மதுரை, ஆக. 31: இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் குழு செல்லத்தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் ஜோயல்பவுல் அந்தோணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முத்தரப்பு போட்டிகள் செப்.8 முதல் 13-ம் தேதிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசு சர்வதேச மனித உரிமை அமைப்புகளை வடபகுதியில் அனுமதிக்கவில்லை. சர்வதேசச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள், வெடிபொருள்களை இலங்கை பயன்படுத்தி வருகிறது.
கடந்த 60 ஆண்டுகளில் 12 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தற்போதும் லட்சக் கணக்காணோர் திறந்தவெளி சிறையில் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அனுப்பினால் சர்வதேச சமூகம் இந்தியாவை மதிக்காது.
எனவே, இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்குச் செல்லத் தடைவிதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு தாக்கலுக்கான வக்காலத்தில் 512 வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
இலங்கையில் சுமுக நிலை நிலவுகிறது என்னும் பொய்யைக் காக்கவாவது இந்தியா மட்டைப்பந்தாட்டக் குழுவை இலங்கைக்கு அனுப்பத்தான் செய்யும். பேரவலங்களுக்குத் தூண்டுதலாயும் உடந்தையாயும் இருந்த, இருக்கும் அரசு வேறென்ன செய்யும்? போக வேண்டா என விளையாட்டுக் குழுவினருக்கு நாம் அழுத்தம கொடுத்து வெற்றி காண்போம்!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
9/1/2009 3:30:00 AM
TAMIL people PLEASE think………… Mass killings pogroms against Tamils in 1956, 1958, 1977, 1981 and 1983. Over 3,000 Tamils were killed in 1983 alone and still continue. More than 150,000 Tamils killed from 1983. TAMIL people PLEASE think….. Indian weapons to kill our TAMIL BROTHERS, SISTERS and CHILDREN….……. For example…… 1983: Welikade Prison Massacre, 1985: Valvettithurai Massacre, 1985: Vavuniya Massacre, 1985: Tiriyai Massacre, 1986: Iruthayapuram Massacre, 1986: Akkarapattu Massacre, 1987: Kokkaddichcholai Massacre , 1990: Saththurukkondan Massacre, 1992: Mylanthanai Massare, 1995: Chemmani Massacre, 1997: Kalutara prison Massacre, 2000: Bindunuwewa rehabilitation camp Massacre, 2000: Kumarapuram massacre, 2001: Mirisuvil Massacre, 2006: Allaipiddy Massacre, 2006: Muthur Humanitarian Aid workers Massacre ……………………..
9/1/2009 1:23:00 AM
This is most funniest things petition ever. Where the hell வழக்கறிஞர் ஜோயல்பவுல் was, when Indian Team vistited SL on few months and won the One day series..
9/1/2009 1:10:00 AM