வியாழன், 3 செப்டம்பர், 2009

பிரெஞ்சு குடியுரிமை பெற புது ச் சட்டம்: புதிய தூதர் பேட்டி




புதுச்சேரி, செப். 2: பிரெஞ்சு மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே இனி பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்படும் என்று, புதுச்சேரியின் புதிய பிரெஞ்சு கான்சல் ஜெனரல் (தூதர்) பியர் பூர்னியே கூறினார்.
தூதராக பதவியேற்றப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழம கூறியது:
பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஒருவரை பிரெஞ்சு குடியுரிமை பெறாதவர் திருமணம் செய்து கொண்டால் மட்டும் அவருக்குப் பிரெஞ்சு குடியுரிமை இனிமேல் கிடைக்காது.
பிரெஞ்சு குடியுரிமை கோருபவர் பிரெஞ்சு மொழியில் அடிப்படை மொழியறிவில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அந்த நபருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்படும் என்று பிரெஞ்சு அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்து 4 வாரங்கள்தான் ஆகிறது.
பிரெஞ்சு பேசும் மக்களிடம் அவர்கள் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே குடியுரிமை பெற்றிருந்து பிரெஞ்சு மொழி தெரியாதவர்கள் பற்றி இந்தச் சட்டத்தில் எதுவும் சொல்லவில்லை.
மேலும் இந்தப் புதிய சட்டத்தின்படி 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 65 வயதுக்கு உள்பட்டவர்களுக்கும்தான் பிரெஞ்சு குடியுரிமை வழங்க முடியும்.
மேலும் 5 ஆண்டுகள் பிரெஞ்சு நாட்டில் வசித்திருந்தால்தான் பிரெஞ்சு குடியுரிமை பெற முடியும். இது பழைய சட்டத்திலேயே இருக்கிறது.
புதுச்சேரியில் முதலீடு செய்ய 3 பிரெஞ்சு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பிரெஞ்சு நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த 1,500 மாணவர்கள் படிக்கின்றனர். புதுச்சேரியில் உள்ள அலையன்ஸ் பிரான்சே நிறுவனத்தில் தரமான முறையில் பிரெஞ்சு மொழி கற்றுத் தரப்படுகிறது. அதனால்தான் அங்கு கட்டணம் சற்று அதிகமாக உள்ளது என்றார் தூதர் பியர் பூர்னியே.
கருத்துக்கள்

மொழி உணர்வை பிரெஞ்சு நாட்டாரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் அறிந்தவர்களுக்கு மட்டுமே கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு வழங்கும் நிலை விரைவில் வர வேண்டும். தமிழ் நாட்டில் தமிழறிந்தோர் சிறுபான்மையராகக் கருதப்படும் நிலை மாற வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/3/2009 2:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக