வெள்ளி, 23 ஜூலை, 2010

ஈழத் தமிழர்களை (கை) விடமாட்டோம்: கலைஞர் சொன்னாராமில்ல !

ஈழத் தமிழர்களை (கை) விடமாட்டோம்: கலைஞர் சொன்னாராமில்ல !
21 July, 2010 by admin
சமீபத்தில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட சில எம்.பிக்கள் கலைஞரைச் சந்தித்தி, சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கவேண்டும் என்று மண்டாட, நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கலைஞர் கூறியுள்ளார். சந்திப்புக்கு முன்னதாக சோனியா காந்தி அம்மையார் சிதம்பரத்துடன் உரையாடியுள்ளார். அதனை அப்படியே ஹிந்தியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து கருணாநிதியிடம் கூறியுள்ளார் சிதம்பரம். அதனை கலைஞர் செம்மொழியில் த.தே.கூட்டமைப்புக்கு சொல்லியுள்ளார். அவ்வளவுதான். அது என்ன என்று கேட்கிறீர்களா ? ஈழத் தமிழர்களை ஒருபோதும் விடமாட்டேன் என்று சோனியாசொல்ல, அதனை கை விடமாட்டேன் என்று சொல்லியிருப்பார் கொலைஞர், இல்லை இல்லை கலைஞர்.

2006ம் ஆண்டு நடந்த சில சம்பவங்களை நாம் ஒருமுறை நினைவுபடுத்திப் பார்ப்போமா ?

பல மாதங்களாக த.தே.கூட்டமைப்பினர் சிலர் சென்னையில் தங்கியிருந்தார்கள். 2006 செப்டம்பரில் ஈழத்தில் நிலமைகள் மோசமாகத் துவங்கிய போது சென்னையில் பல நாட்களாக கருணாநிதியைச் சந்தித்து ஈழ நிலமைகள் தொடர்பாகப் பேச முயர்சித்தனர். கருணாநிதியை மட்டுமல்ல ஜெயலலிதாம் ராமதாஸ், விஜயகாந்த் என்று தமிகத் தலைவர்கள் சிலரையும் பார்க்க முயற்சித்தனர் த.தே.கூட்டமைப்பினர். சம்பந்தன் சென்னை வந்துசேர்ந்த பின்னர் செப்டெம்பர் முதலாம் திகதி அவரும் மாவை சேனாதிராஜாவும் கூட்டாக கையெழுத்திட்ட கடிதத்தை சச்சிதானந்தன் மூலமாக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்திருந்தார்.

தங்களைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு சம்பந்தனும் மாவையும் அக் கடிதத்தின் மூலம் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். பின்னர் செப்டெம்பர் 4 ஆம் திகதியும் மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. மீண்டும் மீண்டும் கருணாநிதிக்கு நான்கு கடிதங்கள் எழுதப்பட்ட போதும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. இது போக சம்பந்தனும் மாவை சேனாதிராஜாவும் முதலமைச்சர் கருணாநிதியின் செயலாளர் சண்முகநாதனுடன் அடிக்கடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்புக்கான நேரம் குறித்து வேண்டுகோள் விடுத்த வண்ணமிருந்தனர். 14 ஆம் திகதி நண்பகல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியைச் சந்தித்து கலைஞருக்கான கடிதத்தின் பிரதியொன்றும் கையளிக்கப்பட்டது.

தொலைபேசி மூலமான வேண்டுகோள்கள் சகலதுக்கும் முதலமைச்சரின் செயலாளரிடமிருந்து பல்வேறு சாக்குப் போக்குகள் கூறப்பட்டு காலம் இழுத்தடிக்கப்பட்டது. செப்டெம்பர் 19 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழு புதுடில்லிக்கு புறப்பட்டுச் சென்று விட்டது. இக் குழுவினர் புது டில்லியில் தேசிய பாதுகாப்பு ஆலோகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ் சங்கர் மேனன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட் ஆகியோர் உட்பட பல அதிகாரிகளை சந்தித்துப் பேசி நிலைவரங்களை விளக்கிக் கூறமுடிந்ததெனினும் பிரதமரரைச் மன்மோகன்சிங்கைச் சந்திப்பதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை.

முதலில் டில்லியில் சந்திப்பு வேண்டி தொடர்பு கொண்ட போது நீங்கள் முதலில் மாநில முதல்வர் கருணாநிதியை சந்தியுங்கள் பின்னர் டில்லிக்கு வாருங்கள் என்று பிரதமர் அலுவலகம் கூட்டமைப்பிற்கு உத்தரவு போட்டது. ஆனால் கருணாநிதியோ கடைசி வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவே இல்லை. கருணாநிதியை சந்திக்க முடியாமல் அவமானப்பட்டு தோல்வியடைந்த கூட்டமைப்பினர் டில்லி போன போது அதிக பட்சம் அவர்கள் பார்க்க முடிந்தது. எம்.கே. நாராயணனையும், சிவசங்கரமேனனையும் மட்டுமே கடைசி வரை அவர்களை மன்மோகன் சந்திக்கவே இல்லை. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கருணாநிதியே சந்திக்கவில்லை மாநில முதல்வரே சந்திக்காதவர்களை பிரதமரும் சந்திக்கத் தேவையில்லை என்று அறிக்கை அனுப்ப பிரதமரும் சந்திக்கவில்லை.

ஆனால் சந்திப்பதற்கு முன்னரே மிகக் கீழ்த்தரமாக இறங்கி இந்த அறிக்கையை டில்லியில் வைத்து வெளியிட்டனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

“இலங்கை விவகாரத்தில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். தமிழர்கள் நலனைக் கருதி இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும்.ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் ஒரு துயரமான சம்பவம். அதை மன்னிக்க முடியாது. அந்த சம்பவத்திற்காக இலங்கை தமிழ் மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.இருப்பினும் இந்தியா இந்த துயரத்தை மறந்து விட்டு, மன்னித்து விட்டு தமிழர்கள் நலன் கருதி இலங்கை விவகாரத்தில தலையிட வேண்டும் என்றனர்“ இவ்வளவு கெஞ்சியும் எதிர்பார்த்த அளவுக்கு எந்த சந்திப்புகளும் நடைபெறாத நிலையில் சலித்துப் போன கூட்டமைப்பினர் இலங்கைக்குத் திரும்பினர்.

இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் திரும்பி இலங்கை போன பின்பு, நான் முயற்ச்சி செய்தேன் ஆனால் அவர்கள் தான் இலங்கை சென்றுவிடடர்கள் என்று சுபவீரபாண்டியன் ஒரு அறிக்கையை வெளிவிட்டார்.

மிக மோசமான வரலாற்றில் கண்ணீரும் துயரமுமான அந்த 2009 ஆண்டு ஒரு வழியாக 40,000 மக்கள் படுகொலையில் முடிந்து போனது. ” ராஜீவ் கொலை மன்னிக்க முடியாத குற்றம் அதை மன்னித்து மறந்து விட்டு இந்தியா உதவ வேண்டும்” என்று யாரிடம் சம்பந்தன் கெஞ்சினாரோ அவர்களே இக்கொலைகளின் நாயகர்கள் ஆனார்கள். அன்றைக்கு சென்னையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எந்த கருணாநிதி சந்திக்க மறுத்தாரோ அவரே இந்தியாவின் கொலைகளுக்கு துணை போன சூத்திரதாரி ஆனார். யார் யார் எல்லாம் உங்களை கடைசி நேரத்தில் கழுத்தறுத்து கை கழுவினார்களோ அவர்களை இன்று மீண்டும் சந்திக்கிறது த.தே.கூட்டமைப்பு.

அருகில் உள்ள இராமேஸ்வரக் கடலில் இலங்கை கடைற்படையின் தாக்குதலால் இறக்கும் தமிழ் மீனவர்களைக் காக்க துப்பில்லாத கலைஞரா, தமிழ் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கப்போகிறார் ? வேடிக்கையாக இல்லையா ? இதுதான் த.தே.கூட்டமைப்பின் அரசியலா, இவர்களா தமிழ் மக்களுக்கு ஒரு விடிவைத் தேடித் தரப்போகிறார்கள் ? குறைந்த பட்சம் தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியாதா தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அடிக்கடி இந்தியா சென்று அதைச் செய்யுங்கள் இதைச் செய்யுங்கள் என்று இரந்து கேட்ப்பதும், ஏதோ உலகத் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் போல அவர் தலையாட்டுவதும் எப்போது முடிவுக்குவரப் போகிறது ?

போரை நிறுத்த மாட்டோம், மக்கள் அழிவைத் தடுக்க மாட்டோம் ! எல்லாம் செய்து முடித்து விட்டு நாங்கள் இடித்ததைக் மீண்டும் கட்டிக் கொடுப்போம் என்றும் கூறுகிறது இந்தியா. அதுதான் ஈழ மக்களுக்கு இந்தியா செய்யும் உதவி என்றால், இதைச் செய்ய இந்தியா எதற்கு தன்னார்வக்குழுக்களே, அல்லது மனித நேய அமைப்புகள் போதுமே ... மாறாக அரசியல் தீர்வுக்காக இந்தியா முயர்ச்சிக்கும் என்பதெல்லாம் இன்னொரு முறை ஈழ மக்களையும் புலத்து மக்களையும் முட்டாளாக்கும் முயற்சிதான்..

அய்யா தமிழ் தேசியக் கூட்டமைப்பினரே அஞ்சிக், கெஞ்சி, அண்டி, கால்களை நக்கிப், பெற வேண்டியதல்ல ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வு.

கால்களை நக்குவதும் கெஞ்சுவதும் இன்னமும் எம் மக்களை அழிவுக்கே இட்டுச் செல்லும். மக்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் ஒப்படைத்து அவர்களை விவசாயம் செய்ய விட்டாலே போதும், சில ஆண்டுகளில் அவர்கள் தங்களை மீளமைத்துக் கொள்வார்கள். இனியும் இந்தியாவை நம்பி நீங்கள் இருந்தால் நீங்கள் சென்னையிலேயே உங்கள் அலுவலகத்தைத் திறந்து அங்கேயே இருப்பது நல்லது. ஈழ மக்களை இனியும் உங்களுக்காக அரசியல் செய்கிறோம் என்று ஏமாற்ற வேண்டாம். ஏனென்றால் இனி கருணாநிதியின் ஈழ ஆர்வம் என்பது அவரது குடும்ப முதலாளிகள் சந்தை வாய்ப்புகளுக்காகவே அன்றி ஒரு போதும் ஈழத் தமிழர்களுக்கானதாக அது இருக்ப்போவது இல்லை.

 
நகைச்சுவை வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.




Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 11763

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக