சனி, 5 செப்டம்பர், 2009

காங்கிரசில் சேருகிறாரா விஜய்?



சென்னை, செப். 4: தமிழ்த் திரையுலகில் இளைய தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் (35), இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேரப் போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது; இருப்பினும் கட்சியில் அவர் ஏதாவது முக்கிய பதவியை ஏற்பாரா என்பதுதான் இதுவரை தெரியவில்லை.

தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும், அதை அரசியல் வாயிலாகச் செய்ய வேண்டும் என்று விரும்பும் விஜய், ஏற்கெனவே மக்களின் ஆதரவைப் பெற்ற தேசியக் கட்சியில் இணைந்து அதில் ஈடுபட வேண்டும் என்று நினைக்கிறார்.

லயோலா கல்லூரியில் படித்த பட்டதாரியான விஜய், உலக நடப்புகளிலும் நாட்டு நடப்புகளிலும் அக்கறை உள்ளவராக இருக்கிறார்.

எனவே, அரசியலில் ஈடுபடப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்திருந்தார். அவரது இந்த முடிவுக்கு பச்சைக் கொடி காட்டும் வகையில், அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், "விஜய் அரசியலில் ஈடுபடுவதில் மாற்றுக்கருத்து இல்லை' எனத் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் புதுகோட்டையில் நடைபெற்ற ரசிகர் மன்ற விழா ஒன்றில் தன் அமைப்புக்கு ""மக்கள் இயக்கம்'' என்ற பெயரையும் சூட்டினார் நடிகர் விஜய். இந்த இயக்கம் சார்பில் நடைபெறும் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

மக்கள் இயக்கத்தை எதிர்காலத்தில் அவர் அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டுள்ளார் என அவரது தரப்பு செய்திகள் தெரிவித்தன.

அதே சமயம், தேசியக் கட்சியாக விளங்கும் காங்கிரஸில் தமிழ் மாநிலப் பிரிவில் பெயர் சொல்லக் கூடிய சினிமா நட்சத்திரங்கள் யாரும் இப்போது இல்லை என்பது காங்கிரஸ் வட்டாரத்தில், அதுவும் குறிப்பாக இளைஞர் பிரிவினரிடம் நீண்ட காலக் குறையாக இருக்கிறது. அதைப் போக்கும் வகையில்தான் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் விஜயின் சந்திப்பு தில்லியில் சமீபத்தில் நடந்தது.

அரசியல் பாதையில் தடம் பதிக்க நினைத்த விஜயும், நட்சத்திரத்தை இழுக்க நினைத்த காங்கிரஸ் தலைவரும் சந்தித்துக் கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை இணையதளம் மூலம் தொடர்பு கொண்ட விஜய், தான் யார், தனது ரசிகர்களின் பலம் என்ன, மன்றங்களின் எண்ணிக்கை என்ன என்பன போன்ற தகவல்களை அவரது இணையதளத்துக்கு அனுப்பி வைத்ததாகச் சில தகவல்கள் கூறுகின்றன.

இதை அறிந்த ராகுலும் விஜயைச் சந்திக்க ஒப்புதல் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே விஜய், ராகுலின் சந்திப்பு தில்லியில் அரங்கேறியுள்ளது. அப்போது, தமிழகத்தில் கட்சியின் நிலை மற்றும் மாநில அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் 45 நிமிஷங்கள் பேசி உள்ளனர். காங்கிரஸ் கட்சியில் சேர விரும்புவதை ராகுல் காந்தியிடம் நடிகர் விஜய் அப்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வாரத்தில் அறிவிப்பு? இதையடுத்து, நடைபெற்ற மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் காங்கிரஸில் சேருவது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இருவேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. காங்கிரஸ் கட்சியில் சேரலாம் என்று ஒரு தரப்பினரும், தனிக் கட்சியாகச் செயல்படலாம் என மற்றொரு பிரிவினரும் தெரிவித்தாகக் கூறப்படுகிறது.

இதனால், காங்கிரஸில் இணைந்து பொறுப்புகளை ஏற்க நடிகர் விஜய் தயங்குவதாக அவரது தரப்பில் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியில் நடிகர் விஜய் சேர்வதாக இருந்தால், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அவரே இந்த வாரத்தில் வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்கள்

(தொடர்ச்சி) கட்சி அரசியல்தான் அரசியல் என்று எண்ணாமல் மக்கள் இயக்கப் பணிகளையும் அரசியல் எனக் கருதி காங்.கிற்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தால் அவருக்கு நல்லது. இல்லையேல் கண்களைத் திறந்து கொண்டே பாழுங்கிணற்றில் விழுவேன் என்பவரைத் திருத்த வழியில்லை. கலையுலக வாழ்விற்கு முடிவுரையை இப்பொழுதே எழுதி விட்டார் என்பதை உணர்ந்து அவரைப் புறக்கணிக்க வேண்டியதுதான்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2009 4:09:00 AM

நடிகராக இருந்தாலும் தாம் விரும்பும் கட்சியில் சேர ஒருவருக்கு உரிமை உண்டு. ஆனால், தான் வெளிப்படுத்திய உணர்விற்கேற்றதாக அக்கட்சி அமைந்துள்ளதா எனப் பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழ்ப் பெண்ணை மணந்தவர் விசய் என்கிறார்கள். ஈழத் தமிழர்களின் படுகொலைக்காகப் போராட்டமும் நடத்தியுள்ளார். இவையெல்லாம் உண்மை என்றால் ஈழத்தமிழர்களின் பேரழிவிற்குக் காரணமான தமிழினப் பகையாளிக் கட்சியுடன் சேருவது அவரது எதிர்கால வாழ்ககையை மட்டுமல்ல, நிகழ்கால வாழ்க்கையையே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடும். தமிழன், குரு, இரததினம், திலகர், வானதி முதலான இன உணர்வாளர்கள் கருத்தும் அன்புமணி போன்றவர்களின் கருத்தும் நூற்றுக்கு நூறு உண்மை. படவாய்ப்புகள் இருக்கும பொழுது ஏன் இந்தத் தற்கொலை முயற்சி. அவரைக் கலையுலகில் உருவாக்கிய தந்தைதான் இதற்குக் காரணம் என்றால் அவரது கருத்தைத் துணிந்து புறக்கணிக்க வேண்டும். அத்தகைய துணிவு இல்லை யெனில், அரசியலுக்கே தகுதியற்றவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.( தொடர்ச்சி காண்க.)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/5/2009 4:08:00 AM

Dear Vijay Sir, Be careful abot gay ragul

By ra
9/5/2009 3:35:00 AM

VIJAYYYYYYYYYY YOU DONT HAVE GUTZ TO THINK YOURSELF...YOU LISTEN TO YOUR DAD...SORRRY FOR EVERYBODY...VIJAY IS NO MORE TAMILAN...BE A MAN...DONT BE COWARD! COWARD'S DIE EVERYDAY...SOLDIER DIE ONCE...WE WONT LET OUR PEOPLE DOWN NO MATTER WHATTT...EELA'TAMILAN!!!

By EELA'TAMILAN
9/5/2009 3:30:00 AM

This guy does not have any principles in life. Would not know anything but going after the actresses. He seeks a political affiliation just to avoid IT raids. That's it. Nothing else.

By T. Gene
9/5/2009 3:30:00 AM

It should be WELCOME. Vijay is a Young hero.... He has Many youth Fans. Now a days, youths are avoiding politics. So many youths will involve in politics. But he must work in the service motive NOT for money. Why peolple always discourage the people who newly involve in politics. We think positively... Second he need not to take too much efforts as he has decide to join a national party istead of create a new party. Surely His appearance make a storm among youths but whether it is positive or negative depend upon his activities later. ALL THE BEST

By Farook,KSA
9/5/2009 3:28:00 AM

Are u paying your taxes on time?

By Raja
9/5/2009 2:44:00 AM

நடிகர்கள் அரசியலில் செல்லாக்காசு என்பது எப்போதோ நிதர்சனமாகிவிட்டது,இருக்கும் பணத்தையும் புகழையும் வைத்து தன் மார்கெட்டை தக்கவைத்து கொண்டால் அதுவே நல்லது, இந்நிலையில் பெரிய நடிகர்களையே படுபாதாளத்தில் தள்ளிய அரசியலில் நானும் விழுவேன் என்றால் அவரை விட்டுவிடுவதுதான் நல்லது,ஹீரோவாய் போன அவர் திரும்பி ஜீரோவாக வரும் நாளையில் உணர்ந்து பிரயோஜனமில்லை என்று யாராவது சந்திரசேகருக்கு சொன்னால் நன்று

By அன்புமணி
9/5/2009 2:28:00 AM

vijay unaku kaalam sariillay pool erukirathu thamilanay tinndapannijudan serathee

By bala
9/5/2009 2:24:00 AM

It is going to be a suicide for Vijay. Tamil youths are very angry with congress that they are killing our innocent Tamilians in Eelam. Remember Muthukumaran and others who sacrificed their life. Vijay fans are also youths. They will not accept it!

By Vaanathi
9/5/2009 2:14:00 AM

Hello Vijay! We tamil around the world should boycott your picture definitely See in the future.Our people are very angry over your decision.

By thilaga
9/5/2009 2:07:00 AM

இளைய தளபதியே நம்பி வந்த ரசிகர்களுக்கு துரோகமா, பல்லாயிரம் ரசிகர்களை திரட்டி ஈழத் தமிழர்களுக்காக போரடிய நடிகர் விஜய் அவர்களே தமிழன படுகொலைக்கு துணை போன கங்கிரஸ் கட்சியுடன் நட்புக்கரமா மனசாட்சியுடன் சிந்திப்பீர்

By Ratnam
9/5/2009 1:58:00 AM

விஜய் தன் தகப்பனின் தயவாலும் அதிர்ஷ்டதத்ினாலும் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக முன்னேறியவர், அவருக்கு தனி பாணி ஒன்றும் கிடாயாது,பிரபுதேவா,லாரெந்ஸ் போன்ற திறமையான நடன ஆசிரியர்களை வைதது தன் இருப்பை நிலைநாட்டி கொன்டுருக்கிறார் அவர் படங்கள் எல்லாம் படத்தின் பெயரில் தான் மாற்றமே தவிர நடிப்பு என்று பார்த்தால் ஒன்றுமே இருக்காது, இதாயெல்லாம் மக்கள் எத்தனை நாளுக்குத்தான் ரசிபபர்கள், மக்கள் வெறுத்து ஒதுக்குவதற்கு முன் தானே விலகி காங்கிரஸில் இணைவதுதான் அவரின் எதிர்காலத்துக்கு நல்லது,

By siva
9/5/2009 1:32:00 AM

I will totally boycott Vijay's films here after. I will tell my children also that Vijay is a coward.

By Krips
9/5/2009 1:32:00 AM

Vijay No doubt you will be Zero

By Saravanan
9/5/2009 1:09:00 AM

VIJA ARE YOU LOYAL TO SONIA OR TAMIL PEOPLE AROUND THE WORLD MAKE YOUR DECISION SOON What about your step son is saying? You want tigers flag?:

By guru
9/5/2009 12:54:00 AM

Vijay should not join congress. He will become zero instead of hero, if he chooses to do so. Elections are long way to go. Don't fool your fans.

By Vijay Fan s
9/5/2009 12:09:00 AM

IF VIJAY JOINS CONGRESS, THAT IS THE END OF HIS HIGH CAREER. HIS REMAINING IMAGE WILL BE SPOILED. NOBODY GOING TO CHEER HIM ANYMORE AND NOBODY IN FILM INDUSTRY GOING TO SUPPORT HIM. IT IS AS IF HE IS DIGGING A BIG PIT FOR HIMSELF. DON'T ENTER INTO THIS OPPORTUNIST PARTY LIKE SIVAJI DID. YOU MAY JOIN DMDK/BJP/DMK INSTEAD.

By Thamizhan
9/4/2009 11:59:00 PM

விஜய் அரசியலுக்கு வரவேண்டும். தன்னலம் இன்றி தொண்டாற்ற வேண்டும். விஜயால் காங்கிரசில் மாற்றம் ஏற்படும். DMK மற்றும் AFMK பிடியினில் இருந்து தமிழகம் தப்ப வழி கிடைக்கும்.

By நவீன் சென்னை
9/4/2009 11:44:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக