வியாழன், 14 ஏப்ரல், 2011

explanation for ganesan

நல்லன் அவர்களே! கணங்களின் ஈசன் கணேசன். கணம் என்றால் கூட்டம் என்று பொருள். கணக்கு என்பது கூட்டலை அடிப்படையாகக் கொண்டது. கணவன் என்றால் மனைவியுடன் கூடும் உரிமை உடையவன்.  ஈதலைச் சுரப்பவன் ஈசன்.  தேவக் கூட்டங்களுக்குத் தலைவன் என்னும் பொருளில் கணேசன் என்பது கையாளப்படுகிறது. அணுவிற்கும் இதற்கும் தொடர்பில்லை. ( பிள்ளையார் வழிபாடு என்பது இடைக்காலத்தில்தான்தமிழ்நாட்டிற்கு அறிமுகமானது என்பது தனி வரலாறு.) 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!



கணம் என்றால் SET என்று பொருள். A set of Electrons,Nutrons and Protons is called an Atom. ஆகவே, ஒரு Atom என்பது ஒரு கணம். ஒரு சக்தி இந்த Electrons,Nutrons and Protons ளை இணைத்து பிடித்து சீரான கதியில் இயக்குகிறது. அந்த சக்திதான் மூல ஆதார சக்தி (ROOT). அந்த சக்திதான் அந்த கணத்துக்குத் ஈசன் (தலைவன்) . அதனால்தான் அதை கணேசன் என்கிறோம். [நன்றி: His Holiness Sri Sri RaviShankar]. நம் உடல் மட்டுமன்று அனைத்துப் பொருள்களும் இந்த மூலாதார சக்தியான கணேசரால் ஆக்கப்ப்ட்டிருக்கின்றன. ஆகவே, அந்த சக்தி நமில் மிளீர வேண்டுமானல் சத்குருவிடம் தீக்ஷை பெற்று மூச்சு பயிற்சி செய்தல் மிகவும் சிறப்பு. அந்த காலத்தில் நம் ரிஷி முனிக்கள் புராணக் கதை வாயிலாக இதை சொல்லியிருக்கிறார்கள். ( அந்த க் காலத்தில் இந்த அளவுக்கு படிப்பறிவு , இண்டெர்னெட் போன்றவைகள் இல்லை. தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். [ பி.கு.: யானை முகத்துக்கான் விளக்கத்தை நாமே தேடித் தெரிந்த்து கொள்ளலாமே]
By Nallan
4/14/2011 11:42:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக