திங்கள், 1 ஜூன், 2009

வன்னி நிலப்பரப்பில் 3,000 தடவை விமானத்தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறுகிறார் ரோஷான் குணதிலக
பிரசுரித்த திகதி : 01 Jun 2009

இலங்கை விமானப்படையினர் கடந்த 3 வருடங்களில் சுமார் 3000 தடவை விமானத்தாக்குதலை வன்னிப் பெருநிலப்பரப்பில் நடத்தியிருப்பதாகவும், இனம் காணப்பட்டதாகக் கூறப்படும் இடங்களை தாம் தாக்கியதாகவும் விமானப்படைத் தளபதி மார்ஷல் ரோஷான் குணதிலக கூறியுள்ளார்.

இலங்கையில் இருந்து வெளிவரும் த ஜலண்ட் என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பாக்கிஸ்தான் விமானிகளே விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்த உதவினர் என இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தெரிவித்ததை முற்றாக மறுத்த அவர் வெளிநாட்டு விமானிகள் இலங்கை போர்விமானத்தைச் செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் சில காலத்துக்கு முன்னர் MI-24 ரக உலங்கு வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் தாக்கியழிக்கப்பட்டதாகவும் அதில் விமானியாக இருந்த ரஷ்ய விமானி கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை அரசு முனெடுக்கும் போது இலங்கையின் போர் விமானங்களை வெளிநாட்டவகள் செலுத்தினரா என்ற சந்தேகம் பலராலும் முன்வைக்கப்படுவது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக