வியாழன், 22 ஜூலை, 2010

டாக்டர்கள் உதவியின்றி அறுவைச் சிகிச்சை செய்யும் ரோபோ


வாஷிங்டன், ஜூலை 21: டாக்டர்களின் வழிகாட்டுதலுடன் நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்யும் ரோபோ என்பது புதிதல்ல. இதுபோன்ற ரோபோக்களை பல ஆண்டுகளுக்கு முன்பே விஞ்ஞானிகள் வடிவமைத்துவிட்டனர். ஆனால் டாக்டர்களின் உதவியே இல்லாமல் நோயாளியிடம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும் ரோபோவை தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர்.  அமெரிக்க டியூக் பல்கலைக்கழகத்தின் உயிரி பொறியியல் துறை விஞ்ஞானிகளின் இத்தகைய கண்டுபிடிப்பு மருத்துவப் புரட்சி என்றே கருதப்படுகிறது. சமீபத்தில் பல நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சையை செய்ய வைத்து இந்த ரோபோவை விஞ்ஞானிகள் சோதித்தனர். இந்தச் சோதனை வெற்றி பெற்றது. எனினும், இந்த ரோபோவால் தற்போதைய நிலையில் சிறிய சிறிய அறுவைச் சிகிச்சையை மட்டுமே செய்ய இயலும். இதன் தொழில்நுட்பத்தை மேம்படுத்தினால் எத்தகைய சிக்கல் மிகுந்த அறுவைச் சிகிச்சையையும் இந்த ரோபோவால் செய்துவிட முடியும் என்று அதை வடிவமைத்த விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக