சென்னை, ஜூலை 17: தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன் உயிரிழந்தார். இதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் அதன் நிறுவனரும், திரைப்பட இயக்குநருமான சீமான் தலைமையில் கடந்த 10-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை காலை 10.30 முதல் 11.30-க்குள் நடத்துமாறு மாநகர போலீஸôர் நிபந்தனையின் பேரில் அனுமதி அளித்தனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி இந்த ஆர்ப்பாட்டம் மாலை 3.15 மணி வரை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசியதாக, அவர் மீது ஐபிசி 153-ஏ, 188 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் மாநகர போலீஸôரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 12-ம் தேதி சீமான் கைது செய்யப்பட்டார். இதன்பின் இவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சென்னையில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் சீமானை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு, மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) சஞ்சய் அரோரா வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டார்.

கருத்துக்கள்

வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/18/2010 7:01:00 AM
7/18/2010 7:01:00 AM

By tamilan
7/18/2010 6:53:00 AM
7/18/2010 6:53:00 AM

By Vani
7/18/2010 3:33:00 AM
7/18/2010 3:33:00 AM

By Karthik
7/18/2010 3:18:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்7/18/2010 3:18:00 AM