காததிருக்க வேண்டா. உடனே களத்தில் இறங்குக! வேறு யாருக்கும் அதற்கான தகுதியில்லை. மீனவர்கள் படுகொலை என்பது மனித நேயத்திற்கு எதிரானது; சட்டத்திற்கு மாறானது; தமிழக இறையாண்மைக்கு எதிரானது; இந்தியப் பாதுகாப்பிற்கு எதிரானது;சிங்கள நட்பிற்காகத் தமிழக மக்களின் உயிர்களைப் பலி கொடுப்பதே இந்தியத்தின் பணியாகிவிட்டது. ஆதலின் உடனே களத்தில் இறங்குக!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, ஏப்.15- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவது தொடர்ந்தால், கடும் போராட்டத்தை நடத்துவோம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.இதுகுறித்து மதிமுக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கடந்த 2.4.2011 அன்று ராமேஸ்வரம் பகுதியில் இருந்து, மீன்பிடிக்கச் சென்ற விக்டஸ், அந்தோணி, ஜான் பால், மாரிமுத்து ஆகிய நான்கு மீனவர்கள் காணாமல் போயினர். இத்தகவலை அறிந்த வைகோ, கடந்த 5.4.2011 அன்று, வெளியுறவுத்துறை அமைச்சருக்குத் தகவல் தெரிவித்து மீனவர்களைக் காப்பாற்றிடக் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில், தமிழக மீனவர்கள் நால்வரும், இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். விக்டஸ் என்பவரது சடலம் மட்டும் யாழ்ப்பாணத்தில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டது. எஞ்சிய இரு மீனவர்களின் சடலங்கள், தொண்டி அருகே, இலங்கைக் கடற்படையால் கடலில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. மற்றொருவர் குறித்துத் தகவல் இல்லை. இறந்த மீனவர் ஒருவரின் கை, வெட்டித் துண்டிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்த வைகோ, இன்று ராமேஸ்வரம் சென்று, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு இறந்த நான்கு மீனவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார். வைகோவைப் பார்த்த மாத்திரத்தில் அவர்கள் கதறி அழுதனர். வைகோ குழந்தைகளை ஆற்றுப்படுத்தியதுடன், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். "உங்களின் தாங்க முடியாத துக்கத்திலும், கண்ணீரிலும் பங்கு கொள்வதற்காகவே நான் வந்துள்ளேன். நான்கு மீனவர்களைக் கொன்றது, இலங்கைக் கடற்படையினர் தான். உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்குவதுடன், தங்கள் கடமை முடிந்துவிட்டதாகக் மத்திய-மாநில அரசுகள் கருதுகின்றன. மீனவர் படுகொலை தொடருமானால், இளைஞர்களைத் திரட்டி, கடுமையான போராட்டத்தை நடத்த நேரிடும் என எச்சரிக்கிறேன்," என அவர்களிடம் வைகோ கூறினார்.மேலும், இறந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு, மதிமுக சார்பில் தலா ரூ. 25,000 உதவித்தொகை வழங்கினார்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்


By இராமசாமி சேகர்
4/15/2011 7:28:00 PM
4/15/2011 7:28:00 PM


By விக்னேஷ் கண்ணன்
4/15/2011 6:55:00 PM
4/15/2011 6:55:00 PM


By தமிழினியன்
4/15/2011 6:16:00 PM
4/15/2011 6:16:00 PM


By tamilan
4/15/2011 6:15:00 PM
4/15/2011 6:15:00 PM


By தமிழன்
4/15/2011 5:58:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/15/2011 5:58:00 PM