செவ்வாய், 2 ஜூன், 2009

ஐ.நா.வின் மெளனம் அதிர்ச்சி அளிக்கிறது

இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல்:
ஐ.நா.வின் மெüனம் அதிர்ச்சி அளிக்கிறது: சமூக சேவகி மேதா பட்கர்
தினமணி
First Published : 02 Jun 2009 03:39:00 AM IST


சென்னை, ஜூன் 1: இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை தடுக்காததது அதிர்ச்சி அளிக்கிறது என்று சமூக சேவகி மேதா பட்கர் வலியுறுத்தினார். சென்னை வந்த அவர், செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: இலங்கையிலும், இராக்கிலும் குழந்தைகள், குடிமக்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் ஐ.நா. இன்னமும் செயல்படாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னமும் குற்றுயிரும், குலையுயிருமாக வாழ்வுக்குப் போராடும் நிலையில் தவிக்கின்றனர். நாங்கள் எப்போதும் ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை ஆதரித்துள்ளோம். 3 மருத்துவர்களை விடுவிக்க வேண்டும்: இலங்கையில் வவுனியா பகுதியில் நடந்த உள்நாட்டுப் போரில், காயமுற்றுத் தவித்த தமிழர்களுக்கு சிகிச்சை அளித்ததற்காக டாக்டர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜன், சண்முகநாதன் ஆகியோர் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். இதுவரை இவர்கள் விடுவிக்கப்படவில்லை. மனிதநேய அடிப்படையில் உயிர்காக்கும் சிகிச்சை அளிப்பது டாக்டர்களின் கடமை. தங்களது கடமையை பரிவுடன் செய்த ஒரே காரணத்துக்காக இவர்களைக் கைது செய்துள்ளது மிகுந்த கண்டனத்துக்கு உரியதாகும். இவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசை, சர்வதேச சமுதாயம் நிர்பந்திக்க வேண்டும். சிறப்புப் பொருளாதார மண்டலம், எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்காக குடிசைப் பகுதி மக்களை வெளியேற்றுவதை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தங்களின் பழைய வசிப்பிடங்களிலேயே மறுவாழ்வுப் பணிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார் மேதா பட்கர்.
கருத்துக்கள்


1/2) அதிர்ச்சி அளிப்பது மட்டுமல்ல; ஐநா வும் இந்திய-இலங்கைப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தது உண்மையாகின்றது. இப்படிப்பட்ட போலி அமைப்புகளால் என்ன பயன்? அதே நேரம் மேதா போன்ற மனித நேயத் தொண்டர்கள் ஆயுதப் போராட்டங்களுக்கும் விடுதலைப் போராட்டங்களுக்குமான வேறுபாடுகளை நன்கு உணர்ந்து பொது மக்களுக்கும் விளக்க வேண்டும். பொது மக்கள் வேறு; ஒடுக்கப்பட்ட பொது மக்கள் உரிமைக்காகப் போராடும் விடுதலைப் போராளிகள் வேறு என்று தவறாக வேறுபடுத்திக் காட்டுவது பேரழிவுகளை உண்டாக்கும் கொடுங்கோலர்களுக்கு ஆதரவாக அமைந்து மேலும் பேரவலங்களை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும. (தொடர்ச்சி காண்க)

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/2/2009 9:34:00 AM
2/2) (தொடர்ச்சி) எனவே, குற்றுயிரும் குறையுயிருமாக நலிந்து மடிபவர்களுக்கும் முறையற்ற வழிகளில் அடைத்து வைத்துக் கொடுமைப் படுத்தப்படுபவர்களுக்கும் குரல் கொடுக்கும் அதே நேரம், எவ்வகை வசதிவாய்ப்பும் இன்றி அரை வயிற்று உணவுடனும் வெற்றுக் காலுடனும் குடும்பததினருக்கு ஏற்பட்ட கற்பழிப்பு, வன் கொடுமை முதலானவை ஏற்படுததிய அவல உணர்வுகளுடனும் தாய் நாட்டுமக்கள் இனியேனும் மகிழ்ச்சியைக் காண வேண்டும் என்பதற்காக விடுதலைக்காகத் தங்கள் மகிழ்ச்சியைத் தொலைத்த ஆற்றல் மிகு போ்ராளிகளான இருபால் இளைஞர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். அன்புடன் வேண்டும்

இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
6/2/2009 9:34:00 AM

Finally MKR, there is an article written by Pavai Chandran. At lease read it to understand the Tamils struggle in Sri Lanka

By MkSamy
6/2/2009 8:43:00 AM

Hi MKR, The do you know the Indian Government actively involved with the Sri Lankan government in killing around 20,000 people recently. If you don't know, sorry to say "Wake Up you frog in the well"

By MkSamy
6/2/2009 8:40:00 AM

We tamilians from tamilnadu are considered as indians, then srilankan tamils should be also considered as indians. If indian government don't respect the feelings of indians in tamilnadu, then it is a grave situation.

By dhilla
6/2/2009 7:02:00 AM

Indian PM bother about Indians, where ever they lives. Why you SL guys expect India should bother about SL. Ask SL President the same question my dear MkSamy.

By MKR
6/2/2009 5:23:00 AM

ஆமாம்மா, ஆஸ்திரேலியாவுலே நாலு பேர் தாக்கப்பட்டா, பிரதமர், வெளிநாட்டு அமைச்சர் எல்லோரும் பேசுவாங்க, 20000 தமிழன் செத்தா யாரும் கண்டுக்கவே மாட்டாங்க!

By MkSamy
6/2/2009 4:46:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக