சென்னை, ஆக. 30: இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை காப்பாற்றக் கோரி வரும் புதன்கிழமை (செப்டம்பர் 2) ரயில் மறியல் நடத்தப்படும் என்று திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கைப் போரில் பல லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதுபோதாது என்று முகாம்கள் என்ற பெயரில் முள் வேலிகளுக்குள் 3 லட்சம் தமிழர்கள் முடக்கி வைக்கப்பட்டு, மிருகங்களை விட கேவலமாக நடத்தப்படுகின்றனர். இதற்கு மேலும் ஈழத் தமிழர்கள் துன்பத்தை அனுபவிக்கவே முடியாது. இந்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு முகாம்களில் உள்ள தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 2-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். பெரியார் திடலில் இருந்து அன்று காலை 10 மணிக்கு ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார் வீரமணி.
-----------------------------------------------------------------
1/2)
செப்.2 அன்று ஓணம் ;எனவே, இந்நாளை மாற்ற வேண்டும் என முடிவெடுக்கக் கூடாது. நம்பியார்களும் மேனன்களும் தமிழின அழிவிற்கு மூலக் காரணமாக இருப்பதால் மலையாளிகளுக்கு உணர்த்துவதற்காக அன்றே போராட்டம் நடை பெற வேண்டும்.
2. ஆனால், ஆளுங் கட்சிகளுக்குப் பின்பாட்டு பாடுவதையே கொள்கையாகக் கொண்டுள்ளதாலும் இந்த அடிப்படையில் நடந்து முடிந்த தேர்தலில் கொலைகாரக்கும்பலுக்கு ஆதரவு தந்ததாலும் இவர் மீது நம்பகத்தனமை மனித நேய ஆர்வலர்களிடம் இல்லை.
ஆதலின் தன்னைத் தமிழ் இன ஆர்வலராகக் காட்டிக் கொள்ள இந்தப் போராட்டம் இடம் தராது.
3.இலங்கை மக்களுக்கும் ஈழ மக்களுக்கும் ஆதரவாகப் பெரும் பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டும் காங்.கின் தவறான வீம்பான தமிழின எதிர்ப்புக் கொள்கையால்தான் ஈழ மக்கள் அழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, எப் போராட்டத்தாலும் பயன் இல்லை. ----
--- தொடர்ச்சி 2/2 காண்க
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/2)
4. எல்லா மாநிலங்களிலும் அனைத்துத் தரப்பாரையும கூட்டி ஈழத் தமிழர்களின் உரிமைக்கு ஆதரவான நிலையை எடுக்கும் வகையில் விளக்க வேண்டும். அவர்கள் மூலம் காங். அரசை நெருக்க வேண்டும்.5. பன்னாட்டுத் தலைவர்களையும் சந்தித்து இதே போன்று விளக்கி வலியுறுத்தி அனைத்து நாடுகளும் தமிழ் ஈழத்தை அங்கீரிக்க ஆவன செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக