பாவம்! தேர்தல் ஆணையம் முதல்வரையும் படாதபாடு படுத்துகிறது போலும்! ஆணையத்தைத் தாக்கியவர் அஞ்சிக் கீழ்நிலை அதிகாரிகளைக் குற்றம் சுமத்துகிறார். கீழ்நிலையில் உள்ளவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள்தான். எனினும் இந்தக் கெடுபிடி எல்லாம் தேர்தலில் ஊழலைப் பயன்படுத்துபவர்களுக்குத்தான். மக்கள் தொந்தரவு எதுவுமின்றி அமைதியாக நடமாட முடிகிறது. முன்பு பிறந்த நாள் என்றாலே விளம்பரப் பதாகைகள் சுற்றிலும் இருந்து கண்களை மிரட்டி நடமாட்டத்தைத் தடுக்கும் மதுரையில் இப்பொழுது நகரம் நன்கு காட்சியளிக்கிறது. எனவே, முதல்வர் பெருமைப்பட வேண்டும். தேர்தல் ஆணையத்தின் நல்ல செயல்பாடுகளையும் தன் ஆட்சியின் சாதனையாகவே முதல்வர் எண்ண வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கடலூர், ஏப்.10: நடுத்தர மற்றும் கீழ்மட்டத்தில் உள்ள தேர்தல் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திவருவதாக முதல்வர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒரு எல்லை உள்ளது. அது மீறப்படக்கூடாது என அவர் கூறினார்.எதிர்காலத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், ஆணையத்திடம் என்னென்ன அதிகாரங்கள் இருக்க வேண்டும் என்பது குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதிக்க வேணடும் என்றார்.நேர்மையாகவும், நியாயமாகவும், பாரபட்சமில்லாமலும் செயல்படுகிறவரையே எதிர்காலத்தில் தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும் என கருணாநிதி கூறினார்.தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா உத்தரவிட்டு வருவதாகவும் கருணாநிதி குற்றம்சாட்டினார்.தேர்தலை முன்னிட்டு உளவுத்துறை கூடுதல் டிஜிபி ஜாபர் சேட்டை தேர்தல் ஆணையம் மாற்றியது. கூடுதலாக சென்னை சிறப்புப் பிரிவு போலீஸ் எஸ்பி சி.சந்திரசேகரையும் மாற்றுமாறு ஜெயலலிதா கோரிக்கை விடுத்ததாக கருணாநிதி தெரிவித்தார்.தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவித்த கருணாநிதி, தற்போது நான்தான் முதல்வர், வாக்குகள் எண்ணப்பட்ட பிறகும் முதல்வராவேன். தோற்றால் வீட்டுக்குச் செல்வேன். அதுவரை நான்தான் முதல்வர் எனக் குறிப்பிட்டார்.
கருத்துப் பதிவை வெளியிடாத தினமணியின் நடுவுநிலைமை வாழ்க!
பதிலளிநீக்கு