ஈழத்தமிழர் படுகொலைகளுக்குத் துணை நின்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டா எனச் சீமானின் நாம்தமிழர் கட்சியும் பிற தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் மேற்கொண்ட பரப்புரையும் வாக்களிப்பு மிகுதிக்குக் காரணம். இதனை ஏன் செய்தியாளர் கருதிப் பார்க்கவில்லை என்று தெரியவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, ஏப். 14: யாரும் எதிர்பாராத அளவு வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்திருப்பது அரசியல் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.பொதுத் தேர்தலில் 60 முதல் 65 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடப்பது வழக்கம். வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகம் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது.ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலின்போது இந்தக் கருத்து அடிபட்டுப் போனது. அப்போது அதிமுகவின் வாக்கு வங்கி குறையவே இல்லை. ஆனால் திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தது. கூடுதலாக பதிவான வாக்குகளில் பெரும்பாலானவை திமுக வேட்பாளருக்குக் கிடைத்தவை.எல்லா வாக்காளர்களையும் வாக்களிக்கச் செய்வது, அதுவும் தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்கச் செய்வது என்ற அணுகுமுறையை திமுகவினர் அப்போது கையாண்டதால் அந்த வெற்றி கிடைத்தது.இப்போது முடிந்துள்ள வாக்குப் பதிவில் 80 சதவீதத்துக்கும் மேலானோர் வாக்களித்துள்ளனர்.வாக்களிக்க தாமதம் ஆனபோதிலும்கூட யாரும் கோபம் கொள்ளவோ, தகராறு செய்யவோ, திரும்பிச் செல்லவோ இல்லை. பொறுமையாகக் காத்திருந்து வாக்களித்திருக்கிறார்கள்.அந்த உறுதி, மனமாற்றம் வாக்களர்களிடம் ஏற்படக் காரணம் என்ன என்பது அரசியல் கட்சிகள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.பெண் வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். இது அரசியல் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே பெண்கள் இரட்டை இலையின் ஆதரவாளர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம்.இப்போது அவர்கள் அதிக அளவில் வந்திருப்பதற்கு மூன்று அம்சங்கள் காரணமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.1. கடந்த 5 ஆண்டுகளில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இலவச கேஸ் அடுப்பு, கிலோ அரிசி ஒரு ரூபாய் விலையில் கிடைத்தது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகளை மனதில் கொண்டு இந்த ஆட்சி தோற்கக்கூடாது என்பதற்காக அதிக அளவில் வாக்களிக்க வந்திருக்கலாம்.2. அல்லது தேர்தலுக்கு முன்பே வேட்பாளர்களிடம் பெற்ற பணத்துக்காக, அவர்களை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக வாக்களிக்க வந்திருக்கலாம். பெண்கள் சென்டிமெண்ட் உள்ளவர்கள் என்பதால் இந்த இரு வாய்ப்புகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.3. அதேசமயம், ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு வாங்கிய அரிசியைச் சமைக்க இதர மளிகைப் பொருள்களுக்கு ரூ.100 செலவிடும் அளவு விலைவாசி உயர்வு,பஸ் கட்டணம் மறைமுக உயர்வு, மின் தடைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த அரசு மறுபடி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில்கூட அவர்கள் பெருமளவு வந்திருக்கலாம் என்கிறார்கள்.பல இடங்களில் வாக்களித்துவிட்டு வந்த பெண்களிடம் விசாரித்தபோது, ""யாரும் சுத்தமான ஆட்சியைத் தரப் போவதில்லை. இந்த முறை மாற்றித்தான் பார்ப்போமே. அதனால் தவறு செய்தால் 5 ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற அச்சமாவது அரசியல்வாதிகளுக்கு ஏற்படும்'' என்று கூறினர்.மாற்றம் வேண்டும் என்ற கருத்து பரவலாகக் காணப்பட்டது என்றாலும், மகளிர் சுய உதவிக் குழு என்ற வாக்கு வங்கி இதில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.கடைசி நேரத்தில் பரிசுகள் மூலம் பெண்கள் அமைப்பினர் ஒரு பக்கமாக சாய்ந்திருப்பார்களா என்ற சந்தேகமும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.தொகுதிகளில் வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பணமோ, பரிசுப் பொருள்களோ தரப்பட்டுள்ளது என்று தெரிகிறது. ஆனால் பண பட்டுவாடா நடக்காத பகுதிகள் உள்பட, பரவலாகவே வாக்குப்பதிவு சதவீதம் அதிகமாக உள்ளது. காலையில் இருந்தே கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. எனவே பணம் தராத பகுதிகளிலும்கூட வாக்காளர்கள் அதிகமாக வந்திருப்பது பணம் தந்துவிட்டு, அந்த நம்பிக்கையில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.பல இடங்களில், ""பணம் தந்தார்கள் வாங்கிக் கொண்டோம்; ஆனால் எங்கள் விருப்பப்படிதான் முடிவெடுத்து வாக்களித்தோம்'' என அடித்தட்டு மக்கள் கூறினர். அப்படியானால் ""பணம் வாங்கியது தவறு இல்லையா?'' என கேட்டால், ""அது எங்களுக்கு உரிய பணம், இப்போதுதான் தந்தார்கள், வாங்கிக் கொண்டோம்'' என்று உரிமையோடு கூறினர்.வாக்காளர்கள் அதிகமாக வந்திருப்பது அரசியல்வாதிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றாலும், பணம் தந்ததால் மட்டும் இந்தத் தேர்தல் முடிவு இப்படி அமைந்தது என்று கூறுகிற அளவுக்கு முடிவுகள் இருக்காது என்பது மட்டும் வாக்காளர்களிடம் பேசியதில் இருந்து தெரிகிறது.இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். ஊழல் எதிர்ப்பு என்ற கருத்து அவர்களிடம் அதிகம் காணப்படுவது ஆளும் கூட்டணிக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. ஜெயலலிதா கூறியிருப்பதுபோல, வெளியில் எதுவும் சொல்லாமலே "மெüனப் புரட்சி' என்பது வாக்குச் சீட்டுகள் மூலம்தான் நடந்து வருகின்றன.1977, 1996 ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் காணப்பட்ட எழுச்சி இந்தத் தேர்தலில் காணப்படுவதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.இந்த மெüனப் புரட்சியின் முடிவுக்காக இன்னும் 4 வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை பலரையும் வேதனையடையச் செய்திருக்கிறது.
கருத்துகள்


By Padhu, New Delhi
4/15/2011 11:29:00 AM
4/15/2011 11:29:00 AM


By Rajan
4/15/2011 11:19:00 AM
4/15/2011 11:19:00 AM


By மனோகரன்
4/15/2011 11:17:00 AM
4/15/2011 11:17:00 AM


By முத்து
4/15/2011 11:11:00 AM
4/15/2011 11:11:00 AM


By மரத் thamizhan
4/15/2011 10:58:00 AM
4/15/2011 10:58:00 AM


By தமிழினியன்
4/15/2011 10:34:00 AM
4/15/2011 10:34:00 AM


By கோபி கிருஷ்ணா
4/15/2011 9:13:00 AM
4/15/2011 9:13:00 AM


By ponnampalam
4/15/2011 8:59:00 AM
4/15/2011 8:59:00 AM


By ponnampalam
4/15/2011 8:56:00 AM
4/15/2011 8:56:00 AM


By புகழேந்தி சா
4/15/2011 8:48:00 AM
4/15/2011 8:48:00 AM


By கே.ஜானகி vallabhan
4/15/2011 8:30:00 AM
4/15/2011 8:30:00 AM


By முனைவர் இரா மணிகண்ணன்
4/15/2011 8:28:00 AM
4/15/2011 8:28:00 AM


By chinna
4/15/2011 7:12:00 AM
4/15/2011 7:12:00 AM


By கருவி பாலா
4/15/2011 6:57:00 AM
4/15/2011 6:57:00 AM


By சிவ.தமிழ்மணி
4/15/2011 6:21:00 AM
4/15/2011 6:21:00 AM


By ஜெயராஜ் வி.சி.
4/15/2011 6:19:00 AM
4/15/2011 6:19:00 AM


By சிவ.தமிழ்மணி
4/15/2011 6:13:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *4/15/2011 6:13:00 AM