சனி, 16 ஏப்ரல், 2011

உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்

இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை பரவியிருந்த தமிழ்க்கண்டத்தில்தான் முதன் முதலில் மனித  இனம் தோன்றியது. அங்குபேசப்பட்ட மொழியான தமிழ்மொழிதான் உலக மொழிகளின் தாய். இதனைப் பல அறிஞர்கள் மெய்ப்பித்து உள்ளனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில்தான் இக்கருத்து உள்ளது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



உலகில் உள்ள “அனைத்து மொழிகளின் தாயகம் ஆப்பிரிக்கா”; ஆய்வில் தகவல்
லண்டன், ஏப்.16-

 
உலகில் வாழும் மக்கள் ஆயிரக்கணக்கான மொழிகளை பேசுகின்றனர். தொடக்கத்தில் அவை எந்த மொழியில் இருந்து உருவானது என்பதை அறிய சமீபத்தில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
 
இதற்காக ஆங்கிலம், பிரெஞ்சு, வங்காளி, இந்தி, ஜப்பானிஷ் உள்ளிட்ட 500 மொழிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பொதுவாக 1 1/2 லட்சம் முதல் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால ஆதிமனிதன் ஆப்பிரிக்கா கண்டத்தில் தோன்றினான் என்ற கருத்து உள்ளது.
 
அந்த மனிதன் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தனக்கென தனியான மொழியை உருவாக்கி அதன் மூலம் தகவல்களை பறிமாற்றிக் கொண்டான். அங்கிருந்து 70 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடியேறினான்.
 
இதை வைத்து பார்க்கும்போது தற்போது உலகில் உள்ள மொழிகளின் தாயகமாக ஆப்பிரிக்கா திகழ்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் உலகில் உள்ள அனைத்து மொழிகளும் ஒரே மொழியில் இருந்துதான் உருவாகி இருக்க வேண்டும் எனவும் சிலர் கருத்து கூறியுள்ளனர்.


Saturday, April 16,2011 01:40 PM, மூத்த குடி said:
அப்போ தமிழ் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த மொழி இல்லையா?
On Saturday, April 16,2011 02:12 PM, Ilakkuvanar Thiruvalluvan said :
இன்றைய ஆப்பிரிக்கா முதல் ஆசுதிரேலியா வரை பரவியிருந்த தமிழ்க்கண்டத்தில்தான் முதன் முதலில் மனித இனம் தோன்றியது. அங்குபேசப்பட்ட மொழியான தமிழ்மொழிதான் உலக மொழிகளின் தாய். இதனைப் பல அறிஞர்கள் மெய்ப்பித்து உள்ளனர். அதற்கு வலு சேர்க்கும் வகையில்தான் இக்கருத்து உள்ளது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக