சனி, 16 ஏப்ரல், 2011

சத்தியமூர்த்தி பவனில் நுழைவோம்: கராத்தே தியாகராசன்அறைகூவல்


கரக்கலை தியாகராசன் ஆரவாரம்  இல்லாமல் அனைவருக்கும் உதவுபவர்;  தனிப்பட்ட செல்வாக்கும் உள்ளவர்;  எனினும்  நேற்று முளைத்த கார்த்தி சிதம்பர்தின் பினனால் நின்று தன் மானத்தை அடகு வைத்த்வர். சின்னப்பயல் பின்னால் நிற்கும் மன உறுதி உள்ளவர் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்படுவதில் என்ன சிக்கல்?  திரு மங்கள்ராசுவும் பகுதி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிக்ள கிடைக்கப் பாடுபடுபவர்  ; கட்சியையும் நாட்டையும் சீர்குலைக்கும் கோவன் பின்னால் அணி வகுப்பவர் கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்டால் என்ன தவறு?
நடிகர் சேகர் ச.ம.உ. என்ற முறையில் கோரிக்கை வைப்பவர்கள் குறைகளை உடனே களைய முற்படுபவர்.  நேற்றுதான் கட்சியில் பதவிக்காக நுழைந்தவர், அதற்கான வாய்ப்பு மங்குவதால் கட்சித்தலைமையை எதிர்ப்பது முறைதானா? எப்படியோ தமிழினப் பகையாளி காங்.ஐ உள்ளிருந்தே அழிக்கிறீர்கள். பாராட்டுகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


சத்தியமூர்த்தி பவனில் நுழைவோம்: கராத்தே தியாகராஜன் சவால்


சென்னை, ஏப். 15: பத்திரிகையாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு சத்தியமூர்த்தி பவனில் நுழைவோம் என்று சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.இது குறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தங்கபாலுவின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய காரணத்தால் எங்களை கட்சியில் இருந்து நீக்குவதாக அவர் அறிவித்துள்ளார். கட்சியினர் யாரும் எங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும், சத்தியமூர்த்தி பவனில் நுழையக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.சத்தியமூர்த்தி பவன் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. அது காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இதற்கு ஆபத்து வரும்போதெல்லாம் நாங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். 1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது சத்தியமூர்த்தி பவனை மீட்டு மூப்பனாரிடம் ஒப்படைத்தவர்களில் நானும் ஒருவன். அந்த நேரத்தில் அங்கிருந்து ஓடிப்போன தங்கபாலுவுக்கு இதெல்லாம் நினைவிருக்க நியாயமில்லை.எங்களை உள்ளே வரக்கூடாது என்று அவர் கூற முடியாது. அவ்வப்போது இடைக்கால தலைவராக பதவியில் தொற்றிக் கொள்ளும் அவர், நள்ளிரவில் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து ஆலோசனை நடத்துகிறார்.வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் கட்டடத்தை மாற்றி அமைப்பதாகக் கூறி அலுவலகத்தை அடிக்கடி இடித்து வருகிறார். இதற்கான அதிகாரத்தை அவருக்கு யார் கொடுத்தது?பத்திரிகையாளர்களுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தகவல் தெரிவித்துவிட்டு குறிப்பிட்ட நாளில் சத்தியமூர்த்தி பவனுக்குள் நுழைவோம். முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும் என்று கராத்தே தியாகராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக