ஊடகத்தில் தமிழைப் பேண வேண்டும் என்ற பா.ம.க.வின் கொள்கை நிலைப்பாட்டிற்கு உறுதுணையாக இருந்தவர்; மிகை முனைப்பால் பல செய்தியாளர்கள் விலகக் காரணமாக இருந்தாலும், எந்தப் பொருண்மையானாலும் தமிழ் சார் நோக்குடன் ஆய்ந்து அறிக்கை உருவாக்குபவர்;தமிழ் ஓசை ஆசிரியர் திரு பாக்கியநாதன் மறைவிற்குத் தினமணி வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
சென்னை, ஏப்.15: தமிழ் ஓசை நாளிதழின் ஆசிரியர் பாக்கியநாதன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் ஓசை நாளிதழின் ஆசிரியர் பாலா என்கிற பாக்கியநாதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தவர் திடீரென நேற்று மறைந்துவிட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். நல்ல வாதத் திறமையோடு அரசியல் கருத்துக்களை விமர்சிக்கக் கூடியவர் பாலா. பாமக நிறுவனர் ராமதாஸ் எதைத் தொடங்குவதாக இருந்தாலும் என்னை அழைத்துத் தான் அதனை நடத்தி வைத்திடக் கூறுவார். அதன்படி தமிழ் ஓசை நாளிதழே நான் தொடங்கி வைத்ததுதான். அந்த இதழில் என்னைப் பற்றிய விமர்சனங்களைக் கூட பாலா எழுதும்போது அவரது ஆற்றலை கண்டுள்ளேன். அவரது மறைவு ராமதாஸுக்கும், பாலாவின் குடும்பத்தினருக்கும் மிகப் பெரிய இழப்பாகும். அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக