வெள்ளி, 4 செப்டம்பர், 2009




கொழும்பு, செப்.3- வவுனியா முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை அங்கிருந்து விடுவித்து அவர்களின் சொந்த இடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.""முகாம்களில் தங்கியுள்ளவர்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர். 20 ஆயிரம் பேர் தங்களது சொந்த வீடுகளில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளனர். ஆனால், அரசு அவர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் தொடர்ந்து முகாம்களில் தங்க வைத்திருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு சென்றால் வரும் பொதுத்தேர்தலில் அவர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்பதால் அதை தடுக்கும் வகையில் அரசு அவர்களை விடுவிக்க மறுத்து வருகிறது. மேலும், 6 மாதத்திற்குள் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று ஐநா சபைக்கு அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு இதன் மூலம் மீறியுள்ளது.''இவ்வாறு ரணில் தெரிவித்ததாக அந்த இணையதளங்கள் குறிப்பிட்டுள்ளன.
கருத்துக்கள்

இரணில் விக்கிரமசிங்கே போல் ஒவ்வொரு சிங்களவனும் இலங்கையில் குரல் கொடுக்கவேண்டும். இல்லையேல் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும். ஆனால், இரணிலுக்கு அவர் கட்சியிலேயே எதிர்ப்பு வலுப்பதுதான் கொடுமை. இலங்கை உயர் நீதி மன்றமும் வதைமுகாம்களில் இருந்து தமிழர்களை விடுவிக்குமாறு தெரிவித்த பின்பும் சிங்கள அரசு விடுவிக்காமல் உள்ளது. வதைமுகாம்களில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கையை உயிர் பறிப்பின் மூலம் குறைத்த பின்பு எஞ்சியவர்களைச் சிங்களர்களின் மத்தியில் சிறுபான்மை அடிமையர்களாக வாழும் வகையில் குடியேற்றவே சிங்கள அரசு திட்டமிடுகிறது. ஆகவே, தமிழ் நிலத்தைச் சிங்களக் குடியேற்றமாக மாற்றிய பின்பு இவர்களை விடுவிக்க எண்ணுகிறது. ஆனால், 1983 கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களையே இன்னும் வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ள சிங்கள அரசு இவர்களுக்கும் அதேகதியைத்தானே தரும். 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்புத் தடுப்பு முகாம்களில் ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள தமிழக-இந்திய அரசுகளும் விடுவிக்காதிருக்கும் வழிமுறைகளைத்தானே கூறும்.

வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/4/2009 2:30:00 AM

madhusudha, JJ pathi onum sollamatiya? karuna - praba division sollamatiya? praba alive or not ask nedumaran - whole confusion. mk is not sl president? he tried his best... during election busy time, sl completed everything... ltte no wise karuna expulsion lead to release of all secrets 2 sl govt....think ..

By mad
9/3/2009 10:52:00 PM

annan Ranilu.nee vaazhga. un kudumbam vaazhga.unaku irukra akkarai kooda engalta vote vangi wheelchair la ukkandhu irukravangaluku illayenu ninaikrapa than enaku alugachi alugachiya varudhu

By MADUSUDANAN,Nagapattinam
9/3/2009 9:27:00 PM

Take more steps and try to do something good . Otherwise the genocide done by Sinhalese will not be ...... God only knows. Sinhalese Army behave worst that terrorists.

By Indian
9/3/2009 8:18:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக