செவ்வாய், 1 செப்டம்பர், 2009

இந்தித் திணிப்பு கூடாது: அமைச்சர் தங்கம் தென்னரசு



சென்னை, ஆக. 31: ""இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியைக் கட்டாயப்படுத்தக் கூடாது'' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
""நாடு முழுவதும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்க வேண்டும்'' என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்விக்கான மத்திய ஆலோசனை குழுவின் 56-வது கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, ""தமிழக அரசு இரு மொழி கொள்கையையே பின்பற்றும். 3-வது மொழி குழந்தைகளுக்கு சுமையாக அமையும்'' என்றார். கூட்டத்தில் மேலும் அவர் பேசியது:
""இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக திணிக்கப்படாது'' என்று முதல் பிரதமர் சவகர்லால் நேரு அளித்த உறுதி மொழியை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும்.
தமிழக அரசு இரு மொழி கொள்கையைப் பின்பற்றி வருகிறது. முதல் மொழியாக தாய் மொழியும், இரண்டாவதாக ஆங்கிலமும் இருக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை.
ஆங்கிலம் உலக அளவில் தொடர்பு மொழியாக உள்ளது. அதோடு நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், தகவல் தொழில்நுட்பத் துறையில் எளிதில் வேலை பெறவும் ஆங்கிலம் அவசியமாகிறது. மூன்றாவது மொழியை பள்ளிகளில் அறிமுகப்படுத்தினால் அது நமது குழந்தைகளுக்கு மிகவும் சுமையாக அமைந்துவிடும்.
சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 2010-11-ம் கல்வி ஆண்டில் 1 மற்றும் 6-ம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை கொண்டுவரப்படும். மற்ற வகுப்புகளில் 2011-12 ஆண்டில் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும்.
அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.), செயல்வழி கற்றல், மதிய உணவுத் திட்டம் ஆகியவை தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து கல்வியை மேம்படுத்த முடியும். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது'' என்றார் தங்கம் தென்னரசு.

கருத்துக்கள்

நல்ல கருத்துப் பதிவைத் தமிழக அரசு பள்ளிக் கல்வி அமைச்சர் மூலம் மேற்கொண்டுள்ளமைக்குப் பாராட்டுகள்! ஈழத் தமிழர்களின் போராட்ட வரலாற்றை வெளியிடும் தினமணி இந்தித் திணிப்பு குறித்தும் ஒரு தொடர வெளியிட வேண்டும்.எனினும் தினமணி எப்பொழுது இந்தி எனத் தமிழ் எழுத்துகளிலேயே - கிரந்த எழுததைப் பயன்படுத்தாமல் - குறிக்கப் போகிறது? தினமணியின் தமிழ் உணர்வு வெறும் வேடமன்று என மெய்ப்பிக்க வேண்டாவா? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/1/2009 3:51:00 AM

Without Hindi, you cannot step outside Tamil Nadu. Every state in India gives three 3 language options (Hindi, Eng, Local Lanugaue) except Tamil Nadu. -Jeeva. Jeeva, please open your eyes. I survived in andhra by learning telugu, now i am surviving in Karnataka-Mysore by learning kannada. if you want to lick hindi, please continue. don't generalise.

By Kaiser
9/1/2009 2:29:00 AM

இந்தியாவில் மிகப்பழமையான தாய்மொழி. பெங்களூரில் முக்கால்வாசி தமிழர்கள், குறிப்பாக ஐ.டி யில் 80% மேல் தமிழர்கள். இந்தித்திணிப்பால் நாம் திரவிட மொழிகளான தெலுங்கு போன்ற அண்டை மொழிகளை அறிய மறந்தோம். சிலர் தங்கள் தாய்மொழியையே மறந்தனர். சிங்கபூர் தமிழ் வானொலி அலைவரிசைக்கு பக்கத்தில் வலுவான இந்தி FM அலைவரிசையை வைத்தும், பக்கத்து மாநிலங்களில் பல தமிழ் அலைவரிசைகளை கேட்க முடியாமல் திணிப்பை செய்கின்றது. அக்காள தூதர்ஷன் தமிழ்நாடிலேயே தமிழ் துரோகம் செய்தது. பொதுவாக இந்தி மற்றும் வடமொழி மீது ஆர்வம்கொண்டோர் தமிழை ஆதரிப்பதில்லை. அதனால் தான் ஆங்கிலோ இந்திய உறுப்பினர் சட்டசபையில் ஆங்கிலத்தை எதிர்க்காதீர்கள், அது தமிழர்கள் உலகலவில் வர்தகம் மற்றும் இனைப்பு மொழியாக தமிழர் வளர்ச்சிக்கு படுபட்டது. ஆனால் இந்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தையும் அகற்றிவிடும் என்று சரியாக கூறினார்.

By Thamizhan
9/1/2009 12:09:00 AM

Without Hindi, you cannot step outside Tamil Nadu. Every state in India gives three 3 language options (Hindi, Eng, Local Lanugaue) except Tamil Nadu. Without Hindi, you cannot travel freely or cannot get a blue color jobs anywhere outside Tamil Nadu. First of all Thanga Thennarasu should declare to the public where his childer are studying. Damn sure they must be studying a high profile Matriculation schools and may speak Hindi better than Tamil. Anothey Hypocracy by the politicians.

By Jeeva Sridhar
8/31/2009 11:45:00 PM

இந்தி 30% மக்கள் பெசும் ஒரு ஆரிய நாடோடிகள் கலப்பிட்ட மொழி. பாக்கிஸ்தானிலும் இதே கதி தான். அங்கு பஞ்ஜாபி 48%, சிந்தி 12% , உருது 8%. ஆனால் உருதுதான் தெசிய மொழி. சிங்கபுரில் சைனீஸ் 70%, தமிழ் 6%, ஆனால் இரண்டும் ஆட்சிமொழிகள். ஆனால் இந்தியாவில் தமிழ் ஆட்சி மொழியில்லை. தமிழ் மக்கள் இந்தியா, இலங்கை, இந்தொனெசியா முழுவதும் பரவியிருந்தனர். நாளைக்கு சீனா பிடித்தால், சைனீஸ் 50% ஆக தேசிய மொழி என்று கூறுவார்கள், அறிவுகெட்டு சைனீஸ் படிப்பார்கள். வடமானிலங்களில் வசிக்கும் பொழுது வேண்டுமானால் அப்பொழுது ஒரு வாரத்தில் தணியாக கற்றுக்கொள்ளலாமே தவிர பாடங்களில் திணிக்கவே கூடாது. பல தமிழர்கள் தமிழ் நாட்டிலும் பக்கத்து மாநிலங்களிலும் தாய்மொழி படிக்கத்தெரியாமல் முந்தானை துவைக்கிறார்கள். ஒருவனுக்கு தன் தாய்மொழியும், வெளிமொழியாக வர்த்தக, விஞ்ஞான, தகவல் தொழினுட்ப, சமத்துவ மொழி ஆங்கிலமும் போதும். பிழைக்க தென் இந்தியா, கொழிக்க வெளிநாடு.

By thamizhan
8/31/2009 11:35:00 PM

tamil natin arasiyal vaathigalay onnu all india language hindyai kathukkudunga illayale indiavil ulla anaivarukkum tamilai kathukkudunga city students ok But village students no english ,no hindi only on tamil intha nilamai tamil natil ok oter statela work panna kastamaa irrukku plzzzzzzzzz allow hindi on tamil nadu school sylabous from 1 standard

By sathiyaraj
8/31/2009 11:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக