வியாழன், 3 செப்டம்பர், 2009

நான் மீண்டும் வருவேன்: இளங்கோவன்



திருச்சி, செப். 2: நான் மீண்டும் வருவேன்; எப்போதென்றால், இளைஞர் காங்கிரஸ் தேர்தல் முடிந்த பிறகு திரும்பவும் வருவேன். அப்போது சூழல் மாறியிருக்கும் என்றார் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன். திருச்சியில் புதன்கிழமை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கைத் தொடக்க நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்குப் பிறகு சூழல் மாறும். கடந்த 1967 முதல் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிவருகிறோம். இனிமேல் அது முடியுமா? என்ற சந்தேகம். அதற்குத்தான் இளைஞர்கள் தேவை; அதற்காகத்தான் தேர்தல். இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்களைச் சேர்க்க ராகுல் காந்தி எடுத்த முயற்சி இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கட்டைப் பஞ்சாயத்து என்ற பெயரில் குடும்பத்தைப் பிரித்து அதில் சுகமாக வாழ்கிறார்கள் என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறும் அளவுக்கு அரசியல் மோசமாகிவிட்டது. நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நம்மைப் பார்த்து யாரும் அப்படிச் சொல்லிவிட முடியாது. தத்தமது வாரிசுகளை அரசியலில் முன்னுக்குக் கொண்டு வருவதை, துணை முதல்வராக்குவதை, எம்பியாக்குவதைப் பார்க்கிறோம். வட மாநிலங்களின் நிலவரங்களைத்தான் சொல்கிறேன். வேறு யாரையும் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளக் கூடாது. குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்; அதற்கு நான் பொறுப்பல்ல. தியாகத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். மற்றவர்கள் அரசியலை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள். இப்போது பல விஷயங்களை வெளிப்படையாகப் பேச முடியவில்லை என்றார் இளங்கோவன். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்: தமிழக காங்கிரஸ் தலைவராக இருப்பதைவிடத் தொண்டனாக இருப்பதையே விரும்புகிறேன். சுதந்திரமாக, மனம் திறந்து பேச முடிகிறது. கொட்டு விழுவதும் குறைவாக இருக்கிறது. என்றாலும், சோனியா காந்தி விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுச் செயல்படுவோம். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு ஓகோவென நல்லபடியாக இருக்கிறது. மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்தில் நிறைவேற்றப்படுகின்றன. இன்னும் மாநில அரசு சிரத்தை எடுத்து மத்திய அரசின் திட்டங்களை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். விஜயகாந்துடன் எந்தப் பகையும் இல்லை; விரோதமும் இல்லை. அவரது வாக்கு வங்கி கூடிக் கொண்டே வருகிறது என்பதைக் கவனித்து வருகிறோம் என்றார்.
கருத்துக்கள்

'' வட மாநிலங்களின் நிலவரங்களைத்தான் சொல்கிறேன். வேறு யாரையும் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளக் கூடாது'' என்று பேசும் இளங்கோவன் முதன் முதலில் நேருதான் தன் அத்தைக்குப் பதவி கொடுத்தார்; தன் மகளை அமைச்சராக்கினார்; தான் தலைமை அமைச்சராக இருக்கும் பொழுது நாட்டிற்குப்பாடுபட்ட மூத்த தலைவர்கள் பலர் இருந்தாலும் இந்திரா காந்தியைக் காங்.கட்சித் தலைவராக்கினார்;என்பன போன்ற உண்மைகளை இக்காலத்தலைமுறையினர் உணரும் வகையில் வெளிப்படையாகப் பேசுவாரா? தேர்தல் என்று வரும் பொழுது திமுக வின் காலடியைக் கழுவுபவருக்கு அதனைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது? அயல்நாட்டவர் என்னும் சிக்கல் பெரிதாக மாறியிருக்காவிட்டால் சோனியாதானே தலைமையமைச்சர் ஆகியிருப்பார். காங்.ஆட்சி அமைப்போம் என்று சொல்லாமல் காமராசர் ஆட்சி அமைப்போம் என்று சொல்வதன் மூலம் இராசாசி, பக்தவத்சலம் முதலானவர்களின் காங்.ஆட்சி மோசமானது என ஒத்துக் கொள்ளும் இவர் மீது காங்.தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/3/2009 3:07:00 AM

He should be expelled from the party immediately. He has no right to talk about DMK. This stupid person can never win any election on his own.

By Kumar
9/3/2009 12:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக