புதன், 21 ஜூலை, 2010


தமிழக அரசுக்கு இளங்கோவன் பாராட்டு


ஈரோடு, ஜூலை 20:   ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டதற்காக தமிழக அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பாராட்டு தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி., எஸ்.டி. பிரிவு சார்பில் தாழ்த்தப்பட்டோர் கருத்தாய்வு மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியது:  காங்கிரஸôரின் கோரிக்கையை ஏற்று ராதாபுரம் பஸ் நிலையத்துக்கு காமராஜர் பெயரைச் சூட்டிய தமிழக அரசுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு காங்கிரஸ் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. 15 மக்களவை உறுப்பினர்களை வைத்துள்ள திமுக, மத்திய அரசில் 5 அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளது. ஆனால் தமிழக சட்டப்பேரவையில் 36 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸýக்கு ஒரு மாநில அமைச்சர் பதவி கூட கிடைக்கவில்லை. பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதோ, பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதோ காங்கிரஸின் எண்ணம் கிடையாது. மக்களின் தேவைகளை காங்கிரஸôர் கோரிக்கையாக வைக்கும்போது, அதை நிறைவேற்றிக் கொடுத்தால் போதும். கல்வி கற்பது முற்றிலும் இலவசம் என்பது போன்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்றார் ஈவிகேஎஸ்.இளங்கோவன்.
கருத்துக்கள்

கலைஞரின் பெயர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெயர் மாற்றப் போராட்டம் காமராசர் பெயரில்நடைபெற்று வெற்றி கண்டுள்ளனர். மறைமலையடிகள் நகரில் அமைந்த தொடர் வண்டி நிலையம் அமைக்கப்பட்ட பொழுது அடிகள் பெயர் வைக்கப்பட்டதற்கும் முன்பு போராடினார்கள்.இத்தகைய பெயர் மாற்றப் போராட்டங்களுக்குத் தமிழக அரசு முதலிடம் தரக்கூடாது.காங்கிரசிற்கு உண்மையிலேயே தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் பற்று இருந்தால் தமிழில் அமையாத ஊர்ப்பெயர்களைத் தமிழில் மாற்றப் போராட வேண்டும்.முதல்வர் நன்றி கூறுவது போல் நடிக்கும் தமிழ்ப்பகைவன் கோவன் கருத்துகளுக்கு முதன்மை தரக் கூடாது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
7/21/2010 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக