ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

First Voter pravinaa : தமிழகத்தின் முதல் வாக்காளர் பிரவீணா!

அடக்கடவுளே! தமிழ்நாட்டுப்பதவிகளில்தான் முதலிடத்தில் தமிழர்கள் இல்லையென்றால். ..... வாக்காளரிலுமா? யாருக்கு வாக்களிப்போம் எனச் சொல்வது சட்டப்படிக் குற்றம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கும்போது  இவ்வாறு இன்னாரு்க்கு வாக்களிக்கிறார் என்பதைக் கேட்டு வெளியிடலாமா?  எப்படியோ தமிழ்நாட்டுச் சாதனைகளை அயலவர் உணர்ந்தால் சரி.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

தமிழகத்தின் முதல் வாக்காளர் பிரவீணா!கும்மிடிப்பூண்டி,ஏப்.9: தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் முதல் வாக்காளர் என்ற பெருமையை கும்மிடிப்பூண்டி தொகுதியின் எகுமதுரை ஊராட்சியைச் சேர்ந்த பிரவீணா (24) என்பவர் பெறுகிறார்.  தமிழகத்தில் உள்ள 234 சட்டப் பேரவைத் தொகுதிகளில் எண்ணிக்கை அடிப்படையில் முதல் தொகுதி என்ற பெருமைக்குரியது கும்மிடிப்பூண்டி. இந்தத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முதலாவது வாக்காளராக பாகம்-1 பிரிவில் 1ல் எகுமதுரை ஊராட்சியைச் சேர்ந்த 1-வது வார்டில் வசிக்கும் பிரவீணா இடம்பெற்றுள்ளார்.  எகுமதுரை பகுதியைச் சேர்ந்த குசேலன் என்பவரின் மனைவியான பிரவீணா, இந்தத் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க உள்ளார் என்பது குறிப்பித்தக்கது.  இவர் பிறந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தடா மண்டலத்தை சேர்ந்த வேநாடு பகுதியாகும். பிற மாநிலத்தில் இருந்து தமிழகப் பகுதிக்கு திருமணம் செய்து கொண்டு வந்த பிரவீணாவுக்கு தமிழகத்தின் முதல் வாக்காளர் என்ற பெருமையை பெற்றுள்ளனர். தேர்தலில் யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள் என்பது குறித்தும் பிரவீணாவை கேட்ட போது, அவர் கூறியது: ÷நான் திருமணத்துக்குப் பிறகு இப்பகுதிக்கு வந்து முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பகுதியில் அனைவருக்கும் கலர் டி.வி., இலவச கேஸ் அடுப்பு வழங்கியதோடு மாணவர்கள், இளைஞர்கள் விளையாட விளையாட்டு மைதானம் எல்லாம் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றி தந்துள்ளார்கள். அதோடு எங்களுக்கு இருந்த ரூ.1 லட்சம் விவசாய கடனையும் தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. எனவே எனது முதல் வாக்கு தி.மு.க. கூட்டணியில் கும்மிடிப்பூண்டியில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் கே.என்.சேகருக்கே என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக