வியாழன், 14 ஏப்ரல், 2011

Chithirai thiru naal greetings by Vaiko : சித்திரைத் திருநாள்: வைகோ வாழ்த்து

தை முதல் நாளைத் தமிழ் ஆண்டுத் தொடக்கம் என
மீள் நடை முறைக்குக் கொண்டு வந்ததற்காக
நன்றி சொல்லும் நாள்
சித்திரை முதல் நாள்
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!சித்திரைத் திருநாள்: வைகோ வாழ்த்து


சென்னை, ஏப்.13- சித்திரைத் திருநாள் நாளை கொண்டாடப்படுவதையொட்டி மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:நெருப்பாகத் தகிக்கும் அனல் வெயிலோடு தொடங்கும் சித்திரை முதல் நாளைக் கொண்டாடும் வழக்கம், தமிழ்நாட்டு மக்களிடம் தொடர்ந்து வருகிறது. மதுரை மூதூரில், லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத் திருவிழா நடக்கிறது.சித்திரைத் திங்களில் முழுநிலவு நாளில், காவிரிப்பூம்பட்டினத்து மக்கள் கடற்கரையில் கூடி, இந்திர விழா கொண்டாடியதாக, சிலப்பதிகாரம் கூறுகிறது.இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை, ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவீசும் விடிவெள்ளியான அண்ணல் டாக்டர் அம்பேத்கர் பிறந்த திருநாளாகிய ஏப்ரல் 14-ஆம் நாளில், சக மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கின்ற வகையில், சாதி, மத பேதங்கள் இல்லாத சகோதரத்துவம் தழைக்க, தமிழக மக்கள் உறுதி ஏற்போம்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்

ஒரு நாலு சீட்டு, கூடக் கிடைக்கவில்லை என்பதற்காக ஒரு மெகா கூட்டணியிலிருந்து பிரிந்து, உலகமகா கொள்ளைக் காரனுக்கு ஆதரவாக தனது நிலையையே மாற்றிக் கொண்ட இந்த உத்தமரா(!) ஊழலை ஒழிக்கிறவர் என்று சொல்கிறீர்கள்! அட போங்க பொன்மலை ராஜா! நீங்க ரொம்ப அப்பாவியா இருப்பீங்க போல இருக்கு!
By வைஷ்ணவி
4/13/2011 8:10:00 PM
வசை பாடிய வாயால், கலைஞருக்கு வாழ்த்துப்பாப் பாடப் புறப்பட்ட வசன வியாபாரி இவர்! இவர் எப்படித் தமிழ்ப் புத்தாண்டு என்று துணிந்து சொல்வார். இனி ரொம்பப் பாதுகாப்பாகத்தான் வார்த்தைகளைப் பிரயோகிப்பார். சரியான வேஷதாரி.
By செந்தமிழன்
4/13/2011 8:01:00 PM
தமிழ் வருட பிறப்பு பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. வைகோ அவர்களே, துணிவுடன் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறுங்கள்.
By Shankar
4/13/2011 6:14:00 PM
ஆமா ....டாக்டர் அம்பேத்காருக்கும் .... சித்திரைத் திருவிழாவிற்கும் என்ன சம்பந்தம் ?....தற்பொழுது தமிழன் தனது தனித்தன்மையினையும் ...தனது மொழி பண்பாடு கலாச்சாரம் இவைகளையும் கலப்படம் செய்து சீரழிக்காமல் விட மாட்டான் போல் தெரிகிறது ! இப்படியே நம்ப தமிழனை விட்டால் கூடிய சீக்கிரம் இந்திய சுதந்திர தினத் தன்று அமெரிக்க அதிபர் ஒபமா வின் பிறந்த நாள் வந்தால் அதனைக் கொண்டாட கிளம்பி விடுவான் ! இந்த அப்பிப்பிராயத்தை நான் சொன்னதால் நான் டாக்டர் அம்பேத்கார் அவர்களுக்கு விரோதமானவனாக யாராவது கருதினால் அது சரியல்ல !!! @ rajasji
By rajasji
4/13/2011 5:56:00 PM
தமிழ்ப் புத்தாண்டை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது. சித்திரை முதல் நாளே, சித்திரைத் திருநாளே தமிழ்ப் புத்தாண்டு. தமிழ்ப் புத்தாண்டை மாற்றிய வம்பர்கள் விரைவில் ஆட்சியிலிருந்து மாற்றப்படுவார்கள். இந்த வருடத்திய தமிழ்ப் புத்தாண்டின் பலன் இது. சக்திவேல்
By சக்திவேல்
4/13/2011 5:39:00 PM
தமிழ் வருட பிறப்பு வாழ்த்துக்கள் என்று கூற வேண்டியது தானே !! ஏன் மழுப்ப வேண்டும் ???!!!!
By எல் சி நாதன்
4/13/2011 4:48:00 PM
பாவம், இப்படிப்பட்ட அறிக்கைகள் மூலமாக‌த்தான் நீங்கள் இருக்கிறீர்கள் என தமிழ் நாட்டுக்கு தெரிய வரும்
By thamiimul அன்சாரி
4/13/2011 4:41:00 PM
மக்கள் மாற்றம் வேண்டி மாறி மாறி வாக்களித்தாலும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறதே தவிர மக்களின் மனதில் மக்களாட்சி மீது வெறுப்பு பரவலாக பெருகியே வருகிறது! .. .. இந்நிலை போக்கிட வைகோ அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி அணி மலர்வது காலத்தின் கட்டாயம்! வேறு எவரையும் நம்பிப் பயனில்லை என்பதே யதார்த்தம்! .... .... .... முல்லைப் பெரியாறு போராட்டத்தில் வைகோ தனது தலைமையை ஏற்றுக் கொண்ட இயக்கங்களோடு இணைந்து சிறப்பாக நடவடிக்கைகளை முன்னெடுத்ததைப் போன்றே, தமிழகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் தனது தலைமையை ஏற்கின்ற இயக்கங்களை ஒருங்கிணைத்து தன்னம்பிக்கையோடு எப்போதும் போல் துணிச்சலாக செயல்பட்டால் போதும்! மோடி, நிதிஸ் குமார் வரிசையில் வைகோ இடம்பெற்று தமிழ் நாடும் குஜராத், பீகார் வரிசையில் ஊழலை ஒழித்திடும் நடவடிக்கைகளில் இறங்கி மறுமலர்ச்சிப் பாதையில் நாடு ஏற்றம் பெற முடியும்! தமிழகம் வாழ் இந்தியர் அனைவருக்கும், வருங்காலம் வைகோவின் தலைமையில் சிறப்பாக அமைந்திட சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
By பொன்மலை ராஜா
4/13/2011 4:14:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக