சனி, 5 செப்டம்பர், 2009

இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மார்க்சிஸ்ட்



திருவாரூர், செப். 4: இலங்கைத் தமிழர் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் என். வரதராஜன்.
திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்தில் என். வரதராஜன் பேசியது:
இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல மாதங்களாகியும், இன்றும் தமிழ் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை. இந்த மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் ஆளும் அதிகாரவர்க்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் சுதந்திரமாக வாழ மத்திய அரசு வழியை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்காமலேயே பல நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர்கள் கோரியும் இதுவரை அரசிடமிருந்து எவ்வித பதிலும் இல்லை.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. இந்த பிரச்னையில் திமுகவின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக முதல்வர் மௌனம் சாதிக்கிறார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது. சட்டம்- ஒழுங்கு நிலையும் மிகவும் மோசமடைந்துவிட்டது.
கல்வி பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற நிலையையும் உருவாக்கிவிட்டனர். மருத்துவம், பொறியியல் படிப்புக்கு லட்சக்கணக்கில் பணத்தை லஞ்சமாகக் கொடுக்க வேண்டியுள்ளது. இதைத் தடுக்க சட்டம் இயற்றிய தமிழக அரசு, அதை நடைமுறைப்படுத்தவில்லை.
தமிழக அரசின் சட்டங்கள் சமூக விரோதிகளுக்கு எதிராகச் செயல்படுவதைவிடச் சாதாரண மக்களுக்கு எதிராகத்தான் செயல்படுகிறது. இதை மக்கள் நீண்ட காலத்துக்கு அனுமதிக்கமாட்டார்கள் என்றார் என். வரதராஜன்.

கருத்துக்கள்

இனப் பேரழிவுகளைத் திட்டமிட்டு நடத்தப்பட்டதை உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்துவிட்டது என்ற அளவில் மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி எண்ணுகிறது என்றால் அக்கட்சி அமைதி காப்பதே மேல். மார்க்சியக் கருத்தில் உண்மையிலேயே ஈடுபாடு இருப்பதாக இருந்தால் ஆரியச் சார்புச் சிந்தனைகளைத் தூர எறிந்து விட்டு ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காகப் போராட வேண்டும். அவர்களின் அழிவிற்குக் காரணமான உலகப் பொதுவுடைமை நாடுகளின் தொடர்பைத் துண்டிக்க வேண்டும். மக்களை ஏய்ப்பதற்காக மனித நேயர்களாக நடிக்க வேண்டா. வெல்க தமிழ் ஈழம்! ஓங்குக ஈழ-உலக நாடுகள் உறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2009 4:22:00 AM

ANOTHER DAY, ANOTHER PROTEST, ANOTHER NEWS, ANOTHER CHANCE FOR EELAM TAMILS AND ITS SUPPORTERS TO CENSURE/BERATE INDIA, SONIA, KARUNA & CO.

By Jeeva Sridhar
9/4/2009 11:48:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக