மதுரை, ஆக. 30: சட்டப் பேரவையில் அதிமுக-2 என செயல்பட அனுமதிக்கக் கோரி பேரவைத் தலைவரிடம் மனு அளிக்க இருப்பதாக அதிமுகவிலிருந்து விலக்கப்பட்டுள்ள எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
மதுரையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை அவரது இல்லத்தில் நடிகரும், எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர், நடிகரும், இயக்குநருமான சேரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.வி.சேகர் கூறியதாவது:
என்னை நீக்கியது தொடர்பாக சட்டப் பேரவைத் தலைவருக்கோ அல்லது எனக்கோ அதிமுகவிலிருந்து அதிகாரபூர்வமாக எவ்விதக் கடிதமும் இதுவரை அனுப்பப்படவில்லை.
எனவே, திமுக ஆதரவு பெற்ற எம்.எல். ஏ.வாக, "அதிமுக-2' என சட்டப் பேரவையில் நான் செயல்பட அனுமதி கோரி பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளேன். அவர் இதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் அழகிரியை மரியாதை நிமித்தமாகவே நாங்கள் (சேரனுடன்) சந்தித்தோம்.
திரைப்படத் துறையில் நடிகர்கள் முன்னணியில் இருக்கும்போதே ரசிகர்களை சந்திக்க வேண்டும்.
"மார்க்கெட்' இழந்த பின்னர் ரசிகர்களை சந்திப்பதில் எவ்விதப் பலனும் இல்லை. இதே நிலையில்தான் அதிமுக தலைமை தற்போது உள்ளது என்றார் எஸ்.வி.சேகர்.
தனித்து நின்ற பொழுது 1000 வாக்குகள் கூட வாங்காத இவர், கட்சிச் சார்பில் நின்றபின்தான் வெற்றி பெற்றுள்ளார். இதனால் தனக்குப் பெரும் செல்வாக்கு இருப்பதாகத் தப்புக் கணக்கு போடுகிறார். கட்சி முத்திரை வேண்டுமெனில் பதவியைத் துறந்து தான் விரும்பும் கட்சியின் ஆதரவைப் பெற்றுத் தேர்தலில் போட்டியிடுவதே முறையாகும். மேலும், ஆரியம், ஆரியம எனப் பேசும் இவரைத் தி.மு.க. நம்புவதோ பகடைக்காயாகப் பயன்படுத்தலாம் என எண்ணுவதோ கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிந்து கொள்வது போன்றதாகும். எனவே, இவரை நம்பாமல் இவர் விலகினால் தன் கட்சி சார்பில் ஒருவரை நிறுத்தி வெற்ற வாகை கூட முயலுவதே திமுக விற்கு அழகு. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
8/31/2009 2:33:00 AM
SV is making a record of 12th split in ADMK.
8/31/2009 1:13:00 AM