செவ்வாய், 12 ஏப்ரல், 2011

Udumalai: money disbursing: A.D.M.k. M.L.A. attacked -: உடுமலையில் 144 தடை உத்தரவ: தி.மு.க. பணம் வழங்கல் - அ.தி.மு.க. ச.ம.அ. மண்டை உடைந்தது!

குற்ற நிகழ்வுச்செய்தியை விழிப்புடன் எழுத வேண்டும்.
<<அதிமுகவினர் அந்த வீட்டில் நின்றிருந்த அமைச்சரின் காரையும், பிரசார வாகனம், போலீஸôரின் வாகனங்களையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சண்முகவேலு>> அ.தி.மு.க.வினர் தாக்குதலால்தான் படுகாயமடைந்ததாகப் பொருள் ஆகிறது. வழக்கில் ஒரு நிலைப்பாட்டைத் தினமணி தெரிவிப்பதாக ஆகிறது அல்லவா? 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


உடுமலையில் 144 தடை உத்தரவ: திமுக பண விநியோகப் பிரச்னை- அதிமுக எம்எல்ஏ மண்டை உடைந்தது!

First Published : 12 Apr 2011 04:07:45 AM IST


மண்டை உடைக்கப்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மடத்துக்குளம் தொகுதி அதிமுக வேட்பாளரும், எம்எல்ஏவுமான சி. சண்முகவேலு.
உடுமலை, ஏப். 11: வாக்காளர்களுக்குத் திமுகவினர் பணம் கொடுப்பதாக எழுந்த பிரச்னையில் உடுமலை அருகே உடுக்கம்பாளையத்தில் திங்கள்கிழமை இரவு ஒரு வீட்டை அதிமுகவினர் முற்றுகையிட்டனர். அப்போது அதிமுக எம்.எல்.ஏ.வும், மடத்துக்குளம் தொகுதி வேட்பாளருமான சி.சண்முகவேலு தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  உடுக்கம்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளரும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் சார்பாக திங்கள்கிழமை மாலையில் வாக்காளர்களுக்குத் திமுகவினர் பணம் கொடுக்க ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீட்டை அதிமுகவினர் முற்றுகையிட்டனர். அந்த வீட்டில் சாமிநாதன் இருந்துள்ளார்.  தகவல் தெரிந்தவுடன் உடுமலை எம்.எல்.ஏ.வும் மடத்துக்குளம் அதிமுக வேட்பாளருமான சி.சண்முகவேலு அங்கு வந்தார். பொள்ளாச்சி மற்றும் உடுமலை டி.எஸ்.பி.க்களும், போலீஸôரும் உடுக்கம்பாளையம் விரைந்தனர்.  இந்த சமயத்தில் திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது, அதிமுக வேட்பாளர் சண்முகவேலு தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. ஆத்திரமடைந்த அதிமுகவினர் அந்த வீட்டில் நின்றிருந்த அமைச்சரின் காரையும், பிரசார வாகனம், போலீஸôரின் வாகனங்களையும் தாக்கினர். இதில் படுகாயமடைந்த சண்முகவேலு உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  வீட்டிலிருந்த அமைச்சர் சாமிநாதனை கடும் பாதுகாப்புடன் போலீஸôர் வெளியேற்றினர். அப்போது எழுந்த பிரச்னையில் அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டரின் மண்டை உடைந்தது, 6 போலீஸôர் காயமடைந்தனர்.  திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், உடுமலை பஸ் நிலையப் பகுதியில் மறியலில் ஈடுபட்டார். இதனால் உடுமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக