சிட்னி, ஜூலை 21- விமானத்தின் தகவல் பரிமாற்றத்தினை பதிவு செய்யும் கருவியான கருப்புப் பெட்டியை கண்டுபிடித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரன் (85) காலமானார்.1934-ல் டேவிட் வாரனின் தந்தை விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதையடுத்து, விமான விபத்திற்கான காரணத்தை கண்டறிய உதவும் வகையில் கருப்புப் பெட்டியை அவர் கண்டுபிடித்தார்.1953-ம் ஆண்டு முதல் விமானங்களில் கருப்புப் பெட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாரனுக்கு மனைவியும் 4 மகன்களும் உள்ளனர்.
கருத்துக்கள்
இன்று வரையும் வானூர்திகளின் நேர்ச்சிகளை (விபத்துகளை)க் கண்டறிய பெரிதும் உதவியாக இருப்பது கருப்புப பெட்டியே. ( பலர் எண்ணுவது போல் பெட்டியின் நிறம் கருப்பு அல்ல; துயர நிகழ்வைக் கண்டறிவதால் பெற்ற பெயர் இது.)இதனை உருவாக்கிய அருந்திறலாளர் டேவிட்டு வாரன் அவர்களுக்குத் தினமணி இணைய வாசகர்கள் சார்பில் அஞ்சலி! குடும்பத்தினர் துயரத்தில் பங்கேற்கும் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
7/22/2010 2:48:00 AM
7/22/2010 2:48:00 AM
இதுவரை நடந்த விமான விபத்துக்கள் அனைத்திலும் பிளாக் பாக்ஸ் பற்றிய விவரங்கள் மக்களுக்கு தெரிவிக்கப்படவேயில்லை, எல்லா விபத்துக்களின் சூத்திரதாரர்களும் திட்டமிட்டேக் காப்பாற்றப் பட்டு வந்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.எல்லாமே திருடஙகதான் இந்த உலகத்திலே.
By muhibb
7/21/2010 5:34:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *7/21/2010 5:34:00 PM