ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

Raghu lagainst old man candidature: : 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? கேரளத்தில் இராகுல் பரப்புரை

கலைஞர் மீது உள்ள சினத்தைக் கேரளாவில் காட்டுகிறாரா?  இங்கொரு நீதி, அங்கொரு நீதியா? என மக்கள் நினைக்க மாட்டார்களா? கொள்கையடிப்படையில் பேசலாமே! எனினும் இளைஞர் என்பதற்காகக் கொலைகாரக் கட்சியை ஆதரிக்க முடியாது என்பதை இராகுல் உணர வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? 
கேரளத்தில் ராகுல் பிரசாரம்


கொச்சி, ஏப். 9: 87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரûஸ ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
கேரள மாநில சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக ராகுல் காந்தி, தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். கொச்சியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் பேசியது: சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா? காங்கிரஸýக்கு வாக்களித்தால், இளைஞர்களும், அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் மிக்கவர்களும் சமஅளவில் சட்டப் பேரவைக்குச் செல்வர். இளமைக்கு உரிய துடிப்புடனும், அனுவத்துக்கு ஏற்ற விவேகத்துடனும் ஆட்சி நடைபெறும். கேரள அரசியலில் இப்போது வன்முறை அதிகரித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதற்கு முடிவு கட்டப்படும். கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில்தான் வன்முறை அதிகரித்துள்ளது. காந்திய வழியில் வந்த காங்கிரஸôர் எப்போதும் அமைதியை விரும்புபவர்கள். எனவே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வர மக்கள் வாக்களிக்க வேண்டுமென்று ராகுல் காந்தி பேசினார். கேரளத்திலும் தமிழகத்தைப் போல வரும் 13-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக