ஞாயிறு, 18 ஜூலை, 2010

மெட்ரிக் பள்ளிகள் தமிழுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்: அன்பழகன்


சென்னை, ஜூலை 17: மெட்ரிக் பள்ளிகள் தமிழுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு மெட்ரிக் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளிகள் சங்க மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சர் க. அன்பழகன் பேசியது: மெட்ரிக் பள்ளிகளில் ஆங்கிலம் முக்கியம் என்றபோதும், தமிழுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் கலாசாரமும், பண்பாடும் மாணவர்களைச் சென்றடையும். இதுபோல் ஒரு குழந்தை எதிர்காலத்தில் தமிழனாக வாழ, அக் குழந்தைக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார். மாநாட்டில் சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் மெட்ரிக் பள்ளிகளுக்கும், நர்சரி பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்க வேண்டும். மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவச சைக்கிள் வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் அமையவுள்ள மேல் சபையில் மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளுக்கு ஓர் இடமும், நர்சரி பள்ளி நிர்வாகிகளுக்கு ஓர் இடமும் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துக்கள்

இனமானப் பேராசிரியர் சரியாகவே சொல்லியுள்ளார். ஆனால், அவர்களாகத் திருந்த மாட்டார்கள். எனவே, பதின்நிலைப் பள்ளிகளில் தமிழுக்கு முதன்மை அளிக்கும் வகையிலும் மொழிப்பாடங்களில் தமிழ்ச்சிறப்பை உணர்த்தும் கட்டுரைகள் பாடங்களாக வைக்கும் வகையிலும் கல்வித்திட்டத்தை அரசே மாற்றியமைக்க வேண்டும். தமிழியக்கத்தின் மூத்த தலைவர் இனமானப் பேராசிரியர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2010 7:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக