வெள்ளி, 23 ஜூலை, 2010

இன்று தாமிரபரணி சம்பவ நினைவு நாள்


திருநெல்வேலி, ஜூலை 22: மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 17 பேர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவத்தின் 11-வது ஆண்டு நினைவு தினமானவெள்ளிக்கிழமை (ஜூலை 23) அரசியல் கட்சியினர் ஆற்றில் மலரஞ்சலி செலுத்துகின்றனர். மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆட்சியர் அலுவலகம் அருகே வரும்போது நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தினர்.   இதில் தப்பிச் சென்றவர்களில் 17 பேர் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்று நீரில் மூழ்கி இறந்தனர். இந்த சம்பவம் 1999 - ம் ஆண்டு ஜூலை 23-ல் நடந்தது. ஆற்றில் மூழ்கி இறந்தவர்களுக்கு ஆண்டுதோறும் புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 11-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்த புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் வருகின்றனர்.அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்த காவல்துறையினர் ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கியுள்ளனர். கொக்கிரகுளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கருத்துக்கள்

தமிழ் ஈழத்தில் கருப்பு சூலை நாள் இன்றுதான். இங்கும ஒரு கருப்பு சூலை நாள். 
துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2010 4:40:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக