இந்திய அரசாங்கத்திற்கு கோத்தபாய நன்றி தெரிவித்துள்ளார் |
பிரசுரித்த திகதி : 28 Aug 2009 |
இந்தியாவால் வழங்கப்பட்ட கடல் கண்காணிப்பு கப்பலை இலங்கைக் கடற்படையில் இணைத்துக் கொள்ளும் வைபவம் இன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவால் வழங்கப்பட்ட ரோந்துக் கப்பலுக்கு சயூரால எனப் பெயரிடப்பட்டு அது உத்தியோகபூர்வமாக இலங்கைக் கடற்படையில் இணைக்கப்பட்டது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்தியாவுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாகவும், இக்கட்டான காலகட்டங்களில் இந்தியா தமக்கு உதவியிருப்பது இரு நாட்டின் நல்லுறவை மேலும் கட்டியெழுப்ப உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடமும் விக்ர என்றழைக்கப்படும் இந்திய ரோந்துப் படகொன்றை இந்தியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்த ரோந்துப் படகு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இலங்கைக் கடற்படையில் உத்தியோகபூர்வமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்டது. தொலைதூர அவதானிப்பு மற்றும் சக்திவாய்ந்த தொலைத் தொடர்பு சாதனங்கள் அடங்கிய இந்த நவீனரக ரோந்துக் கப்பல்களை இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக