செவ்வாய், 20 ஜூலை, 2010

காங்கிரஸ் விலகிவிடுமோ என்று அஞ்சுகிறார் கருணாநிதி: ஜெயலலிதா


சென்னை, ஜூலை 19: கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகிச் சென்றுவிடுமோ என முதல்வர் கருணாநிதி அஞ்சுகிறார் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
÷இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
÷கோவையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நான் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு முதல்வர் கருணாநிதி பகுதி பகுதியாக, பல நாள்களாக பதில் அளித்துக் கொண்டே இருக்கிறார்.
÷கோவை பொதுக்கூட்டத்தால் கருணாநிதி அச்சமடைந்திருக்கிறார் என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
÷விலைவாசி உயர்வுக்கும், பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்கும் மத்திய அரசுதான் காரணம் என்றும், ஆனால், மத்திய அரசை நடத்தும் காங்கிரûஸப் பற்றி நான் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
÷பதுக்கல், கடத்தல் ஆகியவற்றை தி.மு.க. அரசு ஊக்குவிப்பதுதான் விலைவாசி உயர்வுக்கு முக்கியக் காரணம். மேலும், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்த ஒப்புதல் தெரிவித்துள்ளது.
÷இதை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரே தெரிவித்துள்ளார். இதை தி.மு.க.வும் மறுக்கவில்லை. எனவேதான், விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருள் விலை உயர்வுக்கு தி.மு.க. அரசும் காரணம் என்று நான் குற்றம்சாட்டினேன்.
÷அதே சமயத்தில் மத்திய அரசையும் நாங்கள் கண்டித்திருக்கிறோம். கோவை பொதுக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
÷ஆனால், கடந்த காலத்தில் காங்கிரஸ் தலைவர்களை திமுக தலைவர்கள் விமர்சித்ததை நினைவில் வைத்துக் கொண்டு, கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகிச் சென்றுவிடுமோ என்று கருணாநிதி அஞ்சுகிறார். காங்கிரஸýடன் அதிமுகவுக்கு நெருக்கம் அதிகமாகிவிடுமோ என்ற அச்சத்தில், மத்திய அரசை நான் விமர்சிக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.
÷முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்திலும் விலைவாசி உயர்ந்து இருந்தது என்று கருணாநிதி கூறியுள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கிலோ பொன்னி புழுங்கல் அரிசியின் அதிகபட்ச விலை ரூ.17 மட்டுமே. ஆனால் இப்போது ரூ.44 வரை உயர்ந்து விட்டது.
÷அதேபோல் ஒரு கிலோ ரூ.28-க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு, இப்போது 99-க்கும், ரூ.60-க்கு விற்கப்பட்ட நல்லெண்ணெய், இப்போது ரூ.134-க்கும் விற்கப்படுகின்றன. இதேபோல்தான் மற்ற பொருள்களின் விலைகளும் உயர்ந்து விட்டன.  மேலும், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.12.50-க்கு விற்கப்பட்டது. அதாவது, ரேஷன் கடை விலையை விட, வெளிச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. அதுவே இப்போது ரூ.35-க்கு விற்கப்படுகிறது.

÷அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சாதாரண உணவகங்களில் ரூ.15-க்கு விற்கப்பட்ட ஒரு சாப்பாடு, இப்போது ரூ.50 வரை விலை உயர்ந்துள்ளது. எங்கள் ஆட்சிக் காலத்தில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஆனால், இப்போது மூன்று மடங்கு உயர்ந்துள்ளது என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கருத்துக்கள்


காங்கிரசு விலகி விடுமோ என்னும் அச்சம் கலைஞருக்கு இருப்பது போல் காங்கிரசுடன் எப்படியாவது ஒட்ட வேண்டும் என்ற ஆசை செயாவிற்கு உள்ளது. தமிழ்நாட்டின் தாழ்விற்கெல்லாம் காரணமான காங்கிரசு கட்சியை இருவருமே துணையாக்க விரும்புவதுதான் தமிழ்நாட்டின் அவலம். தமிழ்நாட்டின் நலன் கருதி இரு கட்சியினருமே காங்கிரசை ஒதுக்கிவிட்டு தங்களுக்குள் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளலாம். தமிழர்கள் தன்மானத்துடன் வாழ இவ்விரு கட்சித் தலைவர்களும் தன் மதிப்பை விட்டுத் தரலாம். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/20/2010 3:33:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக