ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009

தலையங்கம்:: வீதியில் விளையாடும் விதி!



உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை ஒன்று திடுக்கிடும் புள்ளிவிவரத்தைத் தருகிறது. 2006 - 2007-ம் ஆண்டுகளில் 178 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையின்படி, சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் மரணமடைவதாகத் தெரிகிறது. படுகாயமடைவோரின் எண்ணிக்கை இரண்டரை கோடிக்கும் அதிகம் என்கிறது அந்த ஆய்வு.அந்த ஆய்வில் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், உலகிலேயே மிக அதிகமானோர் சாலை விபத்துகளில் பலியாவது இந்தியாவில்தான் என்பதுதான். 2007-ல் மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,14,590. அதாவது, ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 13 பேர் இந்தியாவில் சாலையில் நடக்கும் விபத்துகளில் மரணமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட 6.9 சதவிகிதம் அதிகம்.இந்தியாவைவிட அதிகம் மக்கள்தொகையும், மோட்டார் வாகனங்களும் உள்ள நாடு சீனா. ஆனால், அங்கே 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள் 89,455 பேர்தான். அதுமட்டுமல்ல, இந்தியாவில் சாலை மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் அதேவேளையில் சீனாவில் இந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகிறார்கள் என்பதுதான் நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.சாலை விபத்துகளில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டிருப்பதைவிட மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. பல விபத்துகள் முறையாக வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மரணமடைவது இந்தப் புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவும் இல்லை.இந்தியாவைவிட அதிக அளவில் வாகனங்கள் இருந்தாலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் சாலை விபத்துகள் கணிசமாகக் குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணம், அங்கே சாலை விதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும், விபத்துகள் நேராமல் இருப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வந்தபடி இருப்பதும்தான். சுவீடன், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகக் குறைவாகவே சாலை விபத்துகள் நடைபெறுவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் மிக அதிகமாகப் பலியாவது லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும்தான். சாலை மரணங்களில் 22 சதவிகிதம் பலியாவது இவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிறது அறிக்கை. அதற்கு முக்கியக் காரணம், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும், முறையான உரிமம் இல்லாமல் உதவியாளர்கள் லாரியை இயக்குவதும், சரியான வாகனப் பரிசோதனை இல்லாமல் இருப்பதும்தான் என்பதையும் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.19 சதவிகிதம் இரண்டு சக்கர வாகனங்களும், 11 சதவிகிதம் பஸ்களும், 9 சதவிகிதம் பாதசாரிகளும் சாலை விபத்துகளில் பலியாவதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமாக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் என்கிற பெருமையை ஆந்திரப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் தட்டிச் செல்கின்றன. அடுத்தபடியாக 12.5 சதவிகிதம் சாலை மரணங்களுடன் உத்தரப் பிரதேசமும், 12 சதவிகிதம் சாலை மரணங்களுடன் தமிழ்நாடும் சாலை விபத்துகளில் சாதனையாளர்களாகத் தலைகுனிகின்றன. நகர்ப்புற சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் என்று பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. மேலும் ஆட்டோக்களும், இரு சக்கர வாகனங்களும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று குற்றம்சாட்டப்படுகின்றன. ஆனால், நாம் கவனிக்காமல் விட்டுவிடும் விஷயம் என்னவென்றால், சாலை விதிகளை மதிக்காமல் நினைத்த இடத்தில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளும்கூட சாலை விபத்துகளுக்குக் காரணமானவர்கள் என்பதை.வளர்ச்சி பெற்ற நாடுகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள்கள் செல்ல அகலமான நடைமேடைகள் நகர்ப்புறங்களில் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. பிளாட்பாரங்கள் கடைத்தெருவாகி விடும் நிலையில் பாதசாரிகள் சாலையைப் பயன்படுத்தியாக வேண்டிய நிர்பந்தம் இங்கே ஏற்பட்டு விடுகிறது. மேலும், ஆங்காங்கே இடைவெளிவிட்டு பாதசாரிகள் சாலையைக் கடக்கப் போதிய வசதிகள் செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பாதசாரிகளின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு சாலைகளும், சாலை விதிகளும் வளர்ச்சி பெற்ற நாடுகளில் அமைக்கப்படுவதால்தான் அங்கே விபத்து விகிதம் குறைகிறது என்று தோன்றுகிறது.சாலைகளைக் கட்டணச் சாலைகளாக்குவதில் அரசு காட்டும் முனைப்பும் அக்கறையும் விபத்துகளைத் தவிர்ப்பதில் காட்டத் தவறுகிறதே, அங்கேதான் பிரச்னையே எழுகிறது. உரிமம் வழங்குவதிலும், வாகனப் பரிசோதனையிலும் லஞ்சம் வாங்க அனுமதித்துவிட்டு, கணக்கு வழக்கில்லாமல் வாகனங்களைச் சாலையில் ஓட விட்டுவிட்டு, பிரமாதமாக சாலைகளை அமைத்துக் கட்டணம் வசூலித்து என்ன பயன்?
கருத்துக்கள்

ஆசிரியவுரைக்கு மிகுதியான வாசகர்கள் கருத்து தெரிவித்து இருப்பது இவ்வுரைக்குத்தான். எனவே, இதன் சிறப்பு நன்கு தெரிகிறது. மக்கள் பாதுகாப்புடன் நெருங்கிய தொடர்புடைய சாலைப் போக்குவரது்த்து குறித்த விழிப்புணர்வை உலக நல்வாழ்வு நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் சிறப்பாக ஆசிரிய உரை எழுதப்பட்டுள்ளது. இயற்கை மரணங்கள் அல்லாத உயிர் இழப்புகளைக் குறைக்க அரசு கடுமையான நடவடிக்கைகளைச் சாலைப் போக்குவரத்தில் எடுத்து உயிர்களையும் உறுப்பு இழப்புகளையும் குடும்பஙகளின் துயரங்களயும் காப்பதாக! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/30/2009 2:54:00 AM

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும்,உரிமம் இல்லா ஓட்டுதலும்,அதிகாரிகள் லஞ்ச்ம் வாங்கிக்கொண்டு வாகனத்தை விட்டுவிடுவதும்,சாலை ஓரங்களை ஆக்கிரமிக்கும் நடை பாதை கடைகளும்,முறையான சிக்னல்கள்,கடக்கும் வழிகள் இல்லாதது, வாகன பராமரிப்பு சான்றிதழ் இல்லாமை , ஹைதர்காலத்து வாகனங்களும் சாலைகளில் ஓடுவது,சாலை விளக்கு இல்லாமை,பள்ளிக்கூடம்,மருத்துவமனை, மார்கெட்,குடியிருப்புகள்,குழந்தைகள் பகுதி யில் தறிகெட்ட வேகத்தில் ஓட்டுவது, இவைகளை கடுமை படுத்தினால் மேற்கானும் விபத்து ரேட்டிங்கை குறைக்கலாம்.

By முஹைதீன் - துபாய்
8/30/2009 1:38:00 AM

குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதும்,உரிமம் இல்லா ஓட்டுதலும்,அதிகாரிகள் லஞ்ச்ம் வாங்கிக்கொண்டு வாகனத்தை விட்டுவிடுவதும்,சாலை ஓரங்களை ஆக்கிரமிக்கும் நடை பாதை கடைகளும்,முறையான சிக்னல்கள்,கடக்கும் வழிகள் இல்லாதது,வாகன பராமரிப்பு சான்றிதழ் இல்லாமை ,ஹைதர்காலத்து வாகனங்களும் சாலைகளில் ஓடுவது,சாலை விளக்கு இல்லாமை,பள்ளிக்கூடம்,மருத்துவமனை,மார்கெட்,குடியிருப்புகள்,குழந்தைகள் பகுதி யில் தறிகெட்ட வேகத்தில் ஓட்டுவது, இவைகளை கடுமை படுத்தினால் மேற்கானும் விபத்து ரேட்டிங்கை குறைக்கலாம்.

By முஹைதீன் - துபாய்
8/30/2009 1:33:00 AM

So who is the the terrorist. The people that have been "branded" as terrorists OR the government and those unfit useless Bword s who are idiots with power? The biggest terrorist in the whole world is the indian governemnt

By thamizhan
8/30/2009 1:14:00 AM

My sincere appreciation for bringing out this article. The article brings out very clearly the multiple facotrs that takes out human life in no time. Obvisiouly the govermnet could make very strcit licencing processes and bring into books the violators of road safety rules. But obviously everyone knows how corrupt is every RTO office. Perhaps if RTO officers and "their agents" are honest and sincere, there is a higher probability that the road accidents can come down drastically. M.Kumaran milan

By dominic
8/30/2009 1:07:00 AM

UAE MATTUM FORIGION COUNTRYKALIL SALAI VITIKAL KATINAMA PIN PATTAPPATUVTHALUM,INKULLA ARASUKAL ATU VISAYATTIL KAVANAMAKA IRUPPUVATALUM INTA NATUKALIL VIPATTUKKAL MIKA KURAIVU.ANAWAY ITANAI NAM NATTU MATTIYA ,MANILA ARASUKALUM,NATTU MAKKALUM PINPATTUVATUTAN ITU PONTA VIPATTUKKALAI TAVIRKA MUTIYUM.TIRUTANAKA PARTU TIRUTANAKA PARTU TIRUNTAVITIL TIRUTTAI VOLIKKA MUTIYATU,TINAMANIYIN TALAYYANKAM ARUMAI ITANAI SAYAL PATUTUVATILTAN ANIYA MANITA WUYIL PALIKALAI TAVIRKA MUTIYUM.

By Ibnusalih,abudhabi.uae.
8/29/2009 11:34:00 PM

நல்ல தலையங்கம்.நம் நாட்டில் சாலைகளை எப்படி அமைக்கவேண்டும் என்ற தொழில்நுட்பமே இல்லையே.ஒரு சாலையில் அடிக்கடி விபத்து நடந்தால் நமது அதிகாரிகள் அந்த இடத்தில் ஒரு எச்சரிக்கை பலகையை மட்டும் வைத்து விடுவார்கள்.அந்த பலகையில் என்ன எழுதி இருக்கும் என்றால் எச்சரிக்கை அடிக்கடி விபத்து நடக்கும் பகுதி கவனமாக செல்லவும்என்று எழுதி இருக்கும்.இத்துடன் அதிகாரிகளின் கடமை முடிந்துவிட்டது. ஆனால் மற்ற நாடுகளில் ஒரு சாலையில் அடிக்கடி விபத்து நடந்தால் அந்த சாலையின் அமைப்பையே முற்றிலும் மாற்றி விபத்துக்கள் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்திவிடுகிறார்கள். நாமும் அதனை கடை பிடித்தால் என்ன .மனித உயிர்களுக்கு விலை என்ன என்பதை இன்னும் நாம் நிர்ணயம் செய்யவில்லை.அதனால்தான் ஆண்டுக்கு பன்னிரண்டு லட்சம் மனித உயிர்களை சாலைவிபத்து மூலம் இளக்கின்றோம்.தினமணியின் தலையங்கமாவது மனித உயிர்களுக்கு விலை கொடுக்குமா பொறுத்திருந்து பார்போம்.

By channa
8/29/2009 8:42:00 PM

Its a good article most of the person not concern about this important issue. The person who goes regularly through OMR road can easily found how the college buses (Jeppiar) never follow the road rules. In this college bus you can watch the student sitting in the food board. How this college can produce good citizens to the nation. The student can even get education through open university but discipline only from regular colleges. So road rules and first aid method should be taught in schools and colleges. How many people in India know first aid method to save life in accident time.

By T.Nagalingam
8/29/2009 7:59:00 PM

விபத்தில் இரத்தம் கொடுத்து காபாத்துவதற்கு தோதாக ஆறு வயது நிரம்பியவுடன் அனைத்து பிள்ளைகளுக்கும் இரத்தம் சோதித்து இடது கை வலது கால்களில் இரத்த குரூப் என்னவென்று பச்சை குத்தவேண்டும்.

By Tamilan
8/29/2009 7:45:00 PM

Unless and until the traffic rules are strictly observed there is no way to minimize the accidents and death toll. why don't the govt. introduce the one way traffic system. see in other countries the one way traffic system is being followed. Very few accidents are found there even though they have large no.of vehicles . Not just becoz of the traffic system. but the people. they observe the rules very strictly. we can't see a single person (who is under 18) riding a bike or car. unless they get the license they can't... And....the parking system. no vehicle will be parked out of the yellow line..if so they will be fined..But in India how many under 18 are riding bikes. how the vehicles are being parked??? And the ugliest and funniest thing is riding bike with 3 people.why these things are not being monitored strictly??. We can't see such a scene in any part of the world other than india.. there are lot many reforms to be done in this regard...

By Ramesh.M
8/29/2009 5:23:00 PM

POLICE AND RTO'S ARE HIGHLY CORRUPTIVE.THE COURTS IMPOSE A SIMPLE FINE.LAW BREAKERS DON'T BOTHER ABOUT ANYTHING.DIFFICULT TO MAKE CORRECTIVE STEPS.SELF-AWARENESS ALONE CAN SAVE US. PROF.N.P.MANICKAM,KARAIKUDI.

By MANICKAM
8/29/2009 3:36:00 PM

Really nice topic. But What use. Our lorry drivers are not obey the traffic rules, lorry owners - they want only money. They are care about anything in our nation. They (Lorry Drivers) park the lorry anywhere in the road side without any caution. They load extra kilos (overload) to earn quickly, thats why they (Driver and Owners) are not care about our nation and Traffic rules. Second thing, traffic police. They are allowing the oerloaded lorries just for INR.10 to 50 only. Why they (Traffic police) are making their level very cheap. Third thing is local municipality is not take any action against the local shops / tea stalls / small tiffin centers / cycle repair center / cheppel-shoe repairers / local beggers and more. The polices are riding at the night and they get some rupees (INR. 10 to INR 100) as a tips and they allow to do anything in the roadside / walking areas. These can be controlled by our Government only.

By Abu Rabia
8/29/2009 2:12:00 PM

Instead of Impossing speed restrictions, cut the speed levels at Manufacturing level. High speed should be permitted only to : Ambulance, Fire & Rescure Services, Police, Judiciary Services, Defense and Para Military. Why high Speed require for others?An Autoriskshaw in Chennai runs in a speed of 60-70 KMPH. but permitted speed is 30 KMPH.Why don't the speed level restricted in Mfg.level? Highway Lighting should be shared by Mega Insustries, because, they are also having social responsibilities. They should light their Operating areas. This should be made mandatory one.

By Thamizhan
8/29/2009 1:54:00 PM

first u control speed & remove road side buildings & temples in highway

By nadu nilai
8/29/2009 12:16:00 PM

arumaiyana thalaiyangam. govt buses signal madippadillai. red signal irrukkumbodhu munnllal ulla vandigalai poga solli horn adithiu torchar pannugirranga. grenn signal vilum munbey counter signalil busai ottugirargal.autoi vin attakasam sollavay venndam evargal sattathai obey pannalley accidnt kuraium..

By ponmudi
8/29/2009 7:39:00 AM

EXCELLENT HEADLINES - TRAFFIC AWARENESS OF OUR PEOPLE ESPECIALLY IN TAMILNADU IS THE WORST - NOBODY CARES THE SIGNALS PROVIED - AUTOS ARE THE MAIN CAUSE OF ROAD ACCIEDENTS - POLICE ARE NOT INSISTING THE TRAFFIC RULES RIGIDLY - POLICE PERMITS PARKING OF VEHICLES IN FRONT OF FAMOUS SHOPS IN THE MAIN ROADS -IF THIS IS PROHIBITED THE PERCENTAGE OF ACCIDENT WILL BE REDUCED.

By R.RAJENDRAN
8/29/2009 7:03:00 AM

Dear Sir,All RTOs can do awareness programme for all the drivers. In local cable TVs/TVs they can telecast this.All TVs can give free advt for this or they can allot Prime Time for this.Some thing very important

By Rangiem N Annamalai
8/29/2009 6:12:00 AM

Police are more interested in extracting money like robbers. When will they get time to implemet traffic rules

By Appu
8/29/2009 6:11:00 AM

adhering rules and regulations are a must. Ofcourse, we never adhere and in all positions we make ourselves important by citing I am close to that politicians, rowdies and dada....result in the Road Accident too come fist without adhering rules and regulations. Do not through responsibilities on others for every thing saying that they are getting bribe and so and so...First adhere rules and regulations and the see the result.

By v.gopinath
8/29/2009 6:02:00 AM

Where is the traffic rules in India my dear?.... do you know in a four way intersection without a signal - who has give way to whom?.. all we know is the signals - red means stop and green means go..and we dont even respect that..we dont even know what are the rules and how can we follow it.. politicians, who have not even crossed tamil nadu, talk 'americavai paarungal, americavukku saval vidugiren'..they know nothing the kind of discipline and systems that US have.. India can not even think of those things, leave alone implementing them.. till we vote for 500 rs and accept freebies.. india pullarasu kooda aaga mudiyadhu..

By Maaji
8/29/2009 6:01:00 AM

The worst dirtiness illiterate politicians and the mamool police co-operate and do their duty in evicting encroachments and punishing the erring road users the death toll on the roads will be highly reduced. The transport personnel is the worst corrupt people deserve to be punished for these things. In fine, stringent penalty and on the spot fine only in the solution. The platforms are meant for pedesterians only but these were already totally encroached badly by the shop keepers by giving mamool to the police to run the show. This is very much in Pondicherry. The accident figure is much much much more here because of intolerable encroachments all over the town. God only will save our India. We pray that the Central Govt., may depute a useful team to ease the traffic in Pondicherry and evict the total encroachments from our prestigious city. The local Govt is simply sleeping on the matter. Considering the size of the police officers and personnel the accidient figure in a comp

By M. Dhandapani
8/29/2009 5:49:00 AM

road facilities are very very low in India comapring to number of vehicles onthe road. NO PROPER SIGNALS , NOBODY IS FOLLOWING TRAFFIC RULES, NO SEVERE PUNISHMENT ON ROAD ACCIDENTS, POLICE DEPARTMENT IS VERY WORST IN tAMIL NADU AS THEY ARE MORE CORRUPTED PEOPLES AND THERE IS NO TRAFFICE RULES IF YOU PAY MONEY TO THE POLICE. IN INDIA RULES AND REGULATION NOT NECESSARY TO FOLLOW IF YOU GIVE BRIBE.

By MANO
8/29/2009 5:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக