சனி, 5 செப்டம்பர், 2009

சென்னை, செப்.3-

முதல்- அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று அகில இந்தியாவையே துயரத்தில் ஆழ்த்தி விட்டு, விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளையதினம் (4.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை அறிவிப்பினை ஒட்டி வணிக நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் நாளை விடுமுறை அளித்து, இந்த துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
Saturday, September 05,2009 01:19 PM, ravi said:
கலைஞர் அவர்களே !! இப்படி எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு ஐஸ் வைப்பதால் காங்கிரஸ்காரன் ஒன்றும் ஏமாற மாட்டான். உங்களை பற்றி காங்கிரஸ் காரர்களுக்கு நன்றாகத் தெரியும்
Friday, September 04,2009 03:33 PM, முத்து said:
நம் பக்கத்துக்கு வீட்டில் ஒருவர் இறந்தால், அவர் நமக்கு நெருங்கியவர் இல்லை என்றாலும் .... நாம் அலுவலகம்/கல்லூரி லீவ் எடுத்து அங்கு செல்வது இல்லையா?? லீடர் என்பது ஒரு குரூப் இன் அடையாளம். ராஜசேகர் ரெட்டி ஆந்திராவின் அடையாளம். அதற்காக தமிழகத்தில் ஒரு நாள் விடுமுறை மிக தப்பாக எனக்கு தெரியவில்லை. ஒரு மாநில மக்களின் அதிகபட்ச துக்க அனுசரிப்பு வெளிப்படுத்த இதற்கு மேல் வழி இருப்பதாகவும் தெரியவில்லை.
Friday, September 04,2009 01:54 PM, Ilakkuvanar Thiruvalluvan said:
ஆந்திர முதல்வரும் அவர் குழுவினரும் மோதல் நேர்ச்சியால்- விபத்தால்- அகால மரணம் உற்றது உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கின்றது. ஆனால் இதற்காகத் தமிழ் நாட்டில் விடுமுறை அளிப்பதும் தனியார்நிறுவனங்களையும் விடுமுறை அளிக்குமாறு வலியுறுத்துவதும்முறையன்று. தமிழ் நாட்டு நலனுக்காகவோ தமிழ் மக்களுக்காகவோஆந்திராவில் வசிக்கும் தமிழர் நலனுக்காகவோ குறிப்பிடும்படியானஉருப்படியான செயல் செய்தவரன்று. அணுவியல் அறிஞர் பாபா தான்மறைந்தாலும் பாபாஅணுமின் நிலையம் இயங்க வேண்டும் எனவேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் வானூர்தி மோதலால் அகாலமரணமுற்றபோது அணுவகத்திற்கு விடுமுறை விடப்படவில்லை. மத்தியஅரசு சில ஆண்டுகளுக்கு முன்பே அரசியல் தலைவர்களின் மறைவிற்குவிடுமுறைகள் விடப்படுவதைக் கட்டுப்படுத்தியுள்ளது.தமிழ் நாட்டில் பிறமாநிலம் தொடர்பான விடுமுறைகள் இருக்க, பிற மாநிலங்களில் பூர்வீகக்குடியினராகத் தமிழர்கள் இருப்பினும் தமிழ் மக்கள் தொடர்பானவிடுமுறைகள் விடப்படுவதில்லை. அரசு 1 வாரத் துக்கம்கடைப்பிடிக்கலாம். அரசு அலுவலகங்கள் காலையில் அமைதிகடைப்பிடித்துத் தம் பணியைத் தொடங்க அல்லது மாலை அமைதியைக்கடைப்பிடித்துக் கலைந்து போக வழி வகுத்திருக்கலாம். காங்.கினஜால்ராவாக கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என விடுமுறைவிடுவது மிகவும் தவறு. . எனவே விடுமுறை விடும் முறையற்றபோக்கைக் கண்டிக்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன். (உடன்மறைந்த திரு சுப்பிரமணியம் தமிழரோ?) எதிர்பாராமல் இறப்பைத்தழுவியவர்களின் குடும்பத்தினருக்கு நம் ஆழ்நத இரங்கல்கள். விடுமுறைவிடும் தமிழக அரசின் போக்கிற்குக் கண்டனங்கள். -- இலக்குவனார்திருவள்ளுவன்
Friday, September 04,2009 12:16 PM, தமிழீழநாதன் said:
ரெட்டியார் ? ரெட்டி யார் ? சமீபத்தில் விபத்தில் இறந்துபோனவர் .... இளமைகாலத்தில் மருத்துவராக இருந்து அரசியலில் கால்வைத்தவர் ... ஆந்திரத்தில் காங்கிரஸ் மறுபடியும் கால் ஊன்ற காரணமாக இருந்தவர் .... ஆந்திர மாநிலத்தில் முதலமைச்சர் ....மனிதநேயம் உள்ளவர்.. இவரின் இறப்பு வருத்தமளிப்பது உண்மைதான் ... அதற்காக தமிழ்நாடு அரசு விடுமுறை விடவேண்டிய காரணம் என்ன ? முத்துகுமார் உள்பட பதினைந்து தியாக தீபங்கள் தான் உடலை இனவிடுதலை வரலாற்றிற்காக தீவைத்துக்கொண்டு உலகையே திரும்பிப்பார்க்க செய்தார்களே அப்போது இந்த தமிழக அரசு மாணவர்களிடம் கலவரம் வரக்கூடாது என்ற பெயரில் பள்ளி கல்லூரிகளுக்கும் மட்டும் விடுமுறை அளித்தது .. அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட்டது ..... ரெட்டியின் உயிர் மட்டும் உயிர் முத்துகுமாரின் உயிர் என்ன ........ ? அதை விடுங்கள் .... இந்த பதினைந்து பேருக்காக விடுமுறை கூட வேண்டாம் ஒருவரி இரங்கல் கவிதை கூட எழுதாத ஐயா கருணாநிதி இன்று ரெட்டிக்காக மூன்று நாள் திமுகவில் அனைத்து விழாக்களும் ரத்துசெய்துள்ளர் ... அப்படி என்றால் இந்த ரெட்டி யா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக