திங்கள், 31 ஆகஸ்ட், 2009


சேபியப் படுகொலைகளை விட இலங்கையில் இடம்பெற்றது கொடூரம்
பிரசுரித்த திகதி : 31 Aug 2009

சேபியாவில் 2005ம் ஆண்டில் பல இளைஞர்கள் அரசபடைகளால் கொல்லப்பட்டனர். அப்போது வெளிவந்த திடுக்கிடும் வீடியோக் காட்சிகளை வெளியிட்டதும் சனல்4 தொலைக்காட்சியே. நாம் இங்கு அந்த வீடியோவை இணைத்துள்ளோம். அபோது இப் பிரச்சனை ஐ.நா வால் கையாளப்பட்டது. ஐ.நா மற்றும் உலகநாடுகளின் அழுத்தம் காரணமாக குற்றவாளிகள் போர்க்குற்ற நீதிமன்றில் நிறுத்தப்பட்டனர்.

அரச படைகளுக்கு 58 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இக்கொலைகளைப் பார்வையிடும்போது அங்கு அவர்கள் நிர்வாணமாக்கப்படவில்லை, சித்திரவதைகளுக்கு உள்ளாகவில்லை, கொலைசெய்வதற்கு முன்னர் தாக்கப்படவில்லை.

ஆனால் இலங்கை இராணுவமோ அவை அனைத்தையும் செய்கின்றது. இருப்பினும் ஐ..நா உட்பட பல உலகநாடுகள் தொடர்ந்து மவுனம் காப்பது மிகவும் ஆச்சரியத்துக்குரியதும், வருந்தத்தக்க விடயமும் ஆகும். இது தொடர்பாக சென்னையில் உள்ள தமிழ் உணர்வாளர் ஒருவர் ஐ.நா வுக்கு எழுதிய மடலின் பிரதியை அதிர்வு இணையம் வெளியிடுகிறது.


தொடக்கப் பக்கம் செல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக