வியாழன், 22 ஜூலை, 2010

அரசியல் கைதிகளைப் போல் நடத்தியது மகாராஷ்டிர அரசு: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு


ஹைதராபாத், ஜூலை.21: மகாராஷ்டிர அரசு தர்மாபாதில் தங்களை கைது செய்து அரசியல் கைதிகளைப் போல் நடத்தியதாக தெலுங்குதேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.தங்களை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்த முயற்சித்ததாகத் தெரிவித்த சந்திரபாபு நாயுடு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைப் போல் தங்களை நடத்தவில்லை எனக் குற்றம்சாட்டினார்.தன்னுடைய 32 வருட அரசியல் வாழ்க்கையில் இதுபோன்ற கொடூரமான நிலையை இதுவரை சந்தித்ததில்லை என சந்திரபாபு நாயுடு கூறினார்.முதல்வர் ரோசய்யா, இதுவரை ஆந்திரா பெற்றிராத திறமையில்லாத முதல்வர் என்ற சந்திரபாபு நாயுடு, தனது மாநிலத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அண்டை மாநிலத்தவரால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படும்போது ரோசய்யா பார்வையாளராக மட்டுமே செயல்பட்டார் எனத் தெரிவித்தார்.கடவுளின் கருணையாலும், மகாத்மா காந்தியின் ஆசிர்வாதம் இருந்த காரணத்தாலும்தான் மகாராஷ்டிராவிலிருந்து தெலுங்குதேச எம்எல்ஏக்கள் உயிருடன் திரும்பியதாக சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டார்.
கருத்துக்கள்

அரசியல் போராட்டங்களில் கைது செய்யப்படுபவர்கள் அரசியல் கைதிகள்போல்தான் நடத்தப்பட வேண்டும். கொடுங்குற்றவாளிகள் போல் நடத்தினால்தான் தவறு. (உண்மையில் அவர்களையும் மனித நேயத்துடன்தான் நடத்த வேண்டும்.)ஆந்திரச் சட்ட மன்றத்தில் எதிர்க் கட்சிச் சட்ட மன்ற உறுப்பினர்களைக் குண்டு கட்டாகத் தூக்கி எறிவதை விட நன்றாகவே நடத்தியுள்ளார்கள். தம்மை முதலமைச்சராக நடத்த வேண்டும் என எதிர்பார்த்தாரா? நாட்டு நலனுக்குப் போ்ராடுபவர் விருந்தாளிபோல் நடத்த வேண்டும் எனக் கருதக் கூடாது.எனினும் தேவையற்று வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டார்கள் எனில் தவறு. தன் நாட்டு உரிமை காக்கும் போராட்டத்தில் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்குச் செயல்முறைப் பாடம் நடத்தியமைக்கு நன்றி.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 3:17:00 AM
நிச்சயமாக யாழில் அசினின் வருகையால் மக்கள் கொதித்துப்போய் உள்ளதே உண்மை. அரசு வற்புறுத்தி அழைத்து வந்திருந்த மக்களே அசினுடன் பேசுவதற்கு நிர்பந்திக்கபட்டார்கள் எங்களுக்கு தேவையானவை எல்லாம் நிம்மதியான உரிமையுடன் கூடிய வாழ்வு மட்டும்தான். எமது சொந்தங்களின் மரண வியாபாரிகள் உலக அரங்கின் முன் குற்றவாளிகளாக அறிவிக்கப்படும் பொழுதுதான் எமது இறந்துபோன சொந்தங்களின் ஆன்மா சாந்தியடையும். அதுவரை தயவுசெய்து இப்படியான ஏமாற்றுகாரர்களின் வருகைகள் எமக்கு மகிழ்சியை தரமாட்டாது. .உலக அரங்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படவேண்டியவர்களின் விளம்பரதூதராக அசின் தோற்றமளிப்பதை இங்கே விமர்சனம் செய்தவர்கள் மிகவும் அவதானமாக தவிர்த்துவிட்டனர். வருத்தத்துடன் கூடிய மற்றொரு செய்தியை கடந்தவாரம் படிக்க நேர்ந்தது. சரத்குமார் நடிகர் சங்கம் இலங்கைக்கு சென்று தமிழர்களை பார்வையிடும் என்ற செய்தியே அது. பச்சன்களையும், கான்களையும் செல்லவேண்ட்டாம் என்று சொன்ன அதே திரையுலகில் இருந்து இப்படியான வார்த்தைகளை நாம் எதிர்பார்க்கவில்லை.
By niththilan
7/21/2010 11:38:00 PM
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒருசிலதினங்களிலே கொன்று குவித்த சிங்கள பாசிச அரசின் கவுரவ விருந்தினராகவே அசின் அந்த பகுதிகளுக்கு வியயம் செய்தார் என்பதை நாம் எண்ணிபார்க்கவேண்டும். உண்மையில் இலங்கை தமிழர்களாகிய நாம் வெறும் மருத்துவ வசதிகளுக்கும், உணவுக்கும் ஏங்கிக்கொண்டிருக்கவில்லை. அரசு சுதந்திரமாக வர அனுமதித்தால், புலம்பெயர் நாடுகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஈழ தமிழ் மருத்துவர்கள் பறந்துவர தயார் நிலையிலேதான் இருக்கிறார்கள். வன்னியின் இறுதி பொழுதுகளில் உணவில்லாமல், மருந்தில்லாமல் எம்மவர்கள் சாவுடன் தத்தளித்த வேளையில் எவராவது அரசின் தடைகளை மீறி வன்னிக்குள் சென்றிருந்தால் நிச்சயமாக வரவேற்றிருப்போம். தற்போது உலகின் கண்டன கணைகளுக்கும் விசாரணை கமிஷன் களுக்கும் பயந்து தமிழர்களின் மேல் பாசம் உள்ளது போல் காட்டிக்கொள்ளும் அரசுக்கு வக்காலத்து வாங்கவே இப்படியான இனத்தை விற்கின்ற நடிகைகள் வருகைதருகிறார்கள். நிச்சயமாக யாழில் அசினின் வருகையால் மக்கள் கொதித்துப்போய் உள்ளதே உண்மை. அரசு வற்புறுத்தி அழைத்து வந்திருந்த மக்களே அசினுடன் பேசுவதற்கு நிர்பந்திக்கபட்டார்கள் எங்களுக்கு தேவையானவை எல்லாம் நிம்மதியான உர
By niththilan
7/21/2010 11:37:00 PM
இந்தியா ஒளிர்கிறது!
By Sivaraman
7/21/2010 7:32:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக