பிணையில் விடுவித்த நீதிமன்றம் விரைவில் விடுதலை வழங்கட்டும்! விநாயக் அவர்களின் பணி தொடரட்டும்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
புதுதில்லி, ஏப்.15: நக்ஸலைட்டுகள் தொடர்பு உள்ளதாக, தேசத்துரோக குற்றச்சாட்டுகளின்கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட மனித உரிமை ஆர்வலர் விநாயக் சென்னுக்கு உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.டாக்டரான விநாயக் சென், தனக்கு எதிராக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் விசாரணை நீதிமன்றம் தனக்கு தவறாக தண்டனை வழங்கியுள்ளதாக ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இவரது ஜாமீன் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எஸ்.பேடி மற்றும் சி.கே.பிரசாத் ஆகியோர் ஏப்ரல் 11-ம் தேதி விசாரித்தனர். இந்த வழக்கில் வாதாட மேலும் அவகாசம் தேவை என சத்தீஸ்கர் அரசு கோரியதால் அப்போது விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலையில் அந்த வழக்கில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் விநாயக் சென்னுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துகள்


By மதுரைக்காரன்
4/15/2011 7:06:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/15/2011 7:06:00 PM