகனத்தை கற்கள், பாட்டில்கள் வீசித் தாக்கினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக